நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

கோலிவுட் ஸ்டூடியோ

ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, ஹிந்தி என அடுத்தடுத்து பிஸியாக நடித்து வருகிறார்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2026, 7:29 pm IST

சொந்த அடையாளமே அழகு - ராஷ்மிகா!

ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, ஹிந்தி என அடுத்தடுத்து பிஸியாக நடித்து வருகிறார்.

பாலிவுட்டிலும் பிரபலமான நாயகியாக உருவெடுத்திருக்கிறார் . பாலிவுட்டில் இத்தகைய வெற்றி கிடைத்ததற்கான காரணம் பற்றி அண்மையில் நிகழ்வு ஒன்றில் பேசியிருக்கிறார் ராஷ்மிகா.

அதில், தென்னிந்திய சினிமாவில் இருந்து முற்றிலும் வேறுபட்ட பாலிவுட் திரையுலகுக்குச் சென்றபோது, வழக்கமான எந்தவொரு அமைப்புக்குள்ளும் சிக்காமல் இயங்கிய தருணமே

என்னைப் பொறுத்தவரை மிகவும் சிறப்பானது. மற்றவர்களிடமிருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டும் விஷயங்களே நமக்கு மிகப்பெரிய பலமாக மாறுகின்றன என்பதை உணர்கிறேன்.

மேலும், ஃபேஷனைப் பொருத்தவரை எனக்கு கம்போர்ட்தான் முதன்மையானது. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதற்காக வாழாமல், தனக்கே உரித்தான பாணியில் சொந்த அடையாளத்தை வெளிப்படுத்துவதே உண்மையான அழகு என்று தெரிவித்துள்ளார்.

ஹீரோவாக நடிப்பதில் பிடிவாதம் - பாரி இளவழகன்

பாரி இளவழகன் எழுதி, இயக்கியிருக்கும் அன்பே டயானா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தப் படத்தில் நடிகை ரோஜா, ரம்யா ரங்கநாதன், சேத்தன், பரிதாபங்கள் கோபி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. அதில் இயக்குநர் பாரி இளவழகன் பேசுகையில், வாழ்க்கையில் எல்லோரிடமும் எல்லாம் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், நன்றியுணர்வு மட்டும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். நான் இந்த மேடையில் நிற்பதற்குக் காரணம் நான் மட்டுமல்ல. இந்த அரங்கில் இருப்பவர்களும், இங்கு இல்லாமல் வெளியே இருந்து இந்தப் படத்துக்காக உழைத்த ஆயிரக்கணக்கானவர்களும்தான்.

இந்த மேடையில் நடிகர் விஜய் சேதுபதி சாருக்கு ஒரு சிறப்பு

நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷிடம் என்னைப் பற்றி நல்லவிதமாகப் பேசியிருந்தார். அந்த நம்பிக்கைக்கும், ஊக்கத்துக்கும் விஜய் சேதுபதி சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள் என்றார்.

Story image

தட்டிவிடாதீர்கள்... தட்டிக் கொடுங்கள்...' - விமர்சனங்களுக்கு தனுஷ் பதிலடி!

அண்மையில், 2024-ஆம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான 72- ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதில் தனுஷ் இயக்கி நடித்த ராயன்' படத்துக்குச் சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வருடத்தில் நிறைய நல்ல படங்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், ராயன்' படத்துக்கு தேசிய விருதா?' என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் ஜூலை 26-ஆம் தேதி ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தனுஷ், ராயன்' படத்துக்கு தேசிய விருது கிடைத்தது குறித்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்திருக்கிறார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், அது ஒரு கனாக் காலம்' நடித்த போது சின்ன பையனாக இருந்தேன். தேசிய விருது கட்டாயம் கிடைக்கும் என்றார்கள். நானும் ஆசையோடு இருந்தேன். ஆனால், விருது கிடைக்கவில்லை. புதுப்பேட்டை'க்கு விருது கிடைக்கும் என்று எல்லாரும் சொன்னார்கள். கிடைக்கவில்லை.

மயக்கம் என்ன', 3', மரியான்', வடசென்னை', கர்ணன்' எனப் பல படங்களுக்கும் விருது கிடைக்கவில்லை. அப்போதெல்லாம் யாரும் பேசவில்லை. இப்போது விமர்சனம் செய்கிறார்கள். தட்டிவிடாதீர்கள்... தட்டிக் கொடுங்கள். அஜித் சார் சொன்ன மாதிரி தான், நீயா தோத்துட்டன்னு ஒத்துக்குற வரைக்கும் உன்னை யாராலும் தோற்கடிக்கமுடியாது என்று விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்திருக்கிறார் தனுஷ்.

டெல்டா அசோக்

பிரஜாபதி' பட விழாவில் பேரவைத் தலைவர்!

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை உலகத் தரத்தில் திரைப்படமாகப் பதிவு செய்யும் முயற்சியாக உருவாகி வருகிறது, பிரஜாபதி'.

இந்தத் திரைப்படத்தில் நடித்திருப்பவர்கள் திரைப்படத் துறையைச் சேர்ந்த தொழில்முறை நடிகர்கள் அல்ல; கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பிரஜாபதி' நாடகத்தில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வரும் கலைஞர்களே இதில் நடித்திருப்பது தனிச்சிறப்பு. இப்படத்தை ரூபர்ட் ரகுநாதன் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, தமிழக சட்டமன்றப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் அவர் பேசும்போது, இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒரு வரத்தைக் கொடுக்கிறார். ஆனால், எதிர்காலம் குறித்த பயம், குடும்பச் சூழ்நிலை அல்லது தைரியக் குறைவு காரணமாக பலர் அந்த வரத்தைப் பயன்படுத்தாமல் ஒதுங்கி விடுகிறார்கள்.

இறைவனால் ஆகாத காரியம் எதுவுமில்லை. பலருடைய வாழ்க்கையில் அதை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். அதே நம்பிக்கையுடன் இந்த முயற்சியும் வெற்றி பெறும் என்று உறுதியாக நம்புகிறேன். இந்தப் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.