யூடியூபில் சரித்திர சாதனை!
யூடியூபர் ராஜ் ஷாமானியின் ‘Figuring Out with Raj Shaman' என்ற யூ டியூப் சேனலின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 2.20 கோடியைக் கடந்து, உலகிலேயே அதிக சந்தாதாரர்களைக் கொண்டதாக மாறியுள்ளது.
யூடியூபர் ராஜ் ஷாமானியின் ‘Figuring Out with Raj Shaman' என்ற யூ டியூப் சேனலின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 2.20 கோடியைக் கடந்து, உலகிலேயே அதிக சந்தாதாரர்களைக் கொண்டதாக மாறியுள்ளது.
ஸ்டீவன் பார்ட்லெட்டின் ‘The Diary of a CEO' (2.19 கோடி சந்தாதாரகள்), ‘The Joe Rogan Experience' (2.12 கோடி சந்தாதாரர்கள் ) போன்ற பிரபல சானல்களை முந்தி, ராஜ் ஷாமானியின் தளம் அதிக சந்தாதாரர்களைக் கொண்ட பாட்காஸ்டாக அவதாரம் எடுத்துள்ளது.
இந்தியரான ராஜ் ஷமானி, படைப்பாளர்களை மையமாகக் கொண்ட மிகப் பெரிய ஊடகத் தளங்களில் ஒன்றை உருவாக்கி நடத்தி வருகிறார். ‘ஊண்ஞ்ன்ழ்ண்ய்ஞ் ஞன்ற் ஜ்ண்ற்ட் தஹத் நட்ஹம்ஹய்ண்' என்ற பெயரில் இந்தியாவுக்கும், பிற நாடுகளுக்கும் இடையிலான ஒரு பாலமாகச் செயல்பட்டு, வணிகம், அரசியல், கலாசாரத் துறைகளில் உள்ள ஆளுமைகளுடன் உரையாடி கருத்துப் பரிமாற்றம் செய்து வருகிறது. இந்த உரையாடல்கள் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.
2026-ஆம் ஆண்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஆண்ட்ரூ ஹூபர்மேன், டாக்டர் ஸ்காட் காலோவே மற்றும் ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் சாம் ஆல்ட்மேன் ஆகியோர் ராஜ் ஷாமானியின் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
நிகழ்ச்சியில் சாம் ஆல்ட்மேன், 'சாட் ஜிபிடி-க்கு அமெரிக்காவைவிட இந்தியாவே மிகப் பெரிய சந்தையாக மாறியுள்ளது' என்ற தகவலை வெளியிட்டார். இதன்பின்னர், 2026-ஆம் ஆண்டில் மட்டும் ராஜ் ஷாமானியின் நிகழ்ச்சிக்காக 80 லட்சம் புதிய யூடியூப் சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர்.
இந்தச் சாதனை குறித்து ராஜ் ஷமானி கூறியது:
'இந்தோரில் சிறிய அறையில் நான் 'ஃபிகரிங் அவுட்' தளத்தைத் தொடங்கினேன்.
உலகின் மிகச் சிறந்த அறிவாளிகளிடமிருந்து கற்க நீங்கள் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும் என்றோ, ஒரு குறிப்பிட்ட நகரத்தில் வசிக்க வேண்டும் என்றோ, அல்லது ஒரு குறிப்பிட்ட சூழலுக்குள் நுழையும் வாய்ப்பைப் பெற்றிருக்க வேண்டும் என்றோ அவசியம் இல்லை.
'ஃபிகரிங் அவுட்' என்பது லட்சியம் கொண்டவர்களுக்காக உருவாக்கப்பட்டது. தெரிந்துகொள்ளும் ஆர்வம் கொண்டவர்கள், கற்கத் துடிப்பவர்கள், தங்களால் இன்னும் பெரிய உயரங்களை அடைய முடியும் என்று நம்புபவர்களுக்கான தளம் இது.
ஒவ்வொரு உரையாடலும், நமக்குத் தெரியாத புதிய விஷயங்களைப் புரிந்துகொள்ளவும், சிந்தனை முறையை மறுபரிசீலனை செய்யவும், சாத்தியக்கூறுகள் குறித்தான பார்வையை விரிவுபடுத்தவும் ஒரு வாய்ப்பாகும். இது வெறும் தொடக்கம் மட்டும்தான்.
'ஃபிகரிங் அவுட்' தளத்தை ஓர் உலகளாவிய ஊடக நிறுவனமாக மாற்ற வேண்டும் என்பதே எனது லட்சியம். இதனால் உலகின் மிகச் சிறந்த சிந்தனையாளர்கள், கருத்துகள், உரையாடல்களை, ஓர் அசாதாரணமான வாழ்க்கையை உருவாக்க விரும்பும் எவருக்கும், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கொண்டு சேர்க்க விரும்புகிறேன்.
இந்தத் தளத்தின் விரிவாக்கத்துக்கு ஆதரவளிக்க, முன்னணி பொழுதுபோக்கு நிறுவனமான ‘WME' உடன் அவர் ஒப்பந்தம் செய்துள்ளார். மேலும், லெவிஸ் (Levi's), ஆசஸ் (ASUS) போன்ற உலகளாவிய பிராண்டுகளுடன் இணைந்து, மக்கள் பெரிய அளவில் சிந்திக்கவும், விரைவாகக் கற்கவும் உதவும் ஓர் ஊடகச் சூழலை உருவாக்கியுள்ளேன்' என்கிறார் ராஜ் ஷமானி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

