

ரொபஸரும் கணேஷும் பைக்கில் சைதாப்பேட்டைக்குச் செல்கிறார்கள்.
கணேஷ்: சார் நாம எங்க போய்க்கிட்டு இருக்கிறோம்?
புரொபஸர்: என்னோட ஒரு மாணவியைப் பார்க்கப் போறோம். ரெண்டு நாளா அவ கிளாசுக்கு வரல.
கணேஷ்: நான் கூடத் தான் போன வாரம் ரெண்டு நாள் கிளாசுக்கு வரல. நீங்க கண்டுக்கவே இல்ல?
புரொபஸர்: உன்ன மாதிரி இல்ல. அவள் ஒருநாள் கூட லீவ் போட்டதில்ல. She does not bunk a single class you know
கணேஷ்: பங்கா?
புரொபஸர்: bunkன்னா வகுப்புக்கு மட்டம் போடுறது.
கணேஷ்: சரி தான். பொண்ணுங்கன்னாலே உங்களுக்கு ஸ்பெஷல் தான்.
புரொபஸர்: அதில்லடா, அவளோடது ரொம்ப poor family. ஏதாவது பிரச்னையோன்னு பயப்படுறேன். சரி, இப்போ நாம எங்கே போறோமுன்னு சொல்லு?
கணேஷ்: அந்த பொண்ணு வீட்டுக்கு
புரொபஸர்: இங்கிலீஷ்ல முழு வாக்கியமாச் சொல்லு
கணேஷ்: We go to the girls house CpXôh¥ We will go to the girls house.
புரொபஸர்: இல்ல. We are going to the girls houseன்னு சொல்லணும்.
கணேஷ்: என் பாட்டில் என்ன குற்றம் கண்டீர்? சொல் குற்றமா? பொருள் குற்றமா?
புரொபஸர்: சொல் குற்றம் தான். அதனால பொருள் சரியா வரல. இப்போ I meet herன்னு சொன்னா நான் அவளைச் சந்திக்கிறேன்னும் அர்த்தம் இருக்கும், அவளை நான் சந்திக்கப் போறேன்னும் அர்த்தம் இருக்கும். சரியா?
கணேஷ்: ஒகே
புரொபஸர்: I am going to meet herன்னா நீ முன்கூட்டியே திட்டமிட்டு அவளைச் சந்திக்கப் போறேன்னு அர்த்தம். இப்போ அந்தப் பெண்ணை பார்க்க போறதா நான் முடிவு செஞ்சு உன்னை அங்க அழைச்சிட்டுப் போகச் சொல்றேன். அதனால பிளான் பண்ணின மீட்டிங்கிறதால We are going to the girls house தான் சரியா இருக்கும்.
கணேஷ்: சார் நீங்க சொல்றது தப்பு.
புரொபஸர்: என் கிட்டயேவா? சொல்லு.
கணேஷ்: நாம அங்க போறோமுன்னு தெரிஞ்சு தானே போறோம். எதேச்சையா போகலையே. We go to the girls houseன்னு சொன்னாலும் அங்க முன்கூட்டிய பிளான் இருக்கே.
புரொபஸர்: நல்ல கேள்வி. ஆனா ரெண்டுக்கும் ஒரு சின்ன வித்தியாசம் இருக்கு. நீ வீட்ல இருக்கும் போது பெல் அடிக்குது. உன் அம்மா யாருன்னு பாருடான்னு சொல்றாங்க. நீ சரிம்மா நான் போறேன்னு சொல்றே. அங்க I will go and checkன்னு சொல்றது சரி. ஏன்னா அப்போ நடக்கிற சம்பவங்களை வைத்து நீ உடனடியா எடுக்கிற முடிவு அது. காபி போடலாமுன்னு நினைக்கும் போது பால் தீர்ந்து போயிடுது. வெளியே போய் வாங்கி வரலாமுன்னு கிளம்புற. அப்போ I will go and get milk சரியா இருக்கும். ஆனா உன்னோட நண்பனோட திருமணத்துக்குப் போற. அன்னிக்குத்தான் திருமணமுன்னு உனக்கு முன்கூட்டியே தெரியும். அது நீ உடனடியா எடுத்த முடிவு இல்ல. யாரிடமோ பேசிக் கொண்டிருக்கும் போது சரி வா ஒரு திருமணத்துக்கு போகலாமுன்னு சொல்ல மாட்டோம். திட்டமிட்டுச் செய்யிற எதிர்காலச் செயல் என்பதால் அங்க I am going to my friends marriageன்னு சொல்றது தான் சரி. நான் உன்னிடம் அந்த மாணவி வீட்டுக்கு போகலாமுன்னு சொன்னதும் நீ சரின்னு கிளம்பறே. நாம பேசும் போது தான் நீ முடிவு பண்றே. அதுக்கு முன்னாடி இல்ல. உனக்கு I will go to her house சரியா இருக்கலாம். ஆனா நான் முன்கூட்டியே திட்டமிட்டு அங்க போறேன். எனக்கு I am going to her house தான் சரி.
கணேஷ்: சார் இந்த இரண்டு வாக்கியங்களுக்கும் இடையில் இவ்வளவு நுணுக்கங்கள் இருக்குதா?
புரொபஸர்: நிச்சயமா. வினைச்சொற்களோட பிரதான நோக்கமே நம் மனநிலையைத் துல்லியமா பிரதிபலிக்கிறது தான்.
கணேஷ்: சார் நாம ரெண்டு பேருமா சேர்ந்து போகும் போது We will go to சரியா? We are going to சரியா?
புரொபஸர்: நாம சேர்ந்து போனாலும் நான் தானே வழி நடத்துகிறேன். அதனால் என் வாக்கியத்தை தான் நமக்கானதா பயன்படுத்தணும்.
கணேஷ்: சார் வரும் தேர்தலில் அ.தி.மு.க ஜெயிக்குமாங்கிறதை எப்படிச் சொல்றது?
புரொபஸர்: சொல்றேன். முதல்ல வண்டியை நேராப் பார்த்து ஓட்டு
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கைகட்டி நின்றவர் இன்று எங்கள் இயக்கத்திற்கு அறிவுப் பரிசோதனைப் பற்றி பேசுகிறார் - சேகர்பாபு

பயணிகளின் வாகன விலையை உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்!

ஐபிஎல் தொடருக்கான பயிற்சியைத் தொடங்கிய விராட் கோலி; புதிய சாதனைகள் படைப்பாரா?

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
வீடியோக்கள்

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

