மேலும் நடப்பு நிகழ்வில் தேர்வுநோக்கில் முக்கியத்துவம் பெற்ற இந்திய அரசியலமைப்பு தொடர்பான ஒரு செய்தியினையும் நாம் அடிக்கடி ஊடகங்களில் காணமுடிந்தது. சமீபத்தில் தமிழ்நாடு, அசாம், சட்டீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் திரிபுரா மாநிலங்களில் வாழ்ந்து வரும் சில இனத்தவர்கள் பழங்குடியினர் பட்டியலில் இணைக்கப்பட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள செய்தியினை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆக, இவை தொடர்பான நடப்புச் செய்தியோடு இந்திய அரசியலமைப்பில் தொடர்புடைய பகுதிகளைத் தொகுத்து குறிப்புகளாக்கிக் கொள்ள வேண்டும். உதாரணம் கீழே: