வாங்க... இங்கிலீஷ் பேசலாம்... 22
நெரிசலான தெருவொன்றின் முனையில் ஓர் அலுவலகம் முன்பு நீண்ட வரிசை. அதன் இறுதியில் புரொபஸர் கையில் சில டாக்குமெண்ட்களுடன் நிற்கிறார்.


நெரிசலான தெருவொன்றின் முனையில் ஓர் அலுவலகம் முன்பு நீண்ட வரிசை. அதன் இறுதியில் புரொபஸர் கையில் சில டாக்குமெண்ட்களுடன் நிற்கிறார். பக்கத்தில் ஒரு சின்ன ஓட்டல். அதன் அருகே குப்பைத் தொட்டி, அதன் பக்கத்தில் நாய் ஜூலி ஒய்யாரமாய் படுத்திருக்கிறது. அவ்வழியாய் வரும் கணேஷை ஜூலி விசிலடித்து அழைக்கிறது.
ஜுலி: why do you hang around here young man?
கணேஷ்: HangB?
ஜூலி: தட் மீன்ஸ் ஏன் வேலை வெட்டியில்லாம இங்க சுத்துறேன்னு அர்த்தம்.
கணேஷ்: நீ என்ன பண்றே?
ஜூலி: குப்பைத்தொட்டியில எச்சில் இலை விழறதுக்காக வெயிட் பண்றேன்
கணேஷ்: ச்சீ...
ஜூலி: இலையில இருந்து சால்னா நக்கி சாப்பிட்டிருக்கியா? அந்த டேஸ்ட் உனக்குப் புரியாது.
கணேஷ்: நான் கௌம்பறேன்
ஜூலி: No, just stick around.
கணேஷ்: இதுவும் புரியல.
ஜூலி: ஒரு எடத்துல தொடர்ந்து இருக்கிறது தான் sticking around. உன்னோட லவ்வரை காலேஜில் பார்த்தா என்ன பண்ணுவ? அவ உன்னைக் கவனிக்கிற வரைக்கும் you stick around.
கணேஷ்: அது சரி. இப்போ இங்க எனக்கென்ன வேலை?
ஜூலி: உன் புரொபஸர்... அதோ நிக்கிறாரே கவனிக்கல. போ. போய் எதாவது கத்துக்கோ
கணேஷ்: சார் என்ன பண்ணுறாரு இங்கே?
ஜூலி: நீயே போய் கேளு. He is there to grab his share of peanuts
கணேஷ்: வேர்க்கடலை கொடுக்கிறாங்களா?
ஜூலி: சொற்ப தொகைக்காக தேவையில்லாம சிரமப்படுறது தான் working for peanuts. Your professor is standing queuing up for his peanuts.
கணேஷ் புரொபஸர் அருகே செல்கிறான்.
கணேஷ்: என்ன சார் இங்கே?
புரொபஸர்: வெள்ள நிவாரண தொகை வாங்க வந்திருக்கேன்
கணேஷ்: உங்க வீட்டுப் பகுதிக்கு வெள்ளம் வரலையே சார்?
புரொபஸர்: கையில வர லட்சுமியை வேணாமுன்னு சொல்லக் கூடாது. குடுத்தா வாங்கிக்கணும்.
கணேஷ்: ஒகே சார். நானும் உங்க கூட நிக்கிறேன். சார் queuing upன்னா என்ன?
புரொபஸர்: க்யூ வரிசையில நிக்கிறது. (புரொபஸர் தன் கையில் உள்ள நாளிதழை புரட்டி படிக்கிறார்) juvenile act amendment பத்தி பிருந்தா காரத் கட்டுரை பார்த்தியா?
கணேஷ்: படிச்சேன் சார். அதில ஒரு டவுட். the political parties resiled from their earlier stand அப்டீன்னு ஒரு வரி வருது. தங்ள்ண்ப்ங்ன்னா என்ன
புரொபஸர்: குட். இப்பிடி ஒரு சந்தர்ப்பத்தை வச்சு ஒரு புது சொல்லை தெரிஞ்சிக்கிறது நல்லது. மறக்காது. தங்ள்ண்ப்ங்ன்னா நம்முடைய நிலைப்பாட்டில் இருந்து மாறுவது. நான் இன்னிக்கு மதுவுக்கு எதிரான ஆள்னு என்னை காட்டிக்கிறேன். நாளைக்கு காலையில டாஸ்மாக் வாசல்ல போய் நின்னு குடிக்கிறேன்னா I resile from my position of banning alcohol. இந்த கட்டுரையில பிருந்தா காரத் எப்பிடி அரசியல் கட்சிகள் மக்களோட உணர்ச்சிக்கு இணங்கி 18 வயதுக்குக் குறைவான சிறார்களைச் சிறைக்கு அனுப்பக் கூடாதுங்கிற தங்களோட கொள்கையை கைவிட்டாங்கன்னு சொல்றாங்க. தங்ள்ண்ப்ங் ஓர் அழகான வார்த்தை. ரப்பர் பேண்டை இழுத்தா என்னாகும்?
கணேஷ்: நீளமாகும் சார்
புரொபஸர்: It stretches. ஆனால் விட்டுட்டோமுன்னா என்னாகும் பழையபடி ஆகிடும். அப்பிடி சுருங்கிறது தான் resiling. நம்ம அரசியல்வாதிகள் ரப்பர் பேண்ட் மாதிரி. They stretch and then they resile. இப்பிடி திரும்ப சுருங்கிறதை நாம rebound, recoil, spring backன்னும் சொல்லலாம்.
கணேஷ்: சார் நாம இப்போ இங்க நிக்கிறதை ரங் ள்ற்ஹய்க்ன்னு சொல்லணுமா? we are standing
புரொபஸர்: I have been standingன்னு சொல்வேன். ஏன்னா நான் காலைய எட்டு மணியில இருந்தே நிக்கிறேன். ஆனா நாம இப்போ நின்னுக்கிட்டு மட்டும் இருக்கிறதை நீ சொன்னபடி ரெண்டு விதமாகவும் சொல்லலாம். ஆனால் நாம நின்னுகிட்டு இருக்கும் போது இங்க ரோட்ல ஒரு விபத்து நடக்குது. ஒரு சைக்கிள்ல வந்த பையன் ஒரு பாட்டி மேல மோதிடறான். அப்போ As we are standing a boy riding his cycle knocks over an old womanன்னு சொல்லலாம்.
கணேஷ்: சார் ள்ல முடிஞ்சால் resent tenseன்னு சொன்னீங்க. Knocksக்கு பதிலா knocked சொல்லலாமா?
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...