உயிரணுக்களிலுள்ள ரிபோ கரு அமிலம் (ஆர்என்ஏ) மற்றும், புரதங்களின் சிக்கலான அமைப்பான ரிபோசோம் எனப்படும் செல்களுக்குள் புரதங்கள் (புரோட்டீன்) உற்பத்தியாவது தொடர்பான ஆராய்ச்சி தற்போது மருத்துவ உலகில் பேரிடம் வகிக்கிறது. ரிபோசோம் (தண்க்ஷர்ள்ர்ம்ங்) அமைப்பின் அடிப்படையில் புதிய நுண்ணுயிர் எதிரிகள் (ஆன்டி பயாட்டிக்) உருவாக்கப்படுகின்றன.
இதற்கு வித்திட்ட அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர் அமெரிக்கா வாழ் இந்தியரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். அவரை "வெங்கி' என்று விஞ்ஞானிகள் செல்லமாக அழைக்கிறார்கள்.
சக விஞ்ஞானிகளான அமெரிக்காவைச் சேர்ந்த தாமஸ் ஸ்டைட்டஸ், இஸ்ரேலைச் சேர்ந்த அடா யோனட்ஸ் ஆகியோருடன் இணைந்து, 1999-இல் ஓர் ஆய்வறிக்கையை வெங்கி வெளியிட்டார். அதற்காக, 2009-இல் இம்மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
தமிழகத்தின் சிதம்பரத்தைச் சேர்ந்தவர் சி.வி.ராமகிருஷ்ணன், உயிரி வேதியியல் விஞ்ஞானி. இவரது மனைவி ராஜலட்சுமியும் உளவியலில் முனைவர் பட்டம் பெற்ற விஞ்ஞானி. இவர்களின் மகனாக 1952-இல் பிறந்தார் வெங்கட்ராமன்.
தந்தையும் தாயும் குஜராத்தின் வதோதராவிலுள்ள மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாகப் பணிபுரிந்தனர். அங்கு உயிரி வேதியியல் துறை அவர்களது முன்முயற்சியால் தான் உருவாக்கப்பட்டது. ஊட்டச்சத்துக் குறைபாடு எவ்வாறு குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது என்ற ஆராய்ச்சியில் அவ்விருவரும் ஈடுபட்டனர். அவர்களது வீடே ஆய்வகமாகச் செயல்பட்டது.
இத்தகைய சூழலில் வளர்ந்த வெங்கிக்கு அறிவியல் ஈடுபாடு மிகுந்ததில் வியப்பில்லை. வதோதராவிலுள்ள ஒரு கிறிஸ்தவ மிஷன் பள்ளியில் படித்த வெங்கி, துறைத் தலைவராக தந்தை பணிபுரிந்த அதே பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளநிலைப் பட்டம் பெற்றார் (1971).
வெங்கிக்கு மருத்துவராக வேண்டும் என்பதே ஆரம்பத்தில் கனவாக இருந்தது. ஆனால் வேலூர் கிறிஸ்தவ கல்லூரியின் தேர்வில் அவர் தேர்வாகவில்லை. ஐஐடி தேர்விலும் அவருக்கு சேர்க்கை அனுமதி கிடைக்கவில்லை. தேசிய அறிவியல் திறனறித் தேர்வை (சநபந) எழுதிய வெங்கி, அதில் வெற்றி பெற்று, கல்வி உதவித்தொகையைப் பெற்றார்.
பிறகு மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற வெங்கி, ஓஹியோ பல்கலைக்கழகத்தில் படித்து, இயற்பியலில் பிஎச்.டி. பட்டம் பெற்றார் (1976).
அப்போது, கூடுதல் படிப்பாக உயிரியல் படிக்க விரும்பிய வெங்கி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயிரியல் படித்து பட்டம் பெற்றார் (1978). பிறகு உயிரியல் ஆராய்ச்சியிலேயே அவரது முழு வாழ்க்கையும் திசை திரும்பியது.
இதனிடையே அமெரிக்காவிலுள்ள 50-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணிக்காக வெங்கி விண்ணப்பித்தார். அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டன.
பிறகு முதுமுனைவர் பட்டத்துக்காக யேல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த வெங்கி, பேராசிரியர் பீட்டர் மோரோயின் ரிபோசோம்கள் குறித்த ஆய்வுத் திட்டங்களில் ஈடுபட்டார்.
அதையடுத்து, அமெரிக்காவின் தேசிய ஆய்வகமான புரூக்ஹேவனில் 1983-இல் ஆராய்ச்சிப் பணியாளராகச் சேர்ந்த வெங்கி, அங்கு 1995 வரை, மூலக்கூறு உயிரியல், படிகவியல் தொடர்பான தொடர் ஆய்வுகளில் ஈடுபட்டார்.
