புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வாங்க... இங்கிலீஷ் பேசலாம்: 3

ரொபஸரும் கணேஷுமாக ஒரு நடைபாதை கடையில் இளநீர் குடிக்கிறார்கள். அங்கே மூலையில் அமர்ந்திருக்கிற லுங்கி அணிந்த ஒருவன் அவர்களைப் பார்த்து கையசைக்கிறான். புரொபஸரும் கையசைக்க அவன் அவர்கள் அருகே வருகிறான்.

News image
Updated On :28 செப்டம்பர் 2015, 4:15 pm

ஆர்.அபி​லாஷ்

ரொபஸரும் கணேஷுமாக ஒரு நடைபாதை கடையில் இளநீர் குடிக்கிறார்கள். அங்கே மூலையில் அமர்ந்திருக்கிற லுங்கி அணிந்த ஒருவன் அவர்களைப் பார்த்து கையசைக்கிறான். புரொபஸரும் கையசைக்க அவன் அவர்கள் அருகே வருகிறான்.

புரொபஸர்: டேய் கணேஷ், இவன் தான் வேலையற்றவன். என் பழைய ஸ்டுடெண்ட். ஆழ்ண்ப்ப்ண்ஹய்ற். ஆனால் வேலைக்கே போக மாட்டான்

வேலையற்றவன்: ஹலோ கணேஷ், சார் சொல்றதை நம்பாதீங்க. வேலை இல்லாம இருக்கிறதே பெரிய வேலைங்க. எவ்வளவு யோசிக்கிறேன்?

புரொபஸர்: எதைப் பத்தி

வேலையற்றவன்: என்னெல்லாம் செய்யலாங்கிறதை பத்தி?

புரொபஸர்: அதைச் செஞ்சாலே வேலைதானேடா?

வேலையற்றவன்: யோசிக்கிறதும் வேலைதான் சார். அது மட்டுமில்ல, ஒவ்வொரு நாளும் என்னவெல்லாம் செஞ்சு வேலையில்லாம இருக்கலாமுன்னு பிளான் பண்றதுக்குள்ள டயர்ட் ஆகிடுது. ரொம்ப கஷ்டமான வேலை, வேலையில்லாம இருக்கிறது

கணேஷ்: சார் இவரை joblessன்னு சொல்லலாமா?

புரொபஸர்: ஆமா. The joblessன்னு இவனைப் போல எல்லா வேலையில்லாதவங்களையும் சேர்த்து சொல்லலாம். ஒரு the சேர்க்கணும் மறக்காம.

கணேஷ்: அப்போ சார் வேலை இருக்கிறவனை jobbedன்னு சொல்லலாமா?

வேலையில்லாதவன்: அப்பிடீன்னா உன்னை யாரோ ஏமாத்தீட்டாங்கன்னு பொருள். You were jobbed by a conman

புரொபஸர்: அது மட்டுமில்ல. ஒரு கத்தியால குத்துறதை தான் he jobbed a knife at my throatன்னு சொல்லலாம். பங்கு சந்தையில பங்கை வாங்கி விக்கிறது கூட jobbing தான். நீ கேட்டதுக்கு வரேன். I am in a jobன்னு சொல்லணும்

வேலையற்றவன்: bank jobனா ரெண்டு மீனிங் இருக்கு தெரியுமா?

கணேஷ்: என்ன?

வேலையற்றவன்: ஒண்ணு வங்கியில செய்யற வேலை. இன்னொண்ணு வங்கிக் கொள்ளை. They did a bank job வங்கி கொள்ளை அடிச்சாங்கன்னும் பேச்சு வழக்கில் பொருள் உண்டு.

கணேஷ்: சார் hot, heat ரெண்டுக்கும் என்ன சார் வித்தியாசம்?

புரொபஸர்: Hotனா adjective. அதாவது சிவப்பு ரோஜான்னா அதில் சிவப்பு adjective. Heat பெயர்ச் சொல். அதை வினைச்சொல்லாவும் பயன்படுத்தலாம்

கணேஷ்: warmனா என்ன சார்?

