துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சென்னை மாநகராட்சியில் வேலை

பணி: Assistant Engineer 

News image
Updated On :28 டிசம்பர் 2015, 3:27 pm

க.தி.மணிகண்டன்

பணி: Assistant Engineer 

காலியிடங்கள்: 61

சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800

வயது வரம்பு: 18-இலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: மெக்கானிக்கல் / சிவில் / எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் / எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் ஆகிய பொறியியல் படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Sanitary Inspector

காலியிடங்கள்: 71

சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800

வயது வரம்பு: 18-லிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பி.எஸ்சி. வேதியியல் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், Sanitary Inspector  படிப்பை பாடமாக எடுத்து பிஜி டிப்ளமோவிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு மட்டும் ரூ. 500-ஐ `The commissioner, Corporation of Chennai'  என்ற பெயருக்கு வரைவோலை (டிடி) எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்.சி / எஸ்.டி / மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

கல்வி சான்றிதழ்களின் நகல்களுடன், வரைவோலையை இணைத்து பதிவு அல்லது விரைவு தபால் மூலம், The commissioner, Corporation of Chennai, Amma Maligai, Ripon building campus, No.16, E.V.R. Salai, Chennai -600 003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.12.2015

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.