தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

அமரன் படத்துக்கு 3 தேசிய விருதுகள் அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்துக்கு 3 தேசிய விருதுகள்.....

News image

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி

Updated On :18 ஜூலை 2026, 6:33 pm IST

சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்துக்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

72ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்துக்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த இயக்குநருக்கான விருது ராஜ்குமார் பெரியசாமி, சிறந்த பின்னணி இசைக்கான விருது ஜி.வி.பிரகாஷ் குமார், சிறந்த படத்தொகுப்புக்கான விருது ஆர். கலைவண்ணனுக்கு கிடைத்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'அமரன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாக 2024ஆம் அண்டு அக்டோபர் 31ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரித்திருந்தார். மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். உலகளவில் இத்திரைப்படம் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. மேலும் இப்படம் ஓ.டி.டி.யிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இந்த படத்துக்கு தேசிய விருதுகளும் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

3 National Awards have been announced for the movie Amaran starring Sivakarthikeyan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.