ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம்... 27

புரொபஸரும் கணேஷும் ஒரு குடிசைக்கு சென்று அவரது மாணவி மாலாவைச் சந்திக்கிறார்கள். கணேஷின் கேள்வி ஒன்றிற்கு பதில் சொல்லும் முகமாக புரொபஸர் வாக்கிய அமைப்பு பற்றி விளக்குகிறார்

News image
Updated On :15 மார்ச் 2016, 1:20 pm

ஆர்.அபி​லாஷ்

புரொபஸரும் கணேஷும் ஒரு குடிசைக்கு சென்று அவரது மாணவி மாலாவைச் சந்திக்கிறார்கள். கணேஷின் கேள்வி ஒன்றிற்கு பதில் சொல்லும் முகமாக புரொபஸர் வாக்கிய அமைப்பு பற்றி விளக்குகிறார்

கணேஷ்: சார் how do you do வில் முதல் do வுக்கு how தான் சப்ஜெக்டுன்னு சொன்னீங்க. ஆனா பெயர் சொல் தானே சப்ஜெக்டா வரணும்? How கேள்விக்கான சொல் இல்லையா?

புரொபஸர்: இது இன்னும் தெளிவா புரிய உனக்கு நான் வாக்கிய அமைப்பை விளக்கணும். How are you  இதில் எது ள்ன்க்ஷத்ங்ஸ்ரீற் அதாவது வாக்கியம் யாரைப் பத்தி பேசுது?

கணேஷ்: you

புரொபஸர்: சரி. நான் உன் கிட்ட எப்பவுமே ஒரு வாக்கியத்தில subject முதல்ல வரும்னு சொன்னேன் இல்ல. I like apple. இதில I முதல்ல வருது. அது தான் சப்ஜக்டுன்னு ஈஸியா கண்டுபிடிக்கலாம். Do you like appleன்னு கேட்டா அதில ஈர் முதலில் வருது. இதை ரெண்டா பிரிக்கலாம். Do  you like apple. மேலும் இப்படிப் பிரிக்கலாம். You  like  apple. இதில் Verb வர்ன்ன்னு தெரியும். யங்ழ்க்ஷ அதாவது வினைச்சொல் எது?

மாலா: like

புரொபஸர்: object?

மாலா: apple

புரொபஸர்: இந்த வாக்கியம் எதைப் பத்தி ஆப்பிளா? நீயா?

மாலா: உனக்கு ஆப்பிள் பிடிக்குமான்னு கேட்டிங்கன்னா என்னைப் பத்தி தானே?

கணேஷ்: அதெப்படி ரெண்டையும் பத்தி தானே? நான் தூங்கினேன்னு சொன்னா அந்த வாக்கியம் என்னைப் பத்தி தான். ஆனா நான் விமானத்தில் தூங்க பிடிக்கும்னு சொன்னா அது விமானத்தில் தூங்குறதை பத்தி தானே?

புரொபஸர்: உன் கேள்வி நியாயம் தான். இந்த குழப்பத்துக்கு எல்லாம் தீர்வு வினைச்சொல் யாரைப் பத்தி பேசுதுன்னு பார்க்கிறது தான். I like sleeping in the aeroplaneன்னு சொன்னா ப்ண்ந்ங் யாரை குறிக்குது

கணேஷ்: sleeping

புரொபஸர்: எதைக் குறிக்குதுன்னு கேட்கல. யாரை குறிக்குது?

கணேஷ்: ஐ

புரொபஸர்: அப்போ அது தான் சப்ஜெக்ட். சரி முதல் வாக்கியத்துக்கு வருவோம். You  like  apple. இது youவை பத்தின வாக்கியம். உனக்கு ஆப்பிள் பிடிக்கும் என்பது தான் பிரதானம். அதனால் பாதிக்கப்படுறது யாரு?

கணேஷ்: ஆப்பிள்

புரொபஸர்: குட். அப்போ அது தான் object..

கணேஷ்: சார் அப்போ I like to sleep in the aeroplane. இதில object

புரொபஸர்: மாலா நீ சொல்லு

மாலா: தெரியலையே

அப்போது அங்கு நாய் ஜூலி நாக்கை தொங்க போட்டபடி நுழைகிறது. பின்னாலே மாலாவின் அப்பா செல்வம் வருகிறார்.

செல்வம்: சார் இது உங்க நாயா?

புரொபஸர்: அப்படீன்னும் சொல்லலாம்

செல்வம்: இது பேசுது சார். என் கிட்ட இங்கிலீஷ்ல எதுவோ கேட்டுது. மாலா ஹவுஸýன்னு சொன்னதை வச்சிட்டு அழைத்து வந்திட்டேன். இது நாயா? இல்ல ஏதாவது பொம்மையா?

ஜூலி: It is relative. நீங்க என்னை நாய்னு நினைச்சுக்கலாம். நான் அப்படி நினைக்கிறதில்ல.

கணேஷ்: Relativeன்னா சொந்தக்காரங்க தானே?

ஜூலி: அது ஒரு மீனிங். Relative meaningன்னா வேற. குண்டா இருக்கிற ஒருத்தர் கறுப்பு சட்டையோ சேலையோ கட்டினா கொஞ்சம் ஒல்லியா தெரிவாங்க. அது தான் relative truth. அதாவது ஓர் உண்மையை மற்றொன்றோடு தொடர்புபடுத்தி அதன் அடிப்படையில புரிஞ்சிக்கிறது. நான் என்னைப் பத்தி யோசிக்கும் போது நாய்ன்னு நினைக்கிறதுல்ல. அது என் உண்மை. உங்களுக்கு நான் நாய்ன்னு தோனினா அது உங்களோட உண்மை.

மாலா: Theory of relativity

ஜூலி: கரெக்ட். நீ ஒரு ரயில்ல உட்கார்ந்திருக்கே. பக்கத்து டிராக்கில மற்றொரு ரயில் ஓட ஆரம்பிக்குது. அப்போ உனக்கு உன் ரயில் ஓடறாப்பில இருக்கும். ஆனா உன் ரயில் நகரவேயில்லை.

கணேஷ்: ஆமா உண்மை தான். எனக்கும் பல தடவை அப்படி தோனியிருக்கு.

ஜூலி: ஏன்னா நம் மனம் பக்கத்து டிரெயினோட நகர்வை அடிப்படையா வச்சு நம் டிரெயினை புரிஞ்சுக்குது.

(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.