சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பிளாஸ்டிக் துறையில் இலவசப் பயிற்சி!

எங்கும் பிளாஸ்டிக், எதிலும் பிளாஸ்டிக் என்றாகிவிட்ட நிலையில் அது சம்பந்தமான தொழில்களில் நல்ல வாய்ப்புகள் உள்ளன.

News image
Updated On :29 பிப்ரவரி 2016, 12:49 pm

எங்கும் பிளாஸ்டிக், எதிலும் பிளாஸ்டிக் என்றாகிவிட்ட நிலையில் அது சம்பந்தமான தொழில்களில் நல்ல வாய்ப்புகள் உள்ளன. அதனால் அது சம்பந்தமான தொழில் செய்வதற்கு உரிய பயிற்சியினைப் பெற வேண்டியது அவசியம். மத்திய அரசின் பிளாஸ்டிக் தொழில் நுட்ப நிறுவனத்தில் அது சம்பந்தமான இலவச பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. சென்னையில் உள்ள அந்த நிறுவன மையத்தில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 18 வயது முதல் 35 வயது வரை உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட, ஆதிதிராவிட, மலைவாழ் மக்கள் இந்த பயிற்சியைப் பெறலாம். இப்பயிற்சிகள் தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பாக வழங்கப்படுகிறது.

1. பிளாஸ்டிக் தயாரிப்பு இயந்திரம்

இயக்குபவர் பயிற்சி

பயிற்சிக் காலம்: 6 மாதம்

கல்வித் தகுதி : 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்ச்சி அல்லது தேர்ச்சியின்மை

2. இஞ்ஜங்ஷன் மோல்டிங் இயந்திரம்

இயக்குபவர் பயிற்சி

பயிற்சிக் காலம்- 6 மாதம்

கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்ச்சி அல்லது தேர்ச்சியின்மை

3. பிளாஸ்டிக் தயாரிப்பு தொழில் நுட்பம்

பயிற்சிக் காலம்: 6 மாதம்

கல்வித் தகுதி : கலை, அறிவியல் பட்டம்

4. ஆட்டோகேட் பயன்படுத்தி பிளாஸ்டிக்

மோல்டுகள் தயாரிப்பு

பயிற்சிக் காலம்: 4 மாதம்.

கல்வித் தகுதி : பட்டயப் படிப்பு

5. சிஎன்சி மில்லிங், லேத், சிடிஎம் ஆகிய மெஷின்

ஆபரேஷன் புரோகிராமிங்

பயிற்சிக் காலம்: 3 மாதம்

கல்வித் தகுதி : ஐடிஐ மிஷினிஸ்ட் (அ) பட்டயப்படிப்பு

மேலும் இதுகுறித்த தகவல்கள், அவ்வப்போது நாளிதழ்களில் விளம்பரம் வாயிலாக வெளியிடுகின்றனர்.

மேலும் தகவல்களுக்கு:

மத்திய பிளாஸ்டிக் தொழில் நுட்ப நிறுவனம், கிண்டி தொழில் பூங்கா, சென்னை - 600 032.

தொலைபேசி: 044 2225 478.

இணைய தளம்: cipet.gov.in

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.