நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம் 93

புரொபஸர், கணேஷ் மற்றும் அவர்களது நண்பர் ஒருவரின் கிளியான Captain Flint ஆகியோர் அரட்டையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

News image
Updated On :27 ஜூன் 2017, 5:46 am

ஆர்.அபி​லாஷ்

புரொபஸர், கணேஷ் மற்றும் அவர்களது நண்பர் ஒருவரின் கிளியான Captain Flint ஆகியோர் அரட்டையடித்துக் கொண்டிருக்கிறார்கள். Subject எனும் சொல்லின்
பல்வேறு அர்த்தங்களை விளக்கும் கிளி,  interp ellation எனும் சொல்லை குறிப்பிடுகிறது.  
கணேஷுக்கு அது புரியவில்லை.
கணேஷ்   தலையைச்  சொறிகிறான். 
Captain Flint: பேன் தொல்லையா?
கணேஷ்:   பேனும் இருக்கு. ஆனால் இது  அதில்ல.
Captain Flint: நான் வேணும்னா உன் தலையில் உள்ள பேன்களை சாப்பிடட்டுமா? ஏன்னா இப்போ எனக்கு snack time.
கணேஷ்:  ஏன்  டீ வடை எல்லாம் சாப்பிட மாட்டியா?
Captain Flint: மனிதர்கள் செய்யுற எதையும் நான் சாப்பிட மாட்டேன்.  அதெல்லாம் விஷம். (Captain Flint கணேஷின் தோளில் துள்ளி அமர்ந்து, அவன் தலையை தன் அலகால் நீவி பேன்களைத் தேடுகிறது.) நீ பேலியோ டயட் கேள்விப்பட்டதில்லை?
கணேஷ்: சிக்கன் தந்தூரியும் அவிச்ச முட்டையும் தானே?
Captain Flint: ச்சே. பேலியோ என்றால் இயற்கையில் கிடைக்கிற உணவை மட்டுமே சாப்பிடுறது.  நான் இருநூறு வருடங்களாய் பேலியோ தான்
பின்பற்றுகிறேன். அது தான்  என்  நீண்ட ஆயுளின்  ரகசியம்.  சரி  அதை விடு, பேன் என்றால் இங்கிலீஷில்  என்ன?
கணேஷ்: Lease
Cap tain  Flint: இல்ல lice. 
புரொபஸர்: அது lice இல்லை louse. Head louse. 
கணேஷ்:  என்ன  சார் குழப்புறீங்க?
இஹல்ற்ஹண்ய் ஊப்ண்ய்ற் : அவர் சொல்றது சரி தான்.  Lice என்றால் பன்மை. நிறைய  பேன்கள் என்றால் lice.   ஒரே ஒரு பேன் என்றால் louse.  இதுவேதான் mouse என்பதற்கும் பொருந்தும்.  பன்மையில் எலிகள்  என்றால் mice. ஓர்  எலி என்றால் mouse.  இதே spelling கிட்டத்தட்ட foot, tooth ஆகிய சொற்களுக்கும் வரும். Oo எனும் ஓசை வந்தால் ஒருமை. அதாவது singular. இல்லாவிட்டால் பன்மை, அதாவது plural. அதாவது feet, teeth.   
கணேஷ்: பெரும்பாலான சொற்களுக்கு பன்மை-s  எனும் எழுத்து சேர்த்து தானே உருவாகிறது.  ஆனால் foot,  tooth, louse ஆகியவை மட்டும் என் வித்தியாசமாய் இருக்கின்றன?
Captain Flint: அதனால் தான் அவற்றை irregular nouns  என்கிறோம். ஆங்கிலத்தில் ஒரு பகுதி சொற்கள் ஜெர்மன், பிரஞ்சு ஆகிய மொழிகளில் இருந்து இறக்குமதி ஆனவை. ஆகையால் அவை பன்மை  பெறும் முறையும் வித்தியாசமாய் இருக்கும். Goose - geese மாதிரி.  இந்த சொற்களில் நடுவில் வரும் Oo எனும் ஓசையை பன்மையில் மாற்றுகிறோம் என்றால், cactus  எனும் சொல்லில் இறுதி எழுத் துக்கள் இரண்டையுமே மாற்றி cacti  என்கிறோம்.
கணேஷ்: அதென்னா கேக்டஸ்?
Captain Flint :  கள்ளிச்செடி. Ox தெரியுமா ? காளை.   
அதன்  பன்மை வடிவம் இறுதியில் இரு எழுத்துக்கள் சேர்க் கப்பட்டு oxen ஆகிறது. F என முடியும் சொற்களில் -f  என்பது -ves  என மாற்றப்பட்டு  பன்மை
உருவாகிறது. Calf அதாவது கன்றுக்குட்டி calves ஆகிறது. அதே போல she lf என்பது shelves என்றும், wolf என்பது wolves ஆகவும் மாறுகின்றன.  சரி, ஒரு கேள்வி.
கணேஷ்: கேளுங்க
Captain Flint : Person என்றால் தெரியுமில்லையா?
கணேஷ்:  ஆமா...
Captain Flint: என்ன அர்த்தம்? 
கணேஷ்: ஒரு ஆள் என்பதை ஹ ல்ங்ழ்ள்ர்ய் என்பார்கள்.
Captain Flint: கரெக்ட் .  பல ஆட்கள்  என்பதை, அதாவது ல்ங்ழ்ள்ர்ய் என்பதை பன்மையில் எப்படிச்  சொல்வாய்?
கணேஷ்: Persons
Captain Flint: இல்லை தப்பு.  Person என்பதற்கு persons என பன்மை கிடையாது. அதை people என  பன்மையில் சொல்வார்கள்.
கணே ஷ்: இதெல்லாம் எங்க புரொபஸர் சொல்லித் தரல
புரொபஸர்: இப்போ கரெக்டா என் மேலே  பழியை போடு. Don’t make me a scapegoat. சொல்லித்  தந்ததை எல்லாம் கரெக்டா கத்துக்கிட்டியா?
கணேஷ்: அதென்ன scapegoat ?
புரொபஸர்:  பலிகடா
Captain Flint: ச்சே...  என்ன இது ஒரு பேன் கூட இல்ல;  உன் தலை  சுத்த வேஸ்ட்! Such a lousy head you have.
கணேஷ்: Lousy என்றால்  பேன் அதிகமுள்ள தலையா?  இப் போதானே பேனே இல்லேன்னு  சொன்னீங்க?
Captain Flint: இல்லை. Lousy என்றால் கண்றாவியான, கேவலமான என்று அர்த்தம்.  சரி ஒரு கேள்விக்கு பதில் சொல். Fish என்பதற்கு பன்மை என்ன?
(இனியும் பேசுவோம்) 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.