திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம் 171 - ஆர்.அபிலாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் மருத்துவருக்கான காத்திருப்போர் அறையில் இருக்கிறார்கள்

News image
Updated On :25 டிசம்பர் 2018, 9:52 am IST

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் மருத்துவருக்கான காத்திருப்போர் அறையில் இருக்கிறார்கள