புரொபஸர்: வார்ம்னா கதகதப்பு. மழை பெஞ்சு குளிரா இருக்கிறப்ப சூடா டீ கப்பை கையில வச்சிருந்தா நல்லா இருக்குமில்லியா அதான் warm. அப்பிடி இருக்கிற நிலை warmth. Noun. பெயர்ச் சொல். அதாவது ற்ட் சேர்த்ததும் அது பெயர்ச் சொல் ஆகிடுது

கணேஷ்: I extend a warm welcomeன்னு சொல்றாங்களே சார்? அது என்ன?

புரொபஸர்: அது வேறெ. ஜ்ஹழ்ம்க்கு இன்னொரு பொருள் நட்பு, அன்பு. He is warm towards usன்னு சொல்லலாம். ரொம்ப அன்பா அனுசரணையா இருந்தார்னு அர்த்தம். Warm welcomeனா அன்பான வரவேற்பு.

கணேஷ்: சார் warm up

புரொபஸர்: ஆமா விளையாட்டுக்கு, உடற்பயிற்சிக்கு முன்னாடி we warm up. வார்ம் அப் ரொம்ப முக்கியம். புரூஸ் லீ தெரியும் இல்லியா?

கணேஷ்: ஆமா சார் குங் பூ வீரர். Enter the Dragon

புரொபஸர்: அந்த புரூஸ் லீ வார்ம் அப் பண்ணாம உடற்பயிற்சி செய்த போது முதுகு காயம் ஏற்பட்டு ஒரு வருஷம் படுத்த படுக்கையா இருந்தார்.

கணேஷ்: புரூஸ் லீக்கு கூடவா?

கணேஷ் (காற்றில் குத்தியபடி கேட்கிறான்): சார் இப்பிடி குத்துறதை இங்கிலீஷ்ல எப்பிடிச் சொல்றது?

புரொபஸர்: punch

கணேஷ்: சார் கிரிக்கெட் கமெண்டிரில யாராவது ஷாட் அடிச்சா packs a punchன்னு சொல்றாங்களே, அது என்ன?

புரொபஸர்: வலுவா அடிக்கிறதுன்னு அர்த்தம். அது மட்டுமில்ல மொபைல்ல பட்டனை தட்டறது கூட punching தான். ஓட்டை போடறதைக் கூட punching a holeன்னு சொல்லலாம். தனியார் அலுவலகத்தில் வேலை செய்றேன்னா உள்ளே நுழைஞ்சதும் ஐடி கார்டை மெஷின்ல காமிச்சு அட்டெண்டென்ஸ் போடணும். அதுவும் punching தான்

கணேஷ்: எங்க ஹாஸ்டல்ல punch party நடத்தினாங்க.

புரொபஸர்: அதுவா டிரிங்க்ஸ் கூட ஜூஸ் எல்லாம் கலந்து செய்வாங்க. நீ அந்த பார்ட்டிக்கு போனியா, என்ன?

கணேஷ்: இல்ல சார்... இல்லவே இல்ல. சார் நான் என்னோட அரியர் பேப்பர் எல்லாம் ஒரேயடியா போனவாட்டி எழுதி கிளியர் பண்ணினேன். அதுக்கு என்னோட புரொபஸர் என்னைப் பார்த்து ஹ்ர்ன் you certainly punched above your weightன்னு சொன்னார். நான் ஒண்ணும் புரியாமல் சிரிச்சிட்டு வந்துட்டேன்.

வேலையற்றவன்: டேய்... நீ எல்லாம் கூடவா பாஸ் பண்ணீட்டே?ன்னு அதுக்கு அர்த்தம்.

கணேஷ்: (சோகமாய்) அப்பிடியா சார்?

புரொபஸர்: கிட்டத்தட்ட. அதாவது எதிர்பாராம நாம் நம்மை திறமைக்கு மீறி எதையாவது சாதிச்சிட்டோமுன்னா அது punching above the weight.

கணேஷ்: சார் எனக்கு இந்த punching above the weight புடிக்கல?

புரொபஸர்: சரி விட்டுடு

(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.