எளிமையான கழிப்பறைத் தொழில்நுட்பங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், "ரெடிமேடு ஸ்லாப்புகள்' மூலம் ரூ. 20 ஆயிரத்தில் ஒரு கழிப்பறையை 3 மணி நேரத்தில் நாமே கட்டிக்கொள்ள முடியும் என்ற புதிய முறையை திருச்சியைச் சேர்ந்த தனியார் கல்லூரியைச் சேர்ந்த கட்டுமானப் பொறியியல் மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
திறந்தவெளியில் மலம் கழிக்கக் கூடாது என்ற விழிப்புணர்வு முன்பைவிடவும் அதிகரித்து வருகிறது.
பல்வேறு தொண்டு நிறுவனங்கள் ஏழை, எளிய மக்கள், கிராமப்புற மக்களுக்காக எளிமையான கழிப்பறைத் தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து அறிமுகப்படுத்தி வருகின்றன.
திருச்சி அளுந்தூரைச் சேர்ந்த ஜெஆர் பாலிடெக்னிக் கல்லூரியின் கட்டுமானப் பொறியியல் துறையைச் சேர்ந்த இறுதியாண்டு மாணவர்கள் "ரெடிமேடு ஸ்லாப்புகள்' கொண்டு கழிப்பறையைக் கட்டும் முறையை உருவாக்கியுள்ளனர்.
கழிப்பறை தரைத் தளம், மூன்றுபுறத்தின் சுற்றுச்சுவர் உள்ளிட்டவற்றை 12 துண்டுகளாக முன்கூட்டியே கான்கிரீட் ஸ்லாப்புகளாகத் தயாரித்து எடுத்துச் சென்று தேவையான இடத்தில் வைத்து 3 மணி நேரத்துக்குள் சிமெண்ட் கொண்டு ஒட்டிக்கொள்ளலாம்.
இந்த முறையில் நமக்கு உதவிசெய்ய- தேவையானால் மட்டும்- ஓரிரு கட்டுமானத் தொழிலாளர்கள் போதும். முறையான மேஸ்திரி தேவையில்லை. சில மாதங்கள் கழித்து இந்த ஸ்லாப்புகளை சேதமுறாமல் பிரித்து எடுத்து வேறிடத்திலும் கழிப்பறையை உருவாக்கிவிட முடியும்.
இத்துடன் வழக்கமான இரு உறிஞ்சு குழிகள் (கிணற்று உறைகளுடன்), அவற்றைச் சுற்றிலும் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை கல்வாழைச் செடிகள் (நச்சு பாக்டீரியாக்களை உண்டு செரிக்க),
அதன் பிறகு நமக்குத் தேவையான சிறு தோட்டத்தையும் அமைக்க முடியும்.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் ஜெ. கல்பனா கூறியது:

""இந்த எளிய முறையில் தேவையான கான்கிரீட் ஸ்லாப்புகளைத் தயாரிக்கும் வாய்ப்பை, இங்கு படிப்பை முடிக்கும் மாணவர்களை தொழில்முனைவோர் அமைப்பாக ஒருங்கிணைத்து, அவர்களுக்குத் தரவும்
திட்டமிட்டுள்ளோம்.
மேலும், இத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன. நடமாடும் வாகனத்தைப் போல நடமாடும் கழிப்பறைகளை அமைத்துத் தர முடியுமா? எனக் கேட்கின்றனர். தற்போதைய நிலையில் அது சாத்தியமில்லை.
கல்லூரி வளாகத்தில் ஒரு மாதிரிக் கழிப்பறையை உருவாக்கி வைத்திருக்கிறோம். தேவைப்படுமானால் சோலார் அமைப்பின் மூலம் சிறிய விளக்கு ஒன்றையும் அமைக்கலாம்'' என்றார்.
அளுந்தூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் அடுத்த ஓரிரு மாதங்களில் சில கழிப்பறைகள் இத்திட்டத்தில் கட்டப்படவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உறுதி போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

