புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வாங்க... இங்கிலீஷ் பேசலாம் - 6

கடற்கரையில் புரொபஸரும் கணேஷும் அமர்ந்து அவித்த கடலையைச் சுவைக்கிறார்கள். புரொபஸர் காலடியில் நாய் ஜூலி தூங்குகிறது.

News image
Updated On :20 அக்டோபர் 2015, 9:44 am

ஆர்.அபி​லாஷ்

கடற்கரையில் புரொபஸரும் கணேஷும் அமர்ந்து அவித்த கடலையைச் சுவைக்கிறார்கள். புரொபஸர் காலடியில் நாய் ஜூலி தூங்குகிறது.

கணேஷ்: சார் இந்த கடலை நேத்து பண்ணினது. புளிச்ச வாடை வருது.

புரொபஸர்: அப்படியா? எனக்கு ஒண்ணும் தெரியலியே. ஏதோ நினைப்பில மொத்தத்தையும் சாப்பிட்டுட்டேன்.

கணேஷ்: கெட்டுப் போன சாப்பாட்டை இங்கிலீஷ்ல என்ன சொல்வாங்க சார்?

புரொபஸர்: Stale. The peanut snack we bought smelled stale அப்டீன்னு சொல்லலாம்.

கணேஷ்: அந்த ஸ்டால்ல நம்ம வாங்கின கடலை ஸ்டேலாயிடுச்சு. ரைமிங்கா இருக்கில்ல சார்?

புரொபஸர்: உன் ரைமிங்கில ஒரு விசயம் இருக்கு. நற்ஹப்ப் க்கும் ள்ற்ஹப்ங்க் க்கும் ஒரு தொடர்பு உண்டு. ள்ற்ஹப்ப்ன்னா ஒரே இடத்தில தங்கி நிக்கிறது. பதவி உயர்வோ சம்பள உயர்வோ இல்லாம ஒருத்தர் ஒரே வேலையில நீண்ட நாள் இருந்தா  his career stalled  அப்டீன்னு சொல்வோம். இதுக்குச் சமமான இன்னொரு வார்த்தை

stagnate.

கணேஷ்: சார்... அப்போ ஒரேயிடத்துல ஒரு கடை நிக்கிறதினால அதை ஸ்டால்னு சொல்றோமா?

புரொபஸர்: ஆமா. குதிரைகளை ஒரே இடத்தில கட்டி வைக்கிற இடம் கூட stall  தான். அதாவது தமிழ்ல லாயம். Staleன்னு சொன்னேன் இல்லியா? அதோட ஒரிஜினல் சொல், அதாவது மூலச் சொல் ள்ற்ஹப்ப் தான். Estal என்கிற பழைய பிரஞ்சு சொல்லில் இருந்து இது வருது. Estal எனும் சொல்லின் பொருள் ஒரே இடத்தில் அசையாமல் இருப்பது. பதின்மூன்றாம் நூற்றாண்டில் பீரை பெரிய டிரம்மில் ஊற்றி வைத்திருப்பார்கள். அதிக நேரம் அப்படி இருக்கும் போது அதன் அழுக்கு, வண்டல் எல்லாம் கீழே படிந்து விடும். சுத்தமான கெடாத பீர் மேலே தெளிந்து வரும். இப்படி இந்த பீரில் இருந்து தான் ஸ்டேல் என்கிற வார்த்தை வந்தது.

கணேஷ்: சார் ஸ்டேல் என்கிறது ஆங்கில வார்த்தை தானே? நீங்க ஏன் பிரஞ்சுன்னு சொல்றீங்க?

புரொபஸர்: நல்ல கேள்வி. இங்கிலீஷ் என்பது தமிழ் மாதிரி ஓர் அசலான பழமையான மொழி அல்ல. இன்றைக்கு நாம பேசுற ஆங்கிலம் தோன்றி 500-600 வருடங்கள் தான் இருக்கும். ஆங்கிலம் தோன்றினதுக்குப் பிரதான காரணம் இங்கிலாந்தில் ஐந்தாம் நூற்றாண்டில் துவங்கி நடந்த பிரஞ்சுப் படையெடுப்பு தான். பிறகு பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் இங்கிலாந்தில் முன்பு இருந்த ஆதிகுடிகளின் மொழி எல்லாம் சேர்ந்து ஒரு புது மொழி உருவாச்சு. அப்போதும் கூட ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் ஒவ்வொரு மாதிரி ஆங்கிலத்தைப் பேசினாங்க. 15ஆம் நூற்றாண்டில் ஜெப்ரி சாஸர் அப்டீன்னு ஓர் எழுத்தாளர் தான் எல்லாருக்குமான ஓர் ஆங்கிலத்தைத் தன் காண்டர்பெரி டேல்ஸ் அப்டீங்கிற கதையில் அறிமுகப்படுத்தினார்.

கணேஷ்: ஒரு சொல்லுக்குப் பின்னாடி இவ்வளவு கதை இருக்கா சார்?

புரொபஸர்: ஆமா. இதைப் பற்றி ஆராய்கிற துறை தான் etymology. அதாவது வேர்ச்சொல் ஆய்வு.

