சின்னப் பையன்... பெரிய சாதனை!

ஆமதாபாத்தில் EURO SCHOOL என்ற பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிப்பவன் ரோனில் ஷா. இந்த இளம் வயதில் அவன் ஒரு மிகப் பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளான்.
சின்னப் பையன்... பெரிய சாதனை!

ஆமதாபாத்தில் EURO SCHOOL என்ற பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிப்பவன் ரோனில் ஷா. இந்த இளம் வயதில் அவன் ஒரு மிகப் பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளான்.

அமெரிக்காவின் ஆரக்கிள் பல்கலைக்கழகம் ஆன்லைனில் "ஜாவா ஸ்டாண்டர்ட் எடிஷன் 6 புரோகிராமர்' என்ற தேர்வை கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி நடத்தியது. இந்தத் தேர்வு 2 மணி 56 நிமிடங்கள் நடைபெறும்.

இந்தத் தேர்வில் கம்ப்யூட்டர் படிப்புகளைக் கரைத்துக் குடித்த சாஃப்ட்வேர் டெவலப்பர்கள்தான் மூச்சுத் திணற... பங்கேற்பார்கள். ஆனால் ரோனில் ஷா இந்தத் தேர்வில் பங்கேற்றான். அதுவே ஒரு சாதனைதான். அதிலும் வெறும் 18 நிமிடங்களில். முழு மதிப்பெண்களும் அவனுக்குக் கிடைத்தது.

இந்தத் தேர்வு எழுதி சான்றிதழ் பெற்ற மிகவும் குறைந்த வயதினன் என்ற பெருமை இதனால் ரோனில் ஷாவுக்குக் கிடைத்திருக்கிறது.

இந்தத் திறமை ரோனில்ஷாவுக்கு எப்படி வந்ததாம்?

4 வயதில் இருந்தே கம்ப்யூட்டர் கடலில் மூழ்கிக் கிடந்திருக்கிறான் ரோனில் ஷா. முதலில் அனிமேஷன், கோரல் டிரா... அப்புறம் சி, சி++ என அவனுடைய பயணம் தொடர்ந்திருக்கிறது. அதற்குப் பிறகு சாஃப்ட்வேர் டெவலப்பர் ஆன் ஷர்டிபிகேஷன் கோர்ஸ் படித்து ஜாவா ஷர்டிபிகேட் பெற்றிருக்கிறான்.

எதிர்காலத்தில் அட்வான்ஸ்டு ஜாவா, ஐ போன், ரோபாடிக்ஸ், ஆண்ட்ராய்டு ஆகியவற்றைப் படிக்க வேண்டும் என்ற அளவு கடந்த ஆசை உள்ளதாம் அவனுக்கு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com