புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தோட்டக்கலை: சம்பாதியுங்கள் லட்சம் லட்சமாய்!

பெரிய வீடுகள், அலுவலகங்கள், மால்கள் போன்றவற்றின் முன்புறத்தை இயற்கையான மரம், செடி, கொடிகளால் அழகு செய்கின்றனர்.

News image
Updated On :13 ஜூன் 2016, 2:35 pm

ஜெ. வீரநாதன்

பெரிய வீடுகள், அலுவலகங்கள், மால்கள் போன்றவற்றின் முன்புறத்தை இயற்கையான மரம், செடி, கொடிகளால் அழகு செய்கின்றனர். சிறிய அளவு நிலத்தில் கூட அழகு மலர்கள் அல்லது சத்துமிகுந்த இயற்கை உணவு வகைகளை உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு செய்வதை விவசாயத்துறையில் தோட்டக்கலை என்ற பிரிவின் கீழ் வைத்துள்ளனர். தோட்டக்கலை என்பதில் கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வாணிபப் பயிர்களை வளர்த்தல் போன்றனவும் அடங்கியுள்ளன. மேலும் தோட்டக்கலை என்பதன் கீழ், மருத்துவத் தாவரங்களை வளர்த்தல், பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், விதைகள், காளான் வளர்த்தல், மூலிகைகள், மலர்கள் வளர்த்தல், புல் மற்றும் அலங்கார செடிகள் போன்றவற்றைப் பராமரித்தல் போன்றவையும் அடங்குகின்றன.

வீடுதோறும் தோட்டம் போடலாம் என்பது சமீபத்திய முழக்கமாக உருவாகியுள்ளது. வீடுகளில் மொட்டை மாடி இருந்தாலே நல்ல காய்கறிகள், பூக்கள் போன்றவற்றை உற்பத்தி செய்ய முடியும். பெரிய பெரிய தொட்டிகளில் நல்ல மண் வைத்து, அவற்றில் நல்ல உணவுச் செடிகள், பூச்செடிகளை வளர்க்கலாம். நர்சரிகளை உருவாக்கலாம். நல்ல பலன்தரும் மரக்கன்றுகளை வளர்த்து விற்பனை செய்யலாம்.

இதனை நடைமுறைப்படுத்த அதிக உழைப்பை செலவிட வேண்டியதும் இல்லை. காலையிலும் மாலையிலும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்வது போல சில வேலைகளைச் செய்தாலே போதும். களை எடுப்பது, மண்ணைச் சரி செய்வது, நீர்பாய்ச்சுவது, பழுத்த இலைகளை நீக்குவது, விளைந்த காய்,கனிகளை பறிப்பது போன்றவற்றை

பொழுதுபோக்காகச் செய்தாலே போதும். ஒருமுறை தொட்டிகளை அமைத்துவிட்டால், இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பயிர் செய்யலாம்.

நல்ல இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி உற்பத்தி செய்து நமது வீட்டு பயன்பாட்டிற்குப் போக மீதியை அருகில் உள்ளவர்களுக்கும், அதிக அளவில் விளைந்தால் சந்தைக்கே கொண்டு சென்றும் விற்பனை செய்யலாம்.

நல்ல வேலையாட்களை உருவாக்கி ஒரு குழுவாகச் செயல்பட்டால், பெரிய வீடுகள், அலுவலகங்கள், பண்ணைகளில் உள்ள தோட்டங்களை பராமரித்துத் தரலாம். புதிய தோட்டங்களை உருவாக்கிக் கொடுக்கலாம். அதற்கான கட்டணங்களை வருமானமாகப் பெறலாம்.

இந்தத் தோட்டக் கலையை மேம்படுத்த இந்திய நடுவண் அரசு மட்டுமல்லாது,மாநில அரசுகளும் செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளன.

எனவே சரியான நடைமுறைகளை மேற்கொண்டால், இந்தத் தோட்டக்கலை உற்பத்திப் பொருட்களைச் சிறந்த முறையில் ஏற்றுமதியும் செய்ய முடியும்.

இந்தத் தோட்டக்கலையை இந்தியாவில் உள்ள பல்வேறு விவசாயக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் பல்வேறு நிலைகளில் கற்றுக் கொடுக்கின்றனர். சான்றிதழ், பட்டயம், இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் மற்றும் ஆய்வியல் படிப்பாகவும் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன.

தோட்டக்கலைத் தொடர்பான பல்வேறு தகவல்களை நடுவண் அரசின் கீழ் செயல்படும் தேசிய தோட்டக்கலை வாரியத்தின் வலைதளமான http:nhb.gov.indefault.aspx  என்பதில் பார்த்து அறியலாம்.

தோட்டக்கலைக்காக ஒவ்வொரு மாநில அளவிலும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், செயல்பாடுகள், உதவிகள் போன்றவற்றை http://hortnet.gov.in/  என்ற வலைதளத்தில் அந்தந்த மொழியிலும் பார்த்து அறியலாம்.

தோட்டக்கலை பட்டம் முடித்து ஓரிரண்டாண்டு அனுபவம் பெற்றவர்களுக்கு ஆண்டுக்கு 2 முதல் 5 இலட்ச ரூபாய் வரை சம்பளம் பெற்றுத் தரும் வேலை வாய்ப்புகளும் உள்ளதை http:www.naukri.com என்ற வலைதளத்தின் மூலம் அறிய முடிகிறது.

தோட்டக்கலை என்பது பொருளீட்ட உதவும் ஒரு நல்ல வழி. பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்தது. மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும் ஒன்று.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.