காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

பேல்பூரி

மனிதனின் பாதி வாழ்க்கை போனிலும், மீதி வாழ்க்கை லோனிலும் கழிகிறது.

Published On :6 செப்டம்பர் 2026, 4:01 am IST

கண்டது...

(திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு அருகில் உள்ள ஒரு நகரின் பெயர்)

'கணவன்-மனைவி நகர்.'

-வீ.இரா.இராசராசன், செங்குறிச்சி.

(நெல்லை களக்காடு பெல்ஜியம் ஆஸ்பத்திரியில் வாசலில் எழுதி வைத்திருக்கும் வாசகம்)

'இந்தியாவுக்கு வந்தாரு வாஸ்கோடகாமா...

நீங்க ஆஸ்பத்திரிக்கு மாஸ்க்கோட வாமா!'

-ராஜேஸ்வரி சுப்பிரமணியன், நெல்லை.

(திருவள்ளூரில் ஆட்டோ ஒன்றில் கண்ட வாசகம்)

'வாழ்க்கைத் திருப்பங்களில் கவனம்...

வஞ்சகர்கள் அதிகம்!'

-ஏ. மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

(கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே கால் டாக்சி ஒன்றில் கண்ட வாசகம்)

'அதிவேகம் ஆம்புலன்சுக்கு வழிவகுக்கும்...

மிதவேகம் சேருமிடம் சேர்க்கும்!'

-ஸ்ரீனிவாச பிரபு, கோவை.

(நெல்லையில் ஆட்டோ ஒன்றில் கண்ட வாசகம்)

'மனிதனின் பாதி வாழ்க்கை போனிலும், மீதி வாழ்க்கை லோனிலும் கழிகிறது.'

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.

எஸ்.எம்.எஸ்.

'பணத்துக்காக வரும் அன்பு செலவாகும் வரை...

தேவைக்காக வரும் அன்பு காரியம் முடியும் வரை!'

-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

யோசிக்கிறாங்கப்பா...

'குழப்பம் என்பது பிறரால் வந்தாலும்...

தெளிவு என்பது உன்னிடமே இருக்கவேண்டும்.'

-த.பாலசுப்பிரமணியன், கோவை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.