பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

தொழிலதிபராக வேண்டுமா?

நான் அம்பானி ஆவேன் என கல்லூரி மாணவர்கள் விளையாட்டாகக் கூறலாம். ஆனால், இந்த விளையாட்டை நல் வினையாக்கி செயல்படுத்தி வருகிறது, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பிரிவு.   தமிழக அரசின் சார்பில், த

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 11:33 am

கே.பாலசுப்பிரமணியன்

நான் அம்பானி ஆவேன் என கல்லூரி மாணவர்கள் விளையாட்டாகக் கூறலாம். ஆனால், இந்த விளையாட்டை நல் வினையாக்கி செயல்படுத்தி வருகிறது, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பிரிவு.

  தமிழக அரசின் சார்பில், தொழில் முனைவோருக்கான ஒரு மாதப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு வகுப்புக்கு 50 பேர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்தப் பயிற்சிக்கு ரூ.15

ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் தங்குவதும், மூன்று வேளை சாப்பாடும் அடங்கும். கட்டணம் இவ்வளவா? என பெரு மூச்சு விடாதீர்கள்.

  இந்தப் பயிற்சியை முடித்து விட்டு நீங்கள் வெளியே வந்தால் கண்டிப்பாக ஒரு தொழிலை சொந்தமாகத் தொடங்கி 10 பேருக்காவது வேலை கொடுப்பீர்கள் என்கின்றனர் அரசுத் துறை அதிகாரிகள்.

  பயிற்சியை அளிப்பதற்கு தொழில் துறையில் சிறந்து விளங்கும் தனியார்கள் அழைக்கப்படுகின்றனர். சிறந்த முறையில் தொழில் செய்வது எப்படி? சொந்தத் தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள் என்ன? என்பன போன்ற நம்பிக்கையூட்டும் வகையிலான வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

  தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு: எம்.பி.ஏ., போன்ற படிப்புகளைப் படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி நிறைந்த பயன் அளிக்கும் என்று நம்பிக்கை தருகின்றனர் பயிற்சியாளர்கள்.

  தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுவது கூடுதல் சிறப்பு. இதற்கான முழுச் செலவையும் "தாட்கோ' ஏற்றுக் கொள்கிறது. கடந்த ஜூன் மாதம் பயிற்சி பெற்ற 50 மாணவர்களில் 27 பேர் தாட்கோ நிறுவனம் மூலம்

சென்றுள்ளனர். அதில், 9 பேர் பெண்கள் என்பது கூடுதல் தகவல்.

தேர்வு முறை: ஒரு நிறுவனத்துக்கே முதலாளியாகும் இளைஞர்கள் இந்தப் பயிற்சி வாயிலாக கண்டெடுக்கப்படுகின்றனர். அதற்கு முன்பாக, இந்தப் பயிற்சியில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு பல்வேறு விதமான தேர்வுகள் வைக்கப்படுகின்றன. அதில், தேறுவோருக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது.  காரணம், கட்டணம் செலுத்தி பயலும் பயிற்சி விழலுக்கு இறைத்த நீர் ஆகி விடக் கூடாது அல்லவா! எனவே, மாணவர்கள் தேர்வு செய்யப்படும் போது மிகவும் சிரத்தை எடுத்துக் கொள்ளப்படுவதாக தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் தெரிவிக்கிறது.

 இதே நீங்கள் முதலாளி ஆக வேண்டுமா? பயிற்சி பெற....அணுக வேண்டிய முகவரி:

 சிறு மற்றும் குறு தொழில்கள் துறை, தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்,  கிண்டி, சென்னை-600 032. தொலைபேசி எண்கள்: 044-2250 2411 மற்றும்  2250 2412.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.