வாங்க... இங்கிலீஷ் பேசலாம்
நீ அளவுக்கு மீறி குடிச்சிட்டு வண்டியோட்டினா நீ ஒரு drunk driver. ஆனால் சட்டம் அனுமதிக்கிற அளவுக்குள்ள குடிச்சிருந்தா drunken driver.


நீ அளவுக்கு மீறி குடிச்சிட்டு வண்டியோட்டினா நீ ஒரு drunk driver. ஆனால் சட்டம் அனுமதிக்கிற அளவுக்குள்ள குடிச்சிருந்தா drunken driver.
ரொபஸரும் கணேஷும் வாக்கிங் போகிறார்கள். ஒருவர் தலையைச் சொறிந்து கொண்டு எதிரே வருகிறார். புரொபஸருக்கு வணக்கம் சொல்கிறார். புரொபஸர் அவர்களைப் பரஸ்பரம் அறிமுகப்படுத்துகிறார்.
புரொபஸர்: இவரு குடிகாரன். என் பழைய மாணவன்.
கணேஷ்: குடிகாரனா? அப்படி ஒரு பெயரா?
புரொபஸர்: ஆமா. காலையில் ஆறு மணிக்குக் குடிக்க ஆரம்பிச்சுடுவார். இவரோட சிந்தனைகள், நடவடிக்கைகள், வேலைகள் எல்லாமே குடியை மையமிட்டே இருக்கும். அதனால அப்பிடி பேரு வச்சிருக்காரு. பால்காரன், பேப்பர்காரன் மாதிரி குடிகாரன்.
குடிகாரன்: ஆமா. ஆனா என் பெயர்க்காரணம் அது இல்ல. தினமும் யாராவது என்னைப் புடிச்சு குடியோட தீமைகளை விளக்கி திருந்தச் சொல்லி டார்ச்சர் பண்றாங்க. அவங்க கிட்ட இருந்து தப்பிக்கத்தான் பெயரை அப்பிடி வச்சுக்கிட்டேன். இப்போ என்கிட்ட யாரும் அட்வைஸ் பண்றதில்ல
கணேஷ்: drunkard ன்னு சொல்லலாமா சார்?
குடிகாரன்: கூடாது. Drunk ஆ இருக்கிறவன் தான் drunkard. அதாவது போதையில சலம்புறவன். லைட்டா குடிக்கிறவனை எல்லாம் அப்பிடி அழைக்கக் கூடாது. நான் தெளிவாப் பேசுறேனா?
புரொபஸர்: இவன் குடிச்சுச் குடிச்சு இப்போதெல்லாம் போதையாவதற்குப் பதிலா தெளிவாயிடறான்
கணேஷ்: ஆங்!
குடிகாரன்: எது தான் போதையில்ல? (போஸ்டரில் தெரிகிற ஓர் அரசியல்வாதியை காட்டி) He is drunk with power. அரசியல் போதை. நீங்க அதோ தெரியற மலை, நீல ஆகாயம், அதில் மிதக்கிற மேகங்களை ரசிச்சா you drink in the beauty of nature. ஒரு பொண்ணைப் பார்த்து மயங்கினா you are drunk with passion.
கணேஷ்: சார் drunken இல்ல drunk இதுல எது சரி?
புரொபஸர்: நீ அளவுக்கு மீறி குடிச்சிட்டு வண்டியோட்டினா நீ ஒரு drunk driver. ஆனால் சட்டம் அனுமதிக்கிற அளவுக்குள்ள குடிச்சிருந்தா க்ழ்ன்ய்ந்ங்ய் க்ழ்ண்ஸ்ங்ழ்.
குடிகாரன்: Man being reasonable must drink. The best of life is spent in intoxication - Byron
கணேஷ்: அப்டீன்னா?
குடிகாரன்: அறிவு நம்மை வாழ்க்கையை ரசிக்க விடாமப் பண்ணுது. அதுனால குடிக்கும் போது தான் வாழ்க்கை அற்புதமா ஆகுதுன்னு பைரன் சொல்றாரு
புரொபஸர்: reasonable என்கிற சொல் reasonயிருந்து வருது.
