விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

உலகப் போட்டிகளில் வெல்வதே லட்சியம்!

'கராத்தே, நடனப் போட்டிகளில் உலக அளவில் வென்று சாதனைகளைப் படைப்பதையே லட்சியமாகக் கொண்டுள்ளேன்' என்கிறார் மோ.ரோஷன்.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

'கராத்தே, நடனப் போட்டிகளில் உலக அளவில் வென்று சாதனைகளைப் படைப்பதையே லட்சியமாகக் கொண்டுள்ளேன்' என்கிறார் மோ.ரோஷன்.

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட வந்தவாசி அருகேயுள்ள கீழ்க்கொடுங்காலூர்

கிராமத்தைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் கே.மோகன் - சுதா தம்பதியின் மகன் மோ.ரோஷன். இவர் கடைசிகுளத்தில் உள்ளசுவாமி அபேனநந்தா

வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவருகிறார்.

கராத்தே போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளைப் பெற்றுவரும் அவரிடம் பேசியபோது:

'சிறுவயதிலேயே கராத்தே பயிற்சியில் சேர்ந்தேன். கரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டபோதும், நேரத்தை வீணாக்காமல் கராத்தே பயிற்சிகளை மேற்கொண்டேன். மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வருகிறேன்.

திண்டிவனத்தில் அண்மையில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான ஹிக்வானா ஹிட்டோரியோ கராத்தே போட்டியில் முதலிடத்தைப் பெற்று, ஓய்வுபெற்ற ஏ.டி.எஸ்.பி. ஜவஹர்லாலிடம் பரிசு பெற்றேன்.

தொடர்ந்து கராத்தே பயிற்சி பெற்று, பிளாக் பெல்ட் பெற விரும்புகிறேன். கராத்தே போட்டிகளில் பெரிய அளவில் சாதனை படைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் நடனத்திலும் ஆர்வம்

உள்ளதால், அந்தப் பயிற்சியையும் மேற்கொள்கிறேன். எதிர்காலத்தில் மென்பொருள், செயற்கை நுண்ணறிவுத் துறைகளில் படித்து, சாதிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்' என்கிறார் ரோஷன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.