FOLLOW US

ON GOOGLE DISCOVER

திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

கோலிவுட் ஸ்டூடியோ!

சென்னை 28' திரைப்படம் வெளியாகி, 20 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2026, 8:25 pm IST

20 ஆண்டுகளை பூர்த்தி செய்த வெங்கட் பிரபு!

'சென்னை 28' திரைப்படம் வெளியாகி, 20 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இது இயக்குநர் வெங்கட் பிரபுவுக்குச் சினிமாவில் 20-ஆம் ஆண்டு. அவர் சினிமாவில் எதிர்கொண்ட அனுபவங்கள் குறித்த சமூக வலைதளப் பதிவில், ' எஸ்.பி.பி. சாரின் ஆசிகளாலும், சகோதரர் சரணின் நம்பிக்கையாலும் மட்டுமே இது சாத்தியமானது.

அந்த ஒரு வாய்ப்பு என் வாழ்க்கையையே மாற்றியமைத்தது. பயணத்தில் ஒருபோதும் செய்ததையே மீண்டும் செய்யக் கூடாது என்பதை நான் நோக்கமாகவே வைத்திருக்கிறேன். ஒவ்வொரு சினிமாவும் ஒரு புதிய வகை, புதிய கதை சொல்லும் பாணி, ஒரு புதிய சவாலை எதிர்கொள்வதற்கான வாய்ப்பாகவே எனக்கு அமைந்தது.

சில முயற்சிகளுக்கு உடனடி அன்பும் வரவேற்பும் கிடைத்தன; சில படங்கள் காலப்போக்கில் ரசிக்கப்பட்டன; சில படங்கள் பாடங்களைக் கற்றுக்கொடுத்தன. தொடர்ந்து புதிய முயற்சிகளைச் செய்வதற்கான தைரியம் எனக்குக் கிடைத்திருக்கிறது என்றால், அதற்கு இத்தனை ஆண்டுகளாக நீங்கள் என் மீது காட்டி வரும் அளவற்ற அன்பும் நம்பிக்கையும்தான் காரணம்.

இந்தப் பயணத்தின் அங்கமாக இருந்த ஒவ்வொருவருக்கும், ரசிகர்களுக்கும் என் நன்றிகள். இன்னும் பல ஆண்டுகள், ஒன்றாகப் பயணிப்போம்!' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Story image

சாய் பல்லவி பற்றி பாலிவுட் நடிகை!

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் உருவாகிவரும் 'ராமாயணா' படத்தின் முதல் பாகத்தை இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்குத் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டு வருகிறார்கள். அண்மையில் பிரத்யேக ட்ரெய்லர் திரையிடல் நிகழ்வு நடைபெற்றது.

சாய் பல்லவி சீதையாக நடிப்பது பற்றிப் புகழ் பெற்ற ராமாயணம் (ஹிந்தியில் வெளிவந்த தொடர் இது) தொலைக்காட்சி தொடரில் சீதையாக நடித்திருந்த தீபிகா சிக்லியா பேசியிருக்கிறார்.

அவர், 'சாய் பல்லவி மிகவும் அற்புதமான கலைஞர். சீதையாக அவர் திரையில் எப்படித் தெரிவார் என்பதை திரையில் பார்த்தே முடிவு செய்ய முடியும். ராமாயணத்தில் சீதையின் தோற்றம் குறித்து பாதாம் போன்ற கண்கள், குறிப்பிட்ட உயரம், கூந்தல், மேனி நிறம் என விவரிக்கப்பட்டுள்ளது.

சுருள் முடி கொண்ட சீதையைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. கரோனா காலத்தில் எங்களது பழைய ராமாயணம் சீரியல் மீண்டும் ஒளிபரப்பப்பட்டு, இன்றைய புதிய தலைமுறையினரின் மனதிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், அந்தப் பிம்பத்தை மக்கள் மனதிலிருந்து எளிதில் அழித்துவிட முடியாது' எனக் கூறியுள்ளார்.

வறுமை நாள்களை நினைவு கூர்ந்த நவாசுதீன் சித்திக்!

'கேங்ஸ் ஆஃப் வசைப்பூர்' படத்தில் பெரிய வரவேற்பைப் பெற்ற நடிகர் நவாசுதீன் சித்திக், பாலிவுட்டில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். அண்மையில் அவர் அளித்த பேட்டியில், 'ஆரம்பக் காலத்தில் நமக்குள்ளே ஒரு பெரும் தன்னம்பிக்கையும், நடிப்பின் மீது ஒரு தீராத ஆர்வமும் இருக்கும்.

அடுத்தடுத்து எதிர்கொள்ளும் தோல்விகள், தன்னம்பிக்கையை மெல்ல மெல்ல சிதைக்கத் தொடங்கும். நம் மீது நமக்கே சந்தேகம் வரத் தொடங்கும். அந்த மனநிலையைக் கடந்து வந்துள்ளேன். ஒவ்வொரு முறையும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கும்போது, அது கடைசி நேரத்தில் கைநழுவிப் போகும்.

10 ஆண்டுகளாக என்னை துரதிர்ஷ்டசாலியாகவே நான் கருதிக்கொண்டிருந்தேன். அந்தத் தருணங்களில் நடுரோட்டில் நின்று அழுதும் இருக்கிறேன். அந்த வறுமை நிறைந்த நாள்களில், ஒரு நாளைக்கு மூன்று வேளையும் பிஸ்கட்டை மட்டுமே சாப்பிட்டிருக்கிறேன். அன்று நான் அனுபவித்த அந்தத் துயரம் இன்றும் என் மனதின் அப்படியே இருக்கிறது' எனப் பகிர்ந்திருக்கிறார்.

Story image

மகுடம் சூடுவேன்! - அஞ்சலி

நடிகர் விஷால் இயக்கி, நடித்திருக்கும் 'மகுடம்' திரைப்படம் வெளியாகியுள்ளது. துஷாரா விஜயன், அஞ்சலி உள்ளிட்டோரும் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

பட புரமோஷன் நிகழ்வில் பேசிய அஞ்சலி, 'விஷால் முதன்முறையாக இயக்கியிருக்கிறார். ஒருவரது முதல் இயக்கம், முதல் தயாரிப்பு அல்லது முதல் திரைப்படம் என்பவை எப்போதுமே முதல் குழந்தையைப் போல் சிறப்புக் கவனத்தைப் பெறும். நான் ஏற்று நடித்திருக்கும் 'அன்னபூரணி' என்னும் கதாபாத்திரத்தை மிக அழகாக உருவாக்கியிருக்கிறார்.

தமிழில் முதன்முறையாக நான் சண்டைக்காட்சிகளிலும் நடித்திருக்கிறேன். ஏற்கெனவே விஷால், எனது கூட்டணியில் வெளியான 'நச்சிந்தி மச்சானே' பாடல் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஜி.வி. பிரகாஷின் இசையில் ஏற்கெனவே வெளியான பாடல்களும், 'லிங்கா' பாடலும் மிகவும் நன்றாக வந்திருக்கின்றன. ரசிகர்களுக்கு ஒரு முழுமையான கமர்ஷியல் திரைப்படத்தைப் பார்த்த திருப்தி கண்டிப்பாக இருக்கும். விஷாலின் முதல் இயக்கப் படம் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.