Reason என்றால் பகுத்தறிவு. பழைய காலத்தில பகுத்தறிவோட இருக்கிறதை reasonableன்னு சொன்னாங்க. இப்போ நியாயமா, ஏற்புடையதா இருக்கிறதை reasonableன்னு சொல்றோம். அதே போல க்ழ்ன்ய்ந் உடைய டெக்னிக்கலான சொல் தான் intoxication. Intoxicated ன்னு போதையா இருக்கிற ஒரு ஆளைச் சொல்லலாம். அதே போல இன்னொரு டெக்னிக்கலான சொல் தான் inebriated.
குடிகாரன்: (புரொபஸரின் கையிலுள்ள தினசரியை வாங்கி வாசிக்கிறான்) Ceiling at Chennai international airport collapsed. அதென்ன இண்டர்நேஷனல் விமான நிலையம்? விமான நிலையம்னாலே சர்வதேச விமானங்கள் வரத்தானே செய்யும்? வெறும் சென்னை ஏர்போர்ட் தானே சரி?
புரொபஸர்: international airportங்கிறது ஒரு misnomer
கணேஷ்: misnomer ஆ? அப்படின்னா என்ன சார்?
புரொபஸர்: தவறா ஒரு பெயர் வந்துடறது. இப்போ கோலா கரடி உண்மையில கரடி இல்ல. Star fish அது மீன் இல்ல. கடலையை peanutனு சொல்லுவாங்க. அது கொட்டை இல்ல. அது பயிறு வகை. அது மாதிரி coconut கூட nut இல்ல. இந்தியர்களைத் தேடி போன கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிச்சார். அங்குள்ள கறுப்பர்களைப் பார்த்து இந்தியர்கள்னு நினைச்சிட்டார். அதனால ரொம்ப நாள் கறுப்பர்களை ஐய்க்ண்ஹய்ள் ன்னு தான் அழைச்சு வந்தாங்க. அது போல தப்பா அழைக்கிறது தான் மிஸ்னோமர்.
கணேஷ்: நான் படிச்சிருக்கேன் சார். கொலம்பஸ் invented அமெரிக்கா
புரொபஸர்: அது discovered. inventன்னா புதுசா கண்டுபிடிக்கிறது. டிஸ்கவர்னா பழசைப் புதுசாக் கண்டுபிடிக்கிறது. அமெரிக்கான்னு ஒரு நாடு இருந்ததுன்னு கொலம்பஸ் அங்க போறது வரை ஐரோப்பியர்களுக்குத் தெரியாது. அதனால் டிஸ்கவர்.
கணேஷ்: டிஸ்கவர்
புரொபஸர்: அந்த வார்த்தையை dis+coverன்னு பார்க்கலாம்.
கவர் அதாவது திரையை நீக்கிறது. திரையை நீக்கினதும் அதுவரை மறைஞ்சு இருந்தது வெளியே வந்துடும். Uncover, unveil மாதிரி சொற்கள் இருக்கு. புதுசா ஒரு விசயத்தை, ரகசியத்தை வெளிப்படுத்துறது.
கணேஷ்: நான் இப்போ ஆராய்ச்சி பண்ணி ஒரு புது தாவர வகையைக் கண்டுபிடிச்சா அது டிஸ்கவர். ஒரு ரகசியத்தை வெளிப்படுத்தினா அது uncover. ஜூலி ஆம்பிளைன்னு கண்டுபிடிச்ச மாதிரி.
புரொபஸர்: இப்போ atom, அதாவது அணு, அதை ஜோசப் தாம்ஸன் கண்டுபிடிக்கிறார். அதாவது he discovered atom. ஆனா அணு குண்டை கண்டுபிடிச்சவரு Einstein invented atom bomb. ஏன்னா அது ஏற்கெனவே இயற்கையில இல்ல. அவரு தான் உருவாக்கினாரு. இதில பாரு இந்த atom அப்டீங்கிறது ஒரு மிஸ்னோமர்
கணேஷ்: ஏன்?
புரொபஸர்: atom அப்டீங்கிற வார்த்தை ஒரு கிரேக்க மூலச் சொல்லில் இருந்து வருது. அதோட பொருள் பிளக்க முடியாதது அப்டீங்கிறது. ஆனா அணுவைப் பிளக்க முடியுங்கிறது நமக்கெல்லாம் தெரியுமே. ஆனாலும் நாம ஒரிஜினலான பிளக்க முடியாதது என்கிற அர்த்தத்தில தான் அதை அழைக்கிறோம்.
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...