ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம்... 29

புரொபஸர் அவரது மாணவி மாலாவின் குடிசையில் இருக்கிறார். கூட கணேஷ், நாய் ஜூலி ஆகியோர் இருக்கிறார்கள்.

News image
Updated On :28 மார்ச் 2016, 2:56 pm

ஆர்.அபி​லாஷ்

புரொபஸர் அவரது மாணவி மாலாவின் குடிசையில் இருக்கிறார். கூட கணேஷ், நாய் ஜூலி ஆகியோர் இருக்கிறார்கள்.

புரொபஸர் (கணேஷ் மற்றும் மாலாவை நோக்கி): நான் கேட்ட கேள்விக்கு ரெண்டு பேரும் பதில் சொல்லலையே. I like to sleep in the aeroplane. இந்த வாக்கியத்தில ர்க்ஷத்ங்ஸ்ரீற் எது?

கணேஷ்: ஏரோபிளேன்

புரொபஸர்: ஒரு செயலினால் பாதிக்கப்படுறது எதுவோ அது தான் object. I drink tea. நான் டீ குடிக்கிறதினால டீ காணாமப் போகுது. அதனால டீ தான் object. I like to sleep in the aeroplane எந்த செயலைப் பத்தி சொல்லுது? தூக்கம். அந்த தூக்கத்தினால யாரு பாதிக்கப்படறா?

கணேஷ்: ஏரோபிளேன்

புரொபஸர்: நீ தூங்கினா விமானத்துக்கு என்னடா ஆகும்? உளறாதே...

கணேஷ்: ஆமால்ல...

புரொபஸர்: யாருக்கும் தெரியலையா? நான் ஏற்கெனவே உனக்கு இது சொல்லித் தந்திருக்கிறேனே கணேஷ்? நினைவில்லையா?

கணேஷும் மாலாவும் தலையைச் சொறிகிறார்கள்.

ஜுலி கொட்டாவி விட்டபடி: ரொம்ப சிம்பிள் sleep ஒரு intransitive verb. அதாவது வெளியில யாரையும் பாதிக்காத ஒரு வினைச்சொல். Intransitive verbdÏ object  வராது. அதனால அந்த வாக்கியத்தில no object.

புரொபஸர்: வெரி குட் ஜூலி.

கணேஷ்: அப்பிடீன்னா இந்த வாக்கியத்தில  in the aeroplane  என்ன?

புரொபஸர்: Prepositional phrase. அது என்னெண்ணு அப்புறமா விளக்குறேன். நான் முதல்ல சொன்ன வாக்கியத்துக்கு வருவோம். Do you like apple இதில subject எது? உனக்கு ஒரு க்ளு தரேன். verbக்கு முன்னால் வரது தான் subject. இங்க verb like. அதுக்கு முன்னால் எது வருகிறது?

கணேஷ்: You

புரொபஸர்: அப்பிடீன்னா Do என்ன?

கணேஷ்: அந்த வாக்கியத்தை கேள்வியா மாத்துறது do தானே?

புரொபஸர்: வெரி குட். நாம அன்றாட வழக்கில you like appleன்னு கூட கேட்கிறது உண்டு. ஆனா எழுத்து வடிவில Do சேர்க்கணும்.

மாலா: சார் do ஒரு verb இல்லையா? யங்ழ்க்ஷ ஒரு வாக்கியத்தோட ஆரம்பத்தில வரலாமா?

புரொபஸர்: ஒரு கேள்வியை உருவாக்குகிறதுக்காக வரலாம். Do, does, did இதையெல்லாம் பயன்படுத்தி ஒரு வாக்கியத்தை கேள்வியாக மாற்றலாம். She rides a cycle. அவள் சைக்கிள் ஓட்டுவாள். இதன் துவக்கத்தில் does சேர்த்தால் இது கேள்வி ஆகி விடும். Does she ride a cycle

கணேஷ்: ஏன் do she rides a cycleன்னு சொல்லக் கூடாது?

புரொபஸர்: அவள் ஒரு ஆள் தானே. அதனால க்ர்ங்ள் பயன்படுத்தணும். ஆனா ரெண்டு பேர் என்றால் do சரி தான். அவளும் அவள் தோழியும் சைக்கிள் ஓட்டிறாங்கன்னா do பயன்படுத்தலாம். Do

she and her friend ride a cycle நாம் இந்த grammar எல்லாம் ஏன் பேச ஆரம்பிச்சோம்? மறந்திட்டேன்.

மாலா: How do you doன்னு நான் கணேஷை நலம் விசாரிச்சதற்கு ஏன் அதில் ரெண்டு do வருதுன்னு கேட்டார். அங்கிருந்து தான் இதையெல்லாம் பேச ஆரம்பிச்சீங்க?

புரொபஸர்: ஒ.கே. அதற்கான பதிலை சொல்லி முடிச்சிரலாம். அந்த வாக்கியத்தை ரெண்டா பகுக்கலாம். 1) How do  2) you do  You do வர்ன் க்ர்வை முதலில் எடுத்துக்கலாம். தமிழில் சொல்றதுன்னா நீ இருக்கிறாய். You பெயர்ச்சொல். Do வினைச்சொல். இது தான் பிரதான வாக்கியம். இதைத் தவிர வேறு வார்த்தைகள் எக்ஸ்டிரா தான். எப்படி she rides cycle முன்னாடி க்ர்ங்ள் சேர்த்ததும் அது கேள்வி ஆனதோ அதே போல இந்த வாக்கியம் முன்னால் how do சேர்க்கிறோம். உடனே அது கேள்வி ஆகிடுது. நீ இருக்கிறாயுடன் எப்படி சேர்க்கிறோம். நீ எப்படி இருக்கிறாய்? ஆங்கிலத்தில் How do you do?

கணேஷ்: How are youன்னு சொல்லக் கூடாதா?

புரொபஸர்: சொல்லலாமே. How doக்கு பதிலா how மட்டும். அடுத்த doவுக்கு பதிலா ஹழ்ங். உன் கேள்விக்கு பதில் இப்போ சொல்றேன். முதல் do கேள்விச் சொல்லான ட்ர்ஜ்க்கு துணை. அடுத்த do சப்ஜெக்டான ஹ்ர்ன்வுக்கு துணை.

(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.