1995-இல் யூட்டா பல்கலைக்கழகத்தில் உயிரி வேதியியல் பேராசிரியராக இணைந்தார். ஆயினும் அங்கு தனது ரிபோசோம் ஆராய்ச்சிக்குத் தேவையான வசதிகள் போதிய அளவுக்கு இல்லை என்பதை உணர்ந்த வெங்கி, பிரிட்டனிலுள்ள கேம்பிரிட்ஜ் மருத்துவ ஆய்வுக் கழகத்தில் (ஙதஇ) சேரத் தீர்மானித்தார்.
அமெரிக்க பல்கலைக்கழகத்தைவிடக் குறைந்த ஊதியம் கிடைத்தபோதும், ஆராய்ச்சிக்குத் தேவையான வசதிகள் கிடைத்ததால், கேம்பிரிட்ஜ் வந்தார் வெங்கி (1999). அங்கு முதுநிலை ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்தார். அங்கு தனது சகாக்கள் தாமஸ் ஸ்டைட்டஸ், அடா யோனட்ஸ் ஆகியோருடன் இணைந்து, ரிபோசோம்களின் மிகச் சிறிய துணை அலகுகளின் படிகக் கட்டமைப்பை விளக்கும் ஆய்வறிக்கையை 1999-இல் வெளியிட்டார்.
புரோகார்யோட்ஸ் (Prokaryotes) எனப்படும் நிலைக்கருவிலியின் (மரபணு) ஒரு பகுதி "70 எஸ்' ரிபோசோம் எனப்படுகிறது. அதன் துணை அலகு "30 எஸ்' (இதன் நீளம்: 5.5 ஆங்ஸ்டர்டாம். அதாவது, ஒரு மீட்டரில் ஆயிரம் கோடியில் 5.5 பங்கு).
அது தொடர்பான படிகக் கட்டமைப்பை அந்த ஆய்வறிக்கை விளக்கியது.
இது மரபணுவின் கட்டமைப்புக் கண்டறிதலில் முக்கியமான ஒன்றாகும். இதன் மூலமாக, நமது உடலின் இயக்கத்தில் முக்கியப் பங்காற்றும் மரபணுக்களிலுள்ள ரிபோசோம்கள் எவ்வாறு புரதத்தை உற்பத்தி செய்கின்றன, உயிர்களின் மூலச் செயல்பாடுகள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை அறிய முடிந்தது.
நுண்ணுயிர் எதிரிகளுடன் வினை புரிந்து அவை அடையும் மாற்றங்களையும் அவர்கள் விளக்கினர். இதற்காக 2009-இல் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மூவருக்கும் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ரிபோசோம்கள் மட்டுமல்லாது, ஹிஸ்டோன், குரோமோட்டின் புரதங்கள் தொடர்பான ஆய்வுகளிலும், எக்ஸ்-கதிர் படிகவியல் ஆராய்ச்சிகளிலும் வெங்கி ஈடுபட்டதுண்டு.
கேம்பிரிட்ஜிலுள்ள டிரினிட்டி கல்லூரியில் தற்போதும் மூத்த ஆய்வாளராக இயங்கிவரும் வெங்கி, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமை பெற்ற இந்தியராவார். 2004 முதல் அமெரிக்க அறிவியல் கழகத்தின் கெüரவ உறுப்பினராக அவர் உள்ளார்.
விஞ்ஞானி வெங்கியின் சாதனைகளைப் பாராட்டி உலக அளவில் பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் அமைப்பின் உறுப்பினராக, வெங்கி 2002-இல் தேர்வு செய்யப்பட்டார்.
2003-இல் லண்டன் ராயல் சொûஸட்டியில் உறுப்பினராக அவர் சேர்க்கப்பட்டார். அதன் தலைவராகவும் 2015-இல் நியமிக்கப்பட்டார்; இந்தப் பதவியை அடைந்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
2008-இல் இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் வெளிநாட்டு ஆய்வாளர் என்ற கெüரவம் அவருக்கு அளிக்கப்பட்டது. 2010-இல் இந்திய அரசு அவருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கி கெüரவித்தது. 2012-இல் பிரிட்டனின் உயரிய சர் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
பிரிட்டிஷ் குழந்தை எழுத்தாளரான வேரா ரோஸ்பெரியை 1975-இல் திருமணம் செய்தார். இவர்களுக்கு தான்யா என்ற மகளும் ராமன் என்ற மகனும் உள்ளனர். தற்போது பிரிட்டனில் வாழும் வெங்கி, ரிபோசோம்கள் குறித்த தொடர் ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்

திரிணமூல் காங்கிரஸ் நிலைகுலைந்துவிட்டது: பிரதமா் மோடி

ரைபகினா, ஆஸ்டபென்கோ முன்னேற்றம்

ஒரே நபா் இரண்டு வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பு: தோ்தல் அலுவலரிடம் புகாா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


