நடிகை சாய் பல்லவி ராமாயணா திரைப்படத்தில் சீதையாக நடித்தது குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் நித்திஷ் திவாரி இயக்கத்தில் நடிகர்கள் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் ராமாயணம் உருவாகி வருகிறது. இரண்டு பாகமாக உருவாகும் படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதன் வெளியீட்டு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், தில்லியில் ராமாயணா திரைப்பட நிகழ்வில் சிறப்பு டிரைலர் வெளியிடப்பட்டது. இதில், பாலிவுட்டின் முன்னணி பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் பேசிய நடிகை சாய் பல்லவி, “ராமாயணா திரைப்படத்தில் சீதை மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல. காரணம், கடவுளாக நடிப்பது என்றால் அது சாதாரணமான விஷயம் கிடையாது. கண்டிப்பாக மனதையும் ஆன்மாவையும் அதற்காக முழுமையாக ஒப்படைத்தால் மட்டுமே சிறந்த நடிப்பு வெளிப்படும்.
சீதையாக நடிக்க தேர்ந்தெடுக்கப்படுவேன் என நினைக்கவில்லை; நான் அசீர்வதிக்கப்பட்டதாகவே உணர்கிறேன். இக்கதாபாத்திரத்தில் நடிக்கும்போது அமைதியாக அமர்ந்து தியானிப்பேன். அப்போது, “சீதாம்மா... என் மூலமாக நீங்கள் நடிக்கிறீர்கள். என்னிடமிருந்து என்ன வெளிப்பட்டாலும் அது நீங்கள் இப்படத்திற்காக விரும்பியதாகவே இருக்கும்” எனச் வேண்டிக்கொண்டேன். மேலும், படப்பிடிப்பில் மனதை நேர்மறையாகவும் தெளிவாகவும் வைத்துக்கொண்டது என் சிறந்த நடிப்பை முன்வைக்கவும் சரியாக இருந்தது.” எனக் கூறியுள்ளார்.
நடிகை சாய் பல்லவி நாயகியாக நடித்த அமரன் திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
Actress Sai Pallavi has spoken about playing the role of Sita in the movie Ramayana.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










