விமானியான ஆட்டோ டிரைவர்
தூங்கும்போது வருவதல்ல கனவு, தூங்கவிடாமல் செய்வதே கனவு என்ற வரிகள் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ மகாராஷ்டிரா நாக்பூரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் பந்தாவனே என்ற இளைஞருக்கு முற்றிலும் பொருந்தும்.


தூங்கும்போது வருவதல்ல கனவு, தூங்கவிடாமல் செய்வதே கனவு என்ற வரிகள் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ மகாராஷ்டிரா நாக்பூரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் பந்தாவனே என்ற இளைஞருக்கு முற்றிலும் பொருந்தும்.
ஏழ்மை நிலை. அப்பா சாதாரண காவலாளி. கஷ்ட ஜீவனம். வேறு வழியின்றி ஸ்ரீகாந்த் பந்தாவனே பள்ளிக்குச் சென்றுகொண்டே ஆட்டோவில் டெலிவரி பையனாகவும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் 12-ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்தார்.
ஒருமுறை டெலிவரிக்காக ஆட்டோவில் விமான நிலையத்துக்கு வந்த ஸ்ரீகாந்த அங்குள்ள டீக் கடையில், சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்தால் உதவித் தொகையுடன் கூடிய விமான ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுவதாக கிடைத்த தகவலைத் தெரிந்து கொண்டார்.
உடனே மத்திய பிரதேசத்திலுள்ள விமான ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிக்கு விண்ணப்பித்தார். இடமும் கிடைத்தது. விமானம் ஓட்டும் பயிற்சியின்போது அவருக்கு மிகப் பெரிய துன்பமாக இருந்தது ஆங்கில அறிவு குறைவாக இருந்ததுதான். அப்பிரச்னையை தனது நண்பர்களின் உதவியாலும்ஹ கடினமான உழைப்பாலும் ஸ்ரீகாந்த் சமாளித்தார். வெற்றிகரமாக விமான ஓட்டுனர் பயிற்சியை முடித்தார்.
விமானச் சேவை தொழிலில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக உடனடியாக விமான ஓட்டியாக முடியாமல் விமான நிலையத்தில் அதிகாரியாகப் பணியாற்றினார்.
இறுதியில் இன்டிகோ விமான சேவை நிறுவனம் ஸ்ரீகாந்தை துணை விமான ஓட்டியாக பணியிலமர்ந்தி இந்தச் சாதனை இளைஞரின் சாதனைப் பயணத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டது. தற்பொழுது துணை விமான ஓட்டியாக இன்டிகோ விமான நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் ஸ்ரீகாந்த் முதல்நிலை விமான ஓட்டியாக வெகுவிரைவில் வானில் பறப்பது நிச்சயம். அவ்வாறு பறக்கும்போது ஆட்டோவில் தான் கடந்துவந்த பாதையை விமானத்திலிருந்து எட்டிப் பார்ப்பது முடியுமோ, இல்லையோ, பழையனவற்றை மனதளவில் நினைத்துப் பார்ப்பது உறுதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...