கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டிஉதவித்தொகையை வழங்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது தவெக அரசு: கனிமொழிமுதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

மகாராஜா படத்துக்கு 2 தேசிய விருதுகள்

விஜய்சேதுபதியின் மகாராஜா படத்துக்கு 2 தேசிய விருதுகள் அறிவிப்பு...

News image

மகாராஜா போஸ்டர்

Updated On :18 ஜூலை 2026, 7:06 pm IST

விஜய்சேதுபதியின் மகாராஜா படத்துக்கு 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

72ஆவது தேசிய விருதுகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன. அதில், விஜய்சேதுபதியின் மகாராஜா திரைப்படம் 2 தேசிய விருதுகளை வென்று அசத்தியுள்ளது. சிறந்த துணை நடிகை பிரிவில் சச்சனா நமிதாஸும், சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான பிரிவில் அனல் அரசும் இவ்விருதினை வென்றுள்ளனர்.

நடிகர் விஜய் சேதுபதியின் 50ஆவது திரைப்படமாக வெளிவந்த திரைப்படம்தான் மகாராஜா. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஒரு குப்பைத்தொட்டியை கருப்பொருளாக கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது.

சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இணைந்து படத்தை தயாரித்து இருந்தனர். படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருந்தார். படத்தில், விஜய் சேதுபதியுடன் பாரதிராஜா, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி நட்ராஜ் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

பாக்ஸ் ஆஃபிஸில் 100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்த இப்படம், ஓடிடியிலும் வெளியாகி பெரும்பாலோனோரின் விருப்பத் திரைப்படமாக அமைந்திருந்தது. மேலும் சீனாவில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட மகாராஜா திரைப்படம் அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Summary

Vijay Sethupathi's Maharaja movie has received 2 National Awards.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.