வாங்க... இங்கிலீஷ் பேசலாம் - 5
புரொபஸர் கையில் ஒரு குழந்தையுடன் வருகிறார். அவரை கணேஷ் சந்தித்து வணங்குகிறான்.


புரொபஸர் கையில் ஒரு குழந்தையுடன் வருகிறார். அவரை கணேஷ் சந்தித்து வணங்குகிறான்.
கணேஷ்: சார் இது?
புரொபஸர்: இது பாப்பா!
கணேஷ்: பேரு?
புரொபஸர்: பேரு தான் பாப்பா
கணேஷ்: ஹாய் பாப்பா...
பாப்பா: போடா
புரொபஸர்: பாப்பா, இவரு பேரு கணேஷ்
பாப்பா: போடா... கணேஷ்
புரொபஸர்: அவர அப்பிடிக் கூப்பிடக் கூடாதும்மா... தாத்தா சொல்றேன்ல...
பாப்பா: போடா... தாத்தா
கணேஷ்: சார் நீங்க பாப்பாவ கீழ விடுங்களேன். நம்ம கூட நடந்து வரட்டும்
புரொபஸர்: No she is a toddler. இப்ப தான் நடக்க கத்துக்கிறா
கணேஷ்: toddlerன்னா நடக்க தெரியாத குழந்தையா சார்?
புரொபஸர்: இல்ல, 1 இல் இருந்து 3 வயசு வரை உள்ள குழந்தைய toddlerன்னு சொல்லலாம். உச்சரிப்பு டோட்லெ. அதாவது கடைசி r silent. அதை முழுங்கிடணும். Toddle அப்பிடீங்கிற வார்த்தையில இருந்து toddler வருது. Toddleன்னா தத்தி தடுமாறி நடக்கிறது. அதே மாதிரி சாவகாசமா இளைப்பாறுவதற்கு நடக்கிறதையும் toddleன்னு சொல்லலாம். உதாரணமா The old couple toddled along the beach at sunset.
கணேஷ்: சார் குழந்தைங்க தள்ளாடி நடக்கிறது பார்க்க தனி அழகு தான் இல்ல?
புரொபஸர்: ஆமா. இன்னொரு வார்த்தை இருக்கு totter. இதுவும் உச்சரிப்புல கடைசி r ஐ விட்டுடணும். டோட்டெ. ஆனால் ing சேர்த்துக்கிட்டு tottering சொல்லும் போது r சேர்த்துக்கலாம். ஒரு குடிகாரன் came tottering about. அது மாதிரி தான் teeter, stagger போன்ற சொற்களும். உச்சரிப்புல டீட்டெ, ஸ்டேகெ. இந்த மாதிரி r இல் முடிகிற பெரும்பாலான சொற்களுக்கு உச்சரிப்புல r தேவையில்லை. ஆனா ing இல் முடியும்போது, அதாவது staggeringன்னு சொல்லும் போது ஸ்டேகரிங்னு ஆர் வரும். அதே மாதிரி ed வரும் போது ஸ்டேகெர்ட். இங்க ஆர் ஒலியை அழுத்தாம சொல்லணும். She staggered on after the blow to the head. அதாவது தலையில் அடி வாங்கின உடன் அவள் தடுமாறி நடந்தாள். அது மாதிரி பயங்கர அதிர்ச்சியாவதை கூட He was staggered to find his pocket had been picked என சொல்லலாம்.
கணேஷ்: pocket had been pickedன்னா
புரொபஸர்: பிக்பாக்கெட் அடிச்சுட்டாங்க.
அவர் பாப்பாவை கீழே விடுகிறார். அது தடுமாறி நடப்பதை ரசிக்கிறார்கள். ஒரு கல் தடுக்க, விழப் போகிறது. கணேஷ் பாப்பாவை விழாமல் பிடித்துக் கொள்கிறான். ஆனால் பாப்பா அழுது கொண்டே கணேஷிடம் இருந்து நெளிந்து வளைந்து விடுபடுகிறது. புரொபஸரை பார்த்து கணேஷை சுட்டிக்காட்டி புகார் கூறும் விதமாய் அழுகிறது.
கணேஷ்: சார் நான் அது விழுந்திடாம இருக்க தான் பிடிச்சேன். காப்பாத்தினேன் சார். அதுக்கு போய் கோபப்படுறா
புரொபஸர்: பொண்ணுங்களே அப்பிடித்தான் கணேஷ். விழுந்த உடனே காப்பாத்தினா நம்ம மேல பாய்வாங்க. விழற வரை வெயிட் பண்ணி அப்புறமாப் போய் காப்பாத்தணும். அப்போ அன்பா ஏத்துப்பாங்க. ஹா... ஹா...
கணேஷ்: சார் பாப்பா இப்பிடி தடுக்கி விழுந்ததுக்கு இங்கிலீஷ்ல என்ன?
புரொபஸர்: Stumble. ஸ்டம்பிள். She stumbled over a stone while walking. இதையே She tripped overன்னும் சொல்லலாம். அது மாதிரி தட்டுதடுமாறி பேசுறதை she stumbled over wordsன்னும் சொல்லலாம்
கணேஷ்: சார்... காலைத் தேய்ச்சுக்கிட்டு நடக்கிறதை
புரொபஸர்: அதுக்கு shufflingன்னு ஒரு வார்த்தை இருக்கு, ஷஃபிள். Shamble (ஷாம்பிள்) கூட அதே பொருள் தான்.
கணேஷ்: சார் நொண்டி நடக்குறது
புரொபஸர்: hobble. ஹொபிள். இன்னும் எளிமையான வார்த்தை limp. லிம்ப்.
கணேஷ்: சார்... கை, காலை தானே லிம்புன்னு சொல்லுவோம்?
புரொபஸர்: அது limp. உச்சரிப்புல ப வராது. லிம் அப்டீன்னு சொல்லணும். ஆனால் ப்ண்ம்ல்இல் ப ஒலி வரும்.
பாப்பா: தாத்தா எனக்கு போரடிக்குது. Shut up
கணேஷ்: போரடிக்குதுன்னா நாம எதாவது விளையாடலாமா பாப்பா
பாப்பா: Shut up, shut up, shut up, shut up
கணேஷ்: இல்ல பாப்பா நான் என்ன சொல்றேன்னா....
பாப்பா: Shut up, shut up, shut up, shut up
புரொபஸர்: பொண்ணுங்க எதாவது சொன்னா கேட்டுரணும். இல்லாட்டி அதையே திரும்ப திரும்ப சொல்லுவாங்க. ஹா ஹா
இனியும் பேசுவோம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...