வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

இணைய வெளியினிலே!

விழும்போது அம்மா எழும்போது அப்பா காக்கவும்  விழுந்தால் தூக்கவும்  தாய், தந்தையரால் மட்டும் முடியும்.

News image
Updated On :7 மார்ச் 2016, 1:29 pm

விழும்போது அம்மா எழும்போது அப்பா காக்கவும்  விழுந்தால் தூக்கவும்  தாய், தந்தையரால் மட்டும் முடியும்.

- கவிநிலா சூர்யா.

தவறை... தவறாக எண்ணாதவர்களே.. தவறை தவறாமல் செய்து கொண்டிருக்கிறார்கள்.  - சுதன் தம்பி.

புகைப்படம் எடுக்கும் போது ஒரு நண்பனை இழக்க விரும்பாதவன் கண்டுபிடித்ததே செல்ஃபி - திருவாரூர் இளவரசி

நம்ம வாழ்க்கையும் விசாரணை படம் தான். ஏன் அடி வாங்குறோம்? எதுக்கு அடி வாங்குறோம்னே தெரியாது. ஆனாலும் அடிக்கும். பின்னி பெடலெடுக்கும்.

- மாடர்ன் தமிழன்

சமீபத்தில் அதிகம் சொல்லப்படும் பொய்களில் ஒன்று, ""வேற மொபைல் மாத்தினதுல உன் நம்பர் மிஸ் ஆகிடுச்சு.'' - இளங்கோ

நிம்மதியான வாழ்க்கை வாழ ஒரே குறுக்கு வழி நேர்வழியில் செல்வது மட்டுமே

பெண்களுக்குள் இருக்கும் குழந்தைத்தனத்தை பிடித்தவர்களிடத்தில் எல்லாம் வெளிப்படுத்தமாட்டார்கள் மனதிற்கு நெருங்கியவர்களிடமே வெளிப்படுத்துவார்கள்

- வெண்ணிலா

வலைத்தளத்திலிருந்து...

தினம் சில வரிகள்

உயிரெழுத்துகளை அறியத் தொடங்கும்போது தமிழ் எழுத்தாளன் ஜனிக்கிறான். தங்கிலீஸ் தெரியவரும்போது அவன் பத்திரிகையாளனாக உருமாறுகிறான்.

மருந்தே போதையாகும் வஸ்துகளுக்கு இரண்டு உதாரணங்கள்: டிவிட்டர், வலைப்பதிவுகள் நேர்க்கோடாய் ஒழுங்கினைத் தொடரும் மனிதர்கள் எறும்பாகிறார்கள். சுருக்குவழியில் முந்துவோர் அரசியல்வாதியாகவோ, ஆட்டோ ஓட்டுநராகவோ ஆகிறார்கள்.

தமிழ் சினிமாவில் வெற்றி பெற என்ன வழியென்று நண்பரைக் கேட்டேன். யோசனைக்குப் பின் சொன்னார்: ""ஆணென்றால் சாரும்,பெண்ணென்றால் மேடமும் போடத் தெரியணும்''.

தமிழ் எழுத்தாளனாய் வெற்றி பெற என்னவழியென்று கேட்டேன். உடனடியாக நண்பர் சொன்னார். ""நல்ல பதிப்பாளர் கிடைக்க வேண்டும்.''

http://pksivakumar.blogspot.in

இந்தக் குளிர்ல தோடம்பழம், முலாம்பழம், குவளப்பழம்னு தின்னுகிட்டு இருந்தா சீதளம் பிடிக்காதான்னு கேட்டு ஒரு நிலைக்குறிப்பு பதிஞ்சிருந்தேன். பயபுள்ளைக, அறுபது எழுபது வயதுள்ள பெரியவர்னு என்னை நினைச்சதும் அல்லாத, இவை எல்லாம் நாடோடிச் சொற்கள்(colloquial)னு வேற சொல்லிட்டாய்ங்க. தமிங்கலமற்ற தமிழ்ல பேசினாலே வயசு ஏறிப் போகுது இந்த பழமைபேசிங்ற பேரை வேற தவறுதலா புரிஞ்சிகிடுறாய்ங்க...

தமிழுக்கு நேர்ந்த சோதனையப்பா, சோதனை... தமிழில் இருக்கிற இடுகுறிப் பெயர்கள் அனைத்தும் கிராமத்தான் கண்டெடுத்த முத்துகளே. சரி... விடுங்க. நாட்டு நடப்பு அப்படி. நண்பர்களைக் குறை சொல்லித் தப்பில்லை.

பழமைபேசி

http:maniyinpakkam.blogspot.in

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.