வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

இணைய வெளியினிலே!

உயிர் பிளக்கும் பசி என்று எழுதிவிட்டு தேநீர் குடிக்கப் புறப்பட்டான்.

News image
Updated On :21 மார்ச் 2016, 4:28 pm

உயிர் பிளக்கும் பசி என்று எழுதிவிட்டு தேநீர் குடிக்கப் புறப்பட்டான்.

- ராஜா சந்திரசேகர்

நம்ம வயிறும் நம்மளை மாதிரியே சோம்பேறியா இருந்திருந்தா வாழ்க்கையில இவ்ளோ கஷ்டப்பட வேண்டியிருந்திருக்காது.

-சிந்து.

பெலிக்சின் புகழ்பெற்ற புதினமான பேம்பியில் வருகிற அந்த மான்குட்டி நட்புறவு வேண்டி மனிதனிடம் வாஞ்சையுடன் அணுகும் போது அவன் அந்த மான்குட்டியை அம்பெய்து தாக்கி விடுவான். மனிதன் தன்னை சரியாக அடையாளம் கண்டுகொள்ளவில்லை என்று சொல்லிவிட்டு அந்த மான்குட்டி தரையில் வீழ்ந்து விடும்,மனிதன் தன்னை மட்டுமில்லாமல் தன்னை சுற்றியிருக்கும் எந்த ஒன்றையும் சரியாக அடையாளம் கண்டு கொள்ளவில்லை என்பதாலோ என்னவோ, பல வழிகளிலும் தனக்கான ஒரு போலியான அடையாளத்தைத் தேடிக் கொண்டு, வெறி பிடித்து சுற்றியிருப்பவர்களைச் சாகடிக்கிறான்

- சக்தி வேல்.

""பாக்கணும் போல இருக்கு''... அன்பை வெகு இயல்பாக வெளிப்படுத்தும் வார்த்தைகளில் ஒன்று.

- பால்ராஜ்.

இப்போது மக்கள் ஸ்மார்ட்போன் வாங்கும் அளவுக்கு வளமாகவும்,கீரைக்காரியிடம் பேரம் பேசும் அளவுக்கு ஏழையாகவும் இருக்கிறார்கள்...

- எஸ். கே. சவுந்தர்ராஜன்.

தாத்தா,பாட்டியிடமிருந்து அந்நியப்பட்டிருக்கும் குழந்தைகள், ஒரு தலைமுறையின் அனுபவம்,வரலாற்றில் இருந்தும் அந்நியப்பட்டுப் போகிறார்கள்.

-அப்பாஸ்.

கவிதை இசை சிற்பம் ஓவியம் நான்கு முனைச் சந்திப்பு நீ...

- மணிகண்டன்.

வலைத்தளத்திலிருந்து...

எழுத்துக்கு அனுபவம் அவசியம் என்றால், நான் சரித்திரக் கதைகள் எழுதுவது எப்படி? கொலையைப் பற்றி நான் கதை எழுதுவதற்குக் கொலை செய்திருக்க வேண்டுமா? வேண்டாம், ஆனால் அதை எழுதும் நேரம் நீங்கள் கொலைகாரனாக மாறியிருக்க வேண்டும். ராஜராஜனாக மாறாத எவராலும் பெருங்கோயில் கட்ட முடியாது, கற்களினால் அல்ல, சொற்களைக் கொண்டு கூட.

அப்படிக் கூடுவிட்டுக் கூடு பாய புத்தகங்கள் உதவும்.அவ்வளவுதான். ஆனால், புத்தகங்கள் மட்டும் போதாது.கருவாடு என்றாலும் கல்கண்டு என்றாலும் அது அப்படியே ரத்தத்திற்குச் செல்வதில்லை.படித்தது அனுபவமாகச் சேமிக்கப்படாவிட்டால், அதனால் பயனில்லை. படைப்பாளிக்கும் பண்டிதனுக்கும் உள்ள வித்தியாசமே இதுதான்.

http://jannal.blogspot.in/

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.