தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்சென்னை, திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களில் நாளை (ஜூன் 29) மழைக்கு வாய்ப்பு!வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
/

கோலிவுட் ஸ்டூடியோ!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, மம்மூட்டி, ஸ்ரீலீலா நடிப்பில் வெளியாக உள்ள படம் 'ஓம்'.

News image
Updated On :28 ஜூன் 2026, 4:05 pm IST

தனுஷ் படங்களிலேயே அதிக பட்ஜெட் - 'ஓம்' ரகசியம் பகிரும் ராஜ்குமார் பெரியசாமி!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, மம்மூட்டி, ஸ்ரீலீலா நடிப்பில் வெளியாக உள்ள படம் 'ஓம்'. சாய் அபயங்கர் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் அறிவிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய ராஜ்குமார் பெரியசாமி, 'ஓம் என்பது ஆன்மிகம் சம்பந்தப்பட்ட தலைப்பு மாதிரி தெரிந்தாலும், இது உணர்வுபூர்வமான கதை. படத்தின் தலைப்புக்கும், கதைக்கும் பல லேயர்களில் அர்த்தம் இருக்கிறது. அதற்குத் தற்போது விளக்கம் கொடுக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்.

65 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டோம். தனுஷ் நடித்த படங்களில் இந்தப் படம் தான் அதிக பட்ஜெட்டில் தயார் ஆகிறது. அதற்கு நடிகர்கள், கதைக்களம் எனப் பல காரணங்கள் இருக்கிறது. தவிர, சினிமா பிசினஸூம் முன்பை விட அதிகரித்திருக்கிறது. கார்த்திகேயன் என்ற கேரக்டரில் மம்முட்டி நடிக்கிறார்.

மற்றவர்களின் கேரக்டர்களை விரைவில் அறிவிப்போம். சூழ்நிலை காரணமாக மம்முட்டியை ஆறு மாதங்களாக என்னால் சந்திக்க முடியவில்லை. ஒருநாள் சென்னை வந்தவர் என்னிடம் கதை கேட்டார். அதில் அவருக்கு இருக்கக்கூடிய சந்தேகங்களையும் கேட்டார். உடனே நடிக்க ஓகே சொல்லிவிட்டார்.

தனுஷ், மம்முட்டி என இருவரும் தேசிய விருது பெற்றவர்கள். அவர்கள் தங்கள் கேரக்டரை உணர்ந்து அழகாக நடித்தனர். ஸ்ரீலீலா சம்பந்தப்பட்ட காட்சிகளை இப்போது எடுத்து வருகிறேன். அவர் நடனத்தில் மட்டுமல்ல, நடிப்பிலும் சிறந்தவர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதியில் நடைபெற்ற செம்மரக் கடத்தல், என்கவுண்டர் சம்பந்தப்பட்ட கதையா எனக் கேட்கிறார்கள். டீசரில் சில விஷயங்கள் காண்பித்து இருக்கிறோம். சில உண்மைச் சம்பவங்கள் பாதிப்பில் இந்தக் கதை உருவாகி இருக்கிறது.

நான் இயக்கிய 'அமரன்' ஒரு பயோகிராபி. 'ஓம்' அந்தவகைக் கதைதான். உண்மைச் சம்பவங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், அதை எப்படி திரைக்கதையாகக் கொடுக்கிறோம் என்பதில்தான் வெற்றி இருக்கிறது.

தமிழர்களை எந்த இடத்திலும் தவறாகக் காண்பிக்கவில்லை. திருவண்ணாமலைக்கும் கதைக்கும் தொடர்பு இருக்கிறது. தனுஷ் கேரக்டர் பெயர் அண்ணாமலையா என்பதை இப்போது சொல்ல முடியாது' என்று பேசியிருக்கிறார்.

Story image

ஒரு காட்சிக்கு ரூ.1.2 கோடி செலவு - ஐஸ்வர்யா லக்ஷ்மி!

விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் 2022-ஆம் ஆண்டு வெளியான 'கட்டா குஸ்தி' திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் இரண்டாம் பாகத்தையும் முடித்து, இப்போது ரிலீஸூக்கும் தயார் செய்துவிட்டனர். ஜூலை 3-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்துக்காக விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட படக்குழுவினர் பட விளம்பரம் தொடர்பாகப் பேட்டியளித்திருக்கிறார்கள்.

அதில், 'கட்டா குஸ்தி' படத்தின் இண்டர்வெல் காட்சிக்கு 1.2 கோடி செலவு செய்ததாக ஐஸ்வர்யா லக்ஷ்மி குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அவர், 'கட்டா குஸ்தி'யின் முதல் பாகத்தின் இண்டர்வெல் பகுதியில் எனக்கு மாஸ் காட்சியை வச்சிருப்பாங்க. அந்தக் காட்சியைப் பற்றிச் சொல்லும்போதுதான் எனக்கு இன்னொரு விஷயமும் நினைவுக்கு வருது.

