இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

நாடகத் தந்தை பம்மல் சம்பந்தனார்

தமிழ் நாடக உலகின் வளர்ச்சிக்கும், நவீன நாடக மேடையின் உருவாக்கத்துக்கும் அளப்பரிய பங்காற்றியவர் பம்மல் சம்பந்த முதலியார்.

Published On :

தமிழ் நாடக உலகின் வளர்ச்சிக்கும், நவீன நாடக மேடையின் உருவாக்கத்துக்கும் அளப்பரிய பங்காற்றியவர் பம்மல் சம்பந்த முதலியார். தமிழ் நாடகத்தின் போக்கையே மாற்றியமைத்த அவர், 'நாடகத் தந்தை' என்று போற்றப்படுகிறார்.

இவர் 1873-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-இல் சென்னையில் பிறந்தார். இயற்பெயர் திருஞான சம்பந்தம். சென்னை பிராட்வே இந்து தியாலஜிக்கல் உயர்நிலைப் பள்ளியிலும், செங்கல்வராயன் பள்ளியிலும் கல்வி பயின்றார். பின்னர் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும், மாநிலக் கல்லூரியிலும் உயர்கல்வி பயின்றார். தொடர்ந்து சட்டக் கல்வி பயின்று வழக்குரைஞராகப் பணியாற்றினார். அவரது உள்ளத்தை முழுமையாக ஆட்கொண்டது தமிழ் நாடகக் கலைதான்.

கி.பி 1891 முதல் 1938 வரையிலான காலகட்டத்தில் தமிழ் நாடகத் துறையில் தீவிரமாகப் பணியாற்றினார். 66 நாடகங்களையும், 9 சிறு நாடகங்களையும் எழுதியுள்ளார். அவற்றில் 'மனோகரா', 'சபாபதி', 'வேதாள உலகம்', 'சுலோச்சனா' உள்ளிட்ட அவரது நாடகப் படைப்புகள் திரைப்படங்களாயின. இவரே நடித்த 'மனோகரா' நாடகம் தமிழ் நாடக உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இவர் எழுதிய 'விசுவாமித்திரர்' எனும் நாடகத்துக்கு அந்த நாளிலேயே ரூ.5 ஆயிரம் சன்மானம் பெற்றார். இவருடைய நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன.

இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராகவும், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் அறங்காவலராக 24 ஆண்டுகளும் பணியாற்றியுள்ளார்.

1959-ஆம் ஆண்டு அவருக்கு 'பத்ம பூஷண்' விருதை மத்திய அரசு வழங்கியது.

நூறாண்டுகளுக்கு முன்னால் நாடக மேடையில் அருணாசலக் கவிராயர் எழுதிய நாடகங்களைப் பின்பற்றியே 'அரிச்சந்திரன்', 'மார்க்கண்டேயர் நாடகம்', 'இரணிய விலாசம்' போன்றவை நடிக்கப்பட்டு வந்தன.

கற்றவர் போற்றும் சம்பந்தனார் 1930-இல் தம் வாழ்க்கை வரலாறாக 'நாடக மேடை நினைவுகள்' எனும் கட்டுரைத் தொடரை 'சுதேசிமித்திரன்' இதழில் எழுதினார். 1891-இல் சென்னையில் நடைபெற்ற அந்த நாடகத்தைக் கண்ட ஆந்திரத்தைச் சேர்ந்த கிருஷ்ணமாச்சார்லு - சரசவிநோதனி சபா குழுவினர் பல தெலுங்கு நாடகங்களை நடத்தினர்.

1891-ஆம் ஆண்டு ஜூலை 1-இல் 'சுகுணவிலாசம்' நாடகக் குழு ஆரம்பமானது. சுகுணாவிலாச சபைக்கு புதுமைகளைக் கற்பிக்க, மும்பையில் இருந்து பாரசீக நாடகக் குழுவினர் சென்னைக்கு வந்து நாடகங்களை நடத்தினர். ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் இடையில் நீண்ட இடைவெளிகள் ஏற்படுவது, மேடையில் தேவையற்ற பொருள்கள் குவிக்கப்படுவது போன்ற நடைமுறைகளை மாற்றி, நாடகத்தை ஒழுங்காகவும் இயல்பாகவும் நடத்த வேண்டும் என்ற புதிய அணுகுமுறையை அவர் உருவாக்கினார்.

இந்தப் பாரசீக கம்பெனியார் அன்றே பக்க வாத்தியங்களை மேடையில் படுதாவின் பக்கத்தில் வைக்காமல் அரங்கத்தின் எதிரில் வைத்தனர்.

பம்மலாரின் சுகுணா விலாச சபை நூற்றுக்கணக்கான நாடகங்களை தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் நடத்தியது.

நாடக உலகில் தனித்துவம் பெற்ற பம்மல் சம்பந்தனார் 1964-ஆம் ஆண்டு செப். 24-இல் மறைவுற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.