தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பிளே ஸ்டோரில் புதிய வசதி!

ஸ்மார்ட் போன்களுக்கு ஆப்கள்தான் மூளைபோல் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆப்பும் தனித்தன்மை வாய்ந்தவையாக உள்ளன.

News image
Updated On :31 அக்டோபர் 2017, 7:50 am

அ. சர்ஃப்ராஸ்

ஸ்மார்ட் போன்களுக்கு ஆப்கள்தான் மூளைபோல் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆப்பும் தனித்தன்மை வாய்ந்தவையாக உள்ளன.

மக்களின் வாழ்க்கைத் தேவைக்கு ஏற்ப பல்வேறு வகையிலான ஆப்கள் சந்தைகளில் தினந்தோறும் வெளியாகின்றன. ஆனால், இந்த ஆப்கள் அனைத்தையும் ஆண்ட்ராய்டு போன்களில் பதிவிறக்கம் செய்வது என்பது இயலாத காரியமாகி உள்ளது.

சந்தைகளில் வெளியாகும் ஆப்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உள்ளதே இதற்கு காரணம்.  வழக்கமாக ஓர் ஆப்பை பிதிவிறக்கம் செய்த பின்புதான் அதன் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியும். இதனால் ஸ்மார்ட் போன்களில் இடப்பற்றாக்குறை பிரச்னை ஏற்படுவதுடன், டேடா பயன்பாடும் வீணாகிறது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு ஆப்களை பதிவிறக்கம் செய்ய உதவும் பிளே ஸ்டோரில் புதிய சேவையை வழங்கி உள்ளது.
பிளே ஸ்டோர் ஆப்பில் "டிரை நவ்' என்ற புதிய பொத்தனை வழங்கி உள்ளது. இதன் மூலம் புதிய ஆப்களை ஸ்மார்ட் போன்களில் பதிவிறக்கம் செய்யாமலேயே சோதனை முறையில் அதனைப் பயன்படுத்தலாம். முதல்கட்டமாக சில ஆப்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ள இந்த வசதி, வரும் நாள்களில் அனைத்து ஆப்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வசதியால் புதிய ஆப்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் ஸ்மார்ட் போன் கேம் பிரியர்களுக்கும், கூகுள் புதிய வசதிகளை அளித்துள்ளது. அதன்படி, பிளே ஸ்டோரில் வரும் விளையாட்டு ஆப் தொடர்பான சிறிய அளவு காணொலியை,  பயன்பாட்டாளர்கள் பயன்படுத்துவதற்கு முன்பே காணலாம். அந்தக் காணொலியின் ஸ்கிரீன் ஸ்பாட்களையும் பயன்பாட்டாளர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.