விஷ்ணு விஷால் சார் நடிச்ச, தயாரித்த படங்களில் அதிகம் செலவழிச்சு எடுத்த சீன் அந்த இண்டர்வெல் காட்சிதான். கிட்டத்தட்ட அந்தக் காட்சிக்கு மட்டும் 1.2 கோடி செலவு பண்ணினாங்க. அது ஹீரோயினிக்காக எடுக்கப்பட்டது. அந்தக் காட்சியை நானும் சின்னதாகத்தான் நினைச்சுட்டு இருந்தேன். ஆனால், இயக்குநர் செல்லா அய்யாவு சாரும், விஷ்ணு விஷால் சாரும் அந்த சீனை ரொம்ப பெருசா மாத்திட்டாங்க.

திரையரங்குகளில் அந்தக் காட்சிக்கு பயங்கர க்ளாப்ஸ் கிடைச்சது. நான் வெறும் கதையை மட்டும் கேட்டேன். எனக்குப் பிடிச்சிருந்தது நடிச்சேன். இவங்களாலதான் காட்சிகள் இன்னும் பெரியதாக மாறுச்சு' எனப் பகிர்ந்து கொண்டார்.

Story image

'நூறு சாமி' பட வரவேற்பு - கண் கலங்கிய ஸ்வாசிகா!

இயக்குநர் சசி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'நூறு சாமி' படத்துக்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்திருக்கின்றன. விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷா எனப் பலரும் நடித்திருக்கும் இப்படத்துக்கு பாலாஜி ஸ்ரீராம் என்கிற புதுமுக இசையமைப்பாளர் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்துக்குக் கிடைத்து வரும் வரவேற்புக்கும், தன்னுடைய நடிப்புக்குக் கிடைத்து வரும் பாராட்டுகளுக்கும் நன்றி தெரிவித்து நடிகை ஸ்வாசிகா கண்கலங்கியவாறு ஒரு காணொலியில் பேசி, அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அதில், 'எல்லாத் தமிழ் மக்களுக்கும் வணக்கம். இந்த நிமிஷத்துல நன்றியைத் தவிர வேற எதுவும் எனக்குச் சொல்ல வரல. அதை எப்படி வார்த்தையால உங்ககிட்ட விவரிக்கிறதுன்னும் தெரியல. என் மேல அவ்வளவு பாசம் வச்சிருக்கீங்க. 'லப்பர் பந்து' தொடங்கி நான் நடிச்ச எல்லாப் படங்களுக்கும் எனக்கு அந்த சப்போர்ட் கிடைச்சது.

இப்போ 'நூறு சாமி' படத்துக்கு நீங்க கொடுக்கிற அன்பு ரொம்ப பெரியது. எப்படி என்னை நம்பி இவ்வளவு பேர் தியேட்டருக்கு வந்தீங்கன்னு உண்மையாகவே எனக்குத் தெரியல. சசி சார் எப்படி என் மேல நம்பிக்கை வச்சு இவ்வளவு பெரிய கேரக்டர் கொடுத்தாரு, விஜய் ஆண்டனி சார் அதுக்கு எப்படி ஒத்துக்கிட்டாருன்னும் தெரியல. எல்லாமே எனக்கு ஒரு கனவு மாதிரி ஃபீல் ஆகுது. நான் தாங்கிப் பிடிக்கிற, நான் ஹீரோயினா நடிச்ச ஒரு படம் இத்தனை தியேட்டர்கள்ல ஓடுது.

அதை இவ்வளவு பேர் ரசிச்சுப் பார்க்கிறாங்க. நான் ஒரு நாள் கூட இதைக் கனவு காணாம தூங்குனதே இல்லை. இன்னைக்கு அதெல்லாமே நிஜமாகியிருக்கு. தமிழ் ஆடியன்ஸ் எனக்குப் பெரிய சப்போர்ட் கொடுக்கிறாங்க. இதுக்கு நன்றி என ஒரு வார்த்தையில முடிச்சிட முடியாது.

என்னுடைய ஆக்சிஜனே இப்போ நீங்கதான். நீங்க கொடுக்கிற இந்த அன்புக்கு நான் எக்காலத்துக்கும் கடன்பட்டிருக்கேன். இனிமேல் இன்னும் பொறுப்போட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பேன். 'இந்தப் படத்துக்கு நீங்கதான் ஹீரோ'ன்னு சொல்லி இப்போ நிறையப் பேர் எனக்குக் கால் பண்றாங்க, மெசேஜ் அனுப்புறாங்க. உங்க எல்லாருக்குமே என் மனமார்ந்த நன்றிகள். 'நூறு சாமி' என் வாழ்க்கையில ரொம்ப முக்கியமான ஒரு படம். இந்தப் படம் பேசும் விஷயங்களும் ரொம்ப முக்கியமானது. அப்படிப்பட்ட ஒரு படத்துக்குப் பெரிய சப்போர்ட் கொடுத்திருக்கீங்க.

ஒரு நடிகையாக எனக்கு இதே மாதிரி எப்போதும் உங்க பாசத்தைக் கொடுங்க. நான் கண்டிப்பா இன்னும் கடினமாக உழைச்சு, உங்களை ஏமாற்றாம நிறைய நல்ல கேரக்டர்கள்ல நடிப்பேன்' எனக் கண்கலங்கியவாறு பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.