ஒவ்வொருவரும் தத்தமது இல்லங்களில் செலவிடும் நேரத்துக்கு இணையாக பணியிடத்திலும் அதிக நேரத்தை அன்றாடம் செலவிடுகிறோம். எனவே தனிநபரின் மகிழ்ச்சிக்கு இல்லத்தை போல, பணியிடத்திலும் அமைதி நிலவுவது மிகவும் அவசியம். பணியிடத்தில் அமைதி நிலவுவதற்கு, ஊழியர்கள் இடையே மோதல் இல்லாமல் நட்புறவு காணப்பட வேண்டும். பணியிடத்தில் வரும் மோதல்களைத் தடுப்பது எப்படி? நம்முடன் பணிபுரிபவர்களுடன் நல்ல உறவைப் பேணுவது எப்படி?
இதோ சில வழிகள்:
இருவர் ஏதோ பிரச்னைக்காக மோதலில் ஈடுபட்டால், யாராவது ஒருவருக்கு பிற பணியாளர்கள் ஆதரவு தரக் கூடாது. இருதரப்பினரின் நியாயங்களையும் உணர்ந்து அவர்களுக்கு இடையிலான மோதலைத் தணிக்கும் வகையில் செயல்பட வேண்டும்.
மோதலில் ஈடுபட்ட இருவரையுமே அல்லது இரு பிரிவினரையுமே பரஸ்பரம் விட்டுக் கொடுக்க வற்புறுத்த வேண்டும்.
சம்பந்தப்பட்ட இரண்டு பேரையும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படி ஊக்குவிக்க வேண்டும். ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டுவதால் தீர்வு கிடைக்காது, பிரச்னை அதிகரிக்கவே செய்யும் என்பதைப் புரிய வைக்க வேண்டும்.
இருவரிடமும், மற்ற நபரின் பிரச்னைகளை எடுத்துரைத்து, மோதலினால் அவர் அடைந்துள்ள பாதிப்புகளை விளக்கமாகத் தெரிவிக்க வேண்டும். இதன்மூலம், கருத்து வேறுபாடால் மோதிக் கொண்டிருக்கும் இருவரிடையேயும் பிறரின் மீது இரக்கம் உருவாகும். மோதுதல் நீங்கும்.
மோதலில் ஈடுபட்டவர்களிடம் அதைத் தீர்த்து வைக்கச் சென்றவர் ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மையுடன் நடந்து கொள்ளக் கூடாது. இதனால் பிரச்னையைத் தீர்க்கச் சென்ற அவருடன் புதிய மோதல் உருவாகிவிட வாய்ப்புண்டு.
கருத்து வேறுபாடுகள் உருவாவதற்கு முன்பு மோதலில் ஈடுபட்ட இருவருக்கும் இடையே இருந்த நட்பை நினைவுபடுத்துங்கள். இப்படி செய்தால், ஏற்கெனவே இருந்த நட்புணர்வு மீண்டும் வெளிப்படும்.
மோதலில் ஈடுபட்டதற்குக் காரணம் குறிப்பிட்ட ஒருவர்தான் காரணம் என்று சொல்லக் கூடாது. சூழ்நிலைதான் அவர்களை மோதலில் ஈடுபட வைத்தது என்று சொன்னால், இருவரிடமும் மனமாற்றம் ஏற்படும்.
தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவினால், யாருக்கும் வெற்றி கிடைக்காது, பின்னடைவே ஏற்படும். கார்ப்பரேட் உலகத்தில் மோதல் போக்கை அலுவலகம் விரும்பாது என தெரிவிக்க வேண்டும்.
போட்டியினால் ஏற்பட்ட பிரச்னை எனில், திறமையின் அடிப்படையில் போட்டியிட வேண்டும்; மோதிக் கொள்ளக் கூடாது; அப்படி செய்தால், இருவருக்கும் பிரச்னையே ஏற்படும், பணியை இழக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்க வேண்டும்.
கோபத்தை கைவிட்டு, இருவரையும் தனியே சென்று ஓரிடத்தில் அமர்ந்து அமைதியாக பேசும்படி வலியுறுத்துங்கள். இப்படி செய்வதால், இருவரும் பரஸ்பரம் உண்மையை உணர்ந்து நட்பு கொள்ள முடியும்.
வீ. சண்முகம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் மறைவு: அன்புமணி இரங்கல்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆனி வருஷாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

இந்திய சினிமாவிலேயே பாக்யராஜ் போல இன்னொருவர் இல்லை: ஊர்வசி





