தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய... உதவும் இணையதளம்!

உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை இலவசமாகச் சந்தைப்படுத்த தனி இணைய தளம் தேசிய சிறுதொழில் கழகத்தால் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

Updated On :23 பிப்ரவரி 2016, 11:55 am

உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை இலவசமாகச் சந்தைப்படுத்த தனி இணைய தளம் தேசிய சிறுதொழில் கழகத்தால் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

ஒரு பொருளை உற்பத்தி செய்து விட்டு அதனை மற்றவர்களை வாங்கச் செய்வது என்பது தற்போதைய கால கட்டத்தில் மிகப்பெரிய சவாலாக உள்ளது. சந்தைப்படுத்துவது என்பது தொழில் நிறுவனங்களுக்கு முக்கிய பணியாக உள்ளது. அதற்காக விளம்பரங்கள், இலவசங்கள், சலுகைகள் என பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சந்தைப்படுத்துவதில் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு அதற்காக தனி இணைய தளத்தை மத்திய அரசின் அமைப்பான தேசிய சிறுதொழில் கழகம் உருவாக்கியுள்ளது.

தேசிய சிறு தொழில் கழகம் குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தேசிய சிறுதொழில் கழகத்தில் பதிவு செய்த தொழில் முனைவோருக்கு அரசு பொதுத்துறை நிறுவனங்களின் கொள்முதல் ஏல அறிவிப்புகள், அதற்கான படிவங்களை இலவசமாக வழங்குகிறது. அதற்கான ஏலத்தில் பங்கேற்க செலுத்த வேண்டிய தொகையை செலுத்துவதிலிருந்தும் விலக்கு அளிக்கிறது.

அதே போல மூலப்பொருட்களை குறைந்த விலையில் தொழில் முனைவோருக்கு வாங்கித் தரும் பணியையும் தேசிய சிறு தொழில் கழகம் செய்து வருகிறது. விற்பனையாளர் - கொள்முதல் செய்பவர் சந்திப்புக் கூட்டங்களை நடத்தி வருகிறது.

மேலும் தொழில் முனைவோருக்கு தேவையான கடனுதவிகளையும் குறைந்த வட்டி விகிதத்தில் பெற்றுத் தருகிறது. தொழில் நுட்ப உதவிகளையும், அதற்கான ஆலோசனைகளையும் வழங்குகிறது.

இவ்வாறான பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் உற்பத்தி செய்த பொருட்களை இலவசமாகச் சந்தைப்படுத்தவும் தேசிய சிறு தொழில் கழகம் தனி இணைய தளத்தை உருவாக்கியுள்ளது. விற்பனை செய்பவர்களுக்கு எனத் தனி இணையதளமும், வாங்குபவர்களுக்கு எனத் தனி இணையதளத்தையும் உருவாக்கியுள்ளது. அந்த இணைய தளத்தில் பொருட்களைச் சந்தைப்படுத்த முதலில் தேசிய சிறுதொழில் கழகத்தின் அந்த இணைய தளத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய வேண்டும். அதற்கென உள்ள தனி படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து அதற்குத் தேவையான ஆவனங்களை அதனுடன் சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு தொழில் முனைவோர் உற்பத்தி செய்யும் பொருட்களின் விவரங்கள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அந்த இணையதளத்தைப் பார்வையிடுபவர்கள் அந்த பொருட்களைப் பார்த்து வாங்குவதற்கு இது ஒரு வாய்ப்பாக உள்ளது.

பொருட்களை வாங்குபவர்களுக்காக உருவாக்கப்பட்ட இணைய தளத்திலும் உறுப்பினராகப் பதிவு செய்து கொண்ட பிறகு அந்த இணைய தளம் வாயிலாக தொழில் முனைவோர் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம்.

மேலும் விவரங்களுக்கு: www.nsic.co.in, www.msmemart.com, www.msmeshopping.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.