மும்முறைத் தாண்டுதல் போட்டியில் ஆசியாவிலேயே முதலாவதாக வந்திருக்கும் சாதனா, 'ஒலிம்பிக், உலகத் தடகள சாம்பியன் போட்டியில் பதக்கம் வெல்வதே இலக்கு' என்கிறார்.
சென்னை எஸ்.ஆர்.எம். ஐ.எஸ்.டி.யில் (வடபழனி வளாகம்) பி.எஸ்ஸி. உளவியல் முதலாம் ஆண்டு பயின்று வரும் இவர், மும்முறைத் தாண்டுதல், நீளம் தாண்டுதலில் சிறந்து விளங்கி வருகிறார். தடகளத்தில் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கத் தொடங்கியுள்ள இவரது தந்தை ரவியும் முன்னாள் தடகள வீரர். மும்முறைத் தாண்டுதலில் மாநில அணியில் ரவி இடம் பெற்றிருந்தார்.
ஜூனியர் யு-20 பிரிவில் மும்முறைத் தாண்டுதலில் ஆசிய, இந்திய அளவில் நம்பர் 1 வீராங்கனை என்ற சாதனை படைத்துள்ள சாதனா, உலகத் தரவரிசையில் 12-ஆம் இடத்தைப் பெற்றுள்ளார்.
தனது சாதனை பயணம் குறித்து சாதனா கூறியதாவது:
'தடகளத்தில் எனக்குச் சிறுவயதிலேயே ஆர்வம் ஏற்பட்டது. நீளம் தாண்டுதல், மும்முறைத் தாண்டுதலில் ஐந்தாம் வகுப்பு முதலே பயிற்சி பெற்று வருகிறேன். சப் ஜூனியர், ஜூனியர் பிரிவுகளில் மாநில, தேசிய அளவில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளேன்.
2025-ஆம் ஆண்டு எனக்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்தது. உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற ஜூனியர் பெடரேஷன் சாம்பியன் போட்டியில் 12.75 மீ. குதித்து மும்முறைத் தாண்டுதலில் தங்கம் வென்றேன். கர்நாடக மாநிலத்துக்கு உள்பட்ட மங்களூரில் நடைபெற்ற அகில இந்தியப் பல்கலைக்கழகங்கள் தடகளப் போட்டியில் 12.86 மீ. குதித்து வெள்ளி வென்றேன். ஒரே நேரத்தில் நீளம் தாண்டுதல், மும்முறைத் தாண்டுதலில் பயிற்சி பெறுகிறேன். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சர்வதேசப் பயிற்சியாளர் பெட்ரோஷிடம் பயிற்சி பெறுகிறேன். விளையாட்டு உபகரணங்களை வாங்கவும், வெளியூர் போட்டிகளுக்குப் பயணிக்கவும் தேவையான உதவிகளை எஸ்டிஏடி செய்து வருகிறது. கல்வியில் எஸ்.ஆர்.எம். ஐ.எஸ்.டி. நிர்வாகத்தின் பக்கபலமாக உள்ளனர். கேலோ இந்தியா போட்டியிலும் பட்டம் வென்றேன்.
ஆசிய, இந்திய அளவில் நம்பர் 1 அந்தஸ்து பெற்றது மகிழ்ச்சி. இந்தியா சார்பில் ஒலிம்பிக், உலக சாம்பியன் போட்டிகளில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது எனது இலக்கு ஆகும். நான் ரோல்மாடலாகக் கருதுவது வெனிசுலாவைச் சேர்ந்த யுலிமர் ரோஜாஸ். அவர் 4 முறை உலக சாம்பியன், 2020 ஒலிம்பிக் சாம்பியன் பட்டங்களை வென்றவர்.
எனக்கு எனது தந்தை ரவி, வங்கி உயர் அலுவலராகப் பணியாற்றும் தாய் ஷீலா, சகோதரர் ரஷ்வந்த் உள்ளிட்ட உறவினர்கள் உறுதுணையாக இருக்கின்றனர்' என்கிறார் சாதனா.
தடகளத்தின் சிறப்பு
தடகளத்தில் ஜம்ப்ஸ் பிரிவில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறைத் தாண்டுதல், போல் வால்ட் போன்றவை அடங்கும். குறிப்பாக, தடகளத்தில் 'ஒலிம்பிக் சாம்பியன்' என்றால் அதற்கான மதிப்பே தனியாகும். ஜமைக்காவின் உசேன் போல்ட், க்ரீபித் ஜாய்னர், இந்தியாவின் பி.டி. உஷா, ஷைனி வில்சன், அஞ்சு பாபி ஜார்ஜ், நீரஜ் சோப்ரா உள்ளிட்டோர் தடகளத்தில் தனி முத்திரை பதித்துள்ளனர். ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா ஒரே ஆண்டில் உலக, ஒலிம்பிக் சாம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்தார்.
ஆசிய கண்டத்தில் சீனா, ஜப்பான், கொரியாவுக்கு அடுத்து, தடகளத்தில் இந்தியா சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. தொடர் ஓட்டம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், ஜம்ப்ஸ் எனப்படும் நீளம் தாண்டுதல், மும்முறைத் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதலிலும் இந்தியர்கள் பதக்கங்களைக் குவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆதித்யா அதிரடி வெற்றி: காலிறுதிக்கு தகுதி

ஆசிய மகளிா் கால்பந்து: ஜப்பான் சாம்பியன்

மும்முறை தாண்டுதலில் ஆசிய அளவில் முதலிடம்: எஸ்ஆா்எம் மாணவி சாதனை

தடகளத்தில் சாதனை: மாணவிக்கு பாராட்டு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

