ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம்... 33

புரொபஸரும் கணேஷும் எல்.ஐ.சி அலுவலக வரவேற்பறையில் இருக்கிறார்கள். உள்ளே ஏழைத் தோற்றத்தில் பலர் பாவமாய் இருக்கைகளில் அமர்ந்து எதற்கோ காத்திருக்கிறார்கள். புரொபஸர் தன் கண்ணாடியைத் திரும்பத் திரும்ப துடைத்துப் போட்டுப் பார்க்கிறார்.

News image
Updated On :25 ஏப்ரல் 2016, 4:27 pm

ஆர்.அபி​லாஷ்

புரொபஸரும் கணேஷும் எல்.ஐ.சி அலுவலக வரவேற்பறையில் இருக்கிறார்கள். உள்ளே ஏழைத் தோற்றத்தில் பலர் பாவமாய் இருக்கைகளில் அமர்ந்து எதற்கோ காத்திருக்கிறார்கள். புரொபஸர் தன் கண்ணாடியைத் திரும்பத் திரும்ப துடைத்துப் போட்டுப் பார்க்கிறார்.

கணேஷ்: என்னாச்சு சார்?

புரொபஸர்: Everything appears fuzzy. Fuzzன்னா எதுவுமே தெளிவா தெரியாம மூட்டமா இருக்கிறது. ஆப்ன்ழ்ழ்ங்க்ன்னும் சொல்லலாம். அதோ நமக்கு எதுத்தாப்பில ஜடை நாய் மாதிரி முடி வச்சுட்டு ஒரு பொண்ணு இருக்குதே?

கணேஷ்: ஆமா சார் பாலைவனச் சோலை மாதிரி. இந்த பொண்ணை இதுவரை நான் கவனிக்கலையே

புரொபஸர்: நான் சொல்றதைக் கவனி. அவளோட முடி நுனி பாரேன்... குத்துச்செடி மாதிரி நிக்குதே இதையும் fuzzyன்னு சொல்லலாம் Frizzy hairன்னும் சொல்லலாம்.

கணேஷ்: ஆமா சார்... நீங்க சொன்ன பிறகு அந்த பொண்ணைப் பார்க்க கொஞ்சம் பயமா தான் இருக்கு.

கணேஷ் அவரது கண்ணாடியை வாங்கிப் பார்க்கிறான்.

கணேஷ்: சார் இது முழுக்க அழுக்கா இருக்கு (கண்ணாடியை தூக்கி வெளிச்சத்தில் பார்க்கிறான்) உங்க விரல் ரேகையெல்லாம் தெரியுது

புரொபஸர்: It is smudged.

கணேஷ்: அப்படீன்னா?

புரொபஸர்: கைபட்டு கறையாகிறது. இப்போ நாம இங்க் பேனாவால எழுதின உடனே அதில கைபட்டா அழிஞ்சி அந்த இடமே கறையாகுமே அது தான் smudging. ஒரு கொலை நடந்த வீட்டில ரத்த துளி விழுந்து அதை தேய்ச்சு விட்ட மாதிரி தடம் இருக்குன்னா அதை smudge of bloodன்னும் சொல்வாங்க.

கணேஷ்: சார் உங்க பிரீமியம் தொகையை பேசாம ஆன்லைன்லேயே கட்டலாமே? எதுக்கு இவ்வளவு தூரம் அலயணும்?

புரொபஸர்: அப்படி இல்லடா. என் ஃபிரண்டு பக்ஷிராஜன் இங்க தான் கிளர்க்கா இருக்கான். இங்க வந்தா அவனையும் பார்த்திட்டு போயிடுவேன். ரொம்ப தமாஷான பேர்வழி. வா நாம உள்ளே போலாம்.

இருவரும் உள்ளே போகிறார்கள். வழியில் ஓர் அறிவிப்புப் பலகையைக் கண்டு கணேஷ் நிற்கிறான். அதை அவன் படிக்கிறான்.

கணேஷ்: LIC Express Death Claim Settlement Counterஐ அணுகவும். சார் இதுக்கு மேலே தமிழில் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கான பாலிசித் தொகை உடனடியாய் கொடுக்கிறதா போட்டிருக்காங்க.

புரொபஸர்: ஆனா இங்கிலீஷ்ல போட்டிருக்கிறதை படிச்சா பயமா இருக்கில்ல?

கணேஷ்: ஆமா சார்... எக்ஸ்பிரஸ் ரயில் மாதிரி எக்ஸ்பிரஸ் death

claimன்னா விரைவில் சாகிறவங்களுக்கு பணம் கொடுப்போங்கிற மாதிரி அர்த்தப்படுது. நான் முதலில் படிச்சப்போ அப்படித் தான் நினைச்சேன். தமிழில் படிச்ச பிறகு தான் வெள்ளத்தில் உயிரிழந்தவங்களுக்கு சீக்கிரமே காப்பீட்டுத் தொகை வழங்குறதா

புரிஞ்சிக்கிட்டேன்.

புரொபஸர்: யெஸ். இந்த குழப்பத்தை ஒரு சின்ன hyphen போடறது மூலமா சரி பண்ணிடலாம்.

கணேஷ்: Hyphenன்னா?

புரொபஸர்: T-shirt என்கிற வார்த்தைக்கு நடுவில் ஒரு சின்ன கோடு வருதில்லையா அது தான் ஹைபன். அது இரண்டு வார்த்தைகளைச் சேர்த்து ஒரே வார்த்தையாக்குறதுக்கும் பக்கத்தில் இருக்கிற சொற்கள் வெவ்வேறு என காட்டுறதுக்கும் பயன்படும். உதாரணமா, செயற்கையான சர்க்கரை கேள்விப் பட்டிருக்கியா?

கணேஷ்: ஆமா சார்... sugar free.  சர்க்கரை நோய் இருக்கிறவங்க பயன்படுத்துவாங்களே?

புரொபஸர்: ரைட். இப்போ உனக்கு ஷுகர் ஃப்ரீ போட்ட காப்பி வேண்டும். அதை sugar free coffee  ன்னு எழுதினா காப்பி இலவசம்னு பொருள் வந்திடும். அதாவது சர்க்கரை தனியா, இலவச காப்பி தனியா என்கிற மாதிரி தோன்றும். இதைத் தவிர்க்க ஷுகர் பக்கத்தில ஒரு ஹைபன் போட்டு அதையும் ஃப்ரீயையும் சேர்த்து sugar-free coffeeன்னு எழுதலாம். இனி குழப்பம் இருக்காது.

கணேஷ்: சூப்பர் சார். ஆனா இந்த வெள்ள நிவாரண காப்பீட்டு அறிவிப்பை இது போல சரி பண்ண முடியுமா?

புரொபஸர்: LIC Express Death Claim Settlement Counter என்பதில் death claim நடுவில் ஹைபன் போட்டுட்டா தெளிவாயிடும். LIC Express Death-claim Settlement Counter. இப்போ ஈங்ஹற்ட்-ஸ்ரீப்ஹண்ம் அதற்கு அடுத்து வருகிற Settlement Counter எதற்கானதுன்னு உபரித் தகவல் தருகிற adjective ஆகி விடும். காப்பீட்டை செட்டில் பண்ணுகிற counterன்னு புரிஞ்சிக்கலாம்.

(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.