கணேஷ்: தமிழ்லயும் உண்டா சார்?

புரொபஸர்: ஏன் இல்ல? சம்பளம்ங்கிற சொல் தெரியுமில்ல?

கணேஷ்: தெரியும் சார்.

புரொபஸர்: இப்போல்லாம் சம்பளமுன்னா பணம் தருவாங்க. ஆனா பழைய காலத்தில வயலில கூலி வேலை செய்யுறவங்களுக்கு சம்பா நெல்லையும், அளத்தில் விளையும் உப்பையும் கொடுப்பாங்க. சம்பு+அளம்= சம்பளம். இப்படித்தான் சம்பளம்ங்கிற சொல் வந்தது.

கணேஷ்: இந்தக் கதை வித்தியாசமா இருக்கு சார்.

I staled அப்டீன்னு சொல்லலாமா?

புரொபஸர்: ள்ற்ஹப்ங்க்ன்னு சொல்லும் போது அது verb.  அதாவது வினைச்சொல். வெறும் ள்ற்ஹப்ங் பெயரடை. அதாவது adjective. ஒரு விசயத்தோட குணத்தைச் சொல்கிற சொல். உதாரணமா... (அவர் யோசிக்கிறார்)

கணேஷ்: beautiful

புரொபஸர்: ஆமா beauty எனும் போது பெயர்ச்சொல். அது ஒரு நிலை. ஆனால் beautiful  ஒரு குணம். இப்போ உன் கேள்விக்கு வரேன். I staled  தப்பு. Staled அப்டீன்னா ஒண்ணுக்குப் போறது. அதுவும் கால்நடைகள். A cow staled அப்டீன்னு சொல்லலாம்.

கணேஷ்: ஒரு கால்நடை ஒண்ணுக்குப் போறதுக்கு தனியா வார்த்தை இருக்குதா சார்?

புரொபஸர்: ஆமா ஆங்கிலத்தோட ஒரு சிறப்பு அது.

கணேஷ்: A cow staled அப்டீன்னு சொல்லலாமா சார்?

புரொபஸர்: ரெண்டு வார்த்தைக்கும் ஒரு எழுத்து L கூட, குறைவா இருக்கிறது தான் வித்தியாசம். கவனமா பயன்படுத்தணும். உச்சரிப்பு கூட கெட்டுப் போனதுக்கு ஸ்டேல். தேங்கி நிக்கிறதுக்கு ஸ்டால். பசுமாடு ஸ்டால் ஆச்சுன்னு சொல்ல முடியாது. ஆனா நீ ஒரு பைக்கை ஓட்டுறப்போ அதோட எஞ்சின் கோளாறு ஆகி நின்னு போச்சுன்னா  I stalled the bikeன்னு சொல்லலாம். அதே மாதிரி கிரிக்கெட்டில எதிரணி வேகமா ரன் அடிக்கும் போது தோனி ஸ்பின்னர்ûஸ கொண்டு வந்து ரன் ரேட்டை ஸ்லோவாக்குவார் இல்லையா? அதுவும் stalling. இருபது வருசமா ஒரு வழக்கை ஒரு வக்கீல் வாய்தா வாய்தான்னு இழுத்தடிக்கிறதும் ஸ்டாலிங் தான்.

கணேஷ்: அப்பிடி பழசான வழக்கை

ள்ற்ஹப்ங்ன்னு சொல்லலாமா?

புரொபஸர்: இல்ல. அப்பிடியான வழக்கு பத்தின செய்திகளை stale newsன்னு சொல்லலாம். சரி எழுந்திரு. காந்தி சிலை வர நடந்துட்டு வரலாம்.

(எழுந்து நடக்கிறார்கள்)

கணேஷ்: சார் உங்க பேண்ட் பாக்கெட் கிழிஞ்சிருக்கு.

புரொபஸர்: வர வழியில ரோட்ல அஞ்சு ரூபா நாணயம் கண்ணுல பட்டுது. சரி யாரும் பார்க்கலையேன்னு குனிந்து எடுத்தேன். அதுக்குள்ள ஒருத்தன் என் பின்பாக்கெட்டை கிழித்து பர்ûஸ எடுத்து கூட்டத்தில மறைஞ்சிட்டான், படுபாவி. இதை சொல்லும் போது தான் நினைவு வருது. இப்பிடி பிளான் பண்ணி நம்ம கவனத்தை திருப்பி திருடுறது பேரும் stalling தான்.

கணேஷ்: எவ்வளவு ரூபா போச்சு சார்?

புரொபஸர்: ரூபாயை நான் எப்பவும் பேண்டோட உள்பாக்கெட்டில தானே வைப்பேன். பர்ஸýல என் மனைவி போட்டோ, விபூதி பொட்டலம், ரிசிப்டு எல்லாம் வச்சிருந்தேன். அந்த போட்டோவை பார்த்து அவன் பயந்திராம இருந்தா சரி. ஹா... ஹா...

ஜூலி: its a stale joke.

கணேஷ்: அப்டீன்னா?

ஜூலி: மொக்கை ஜோக்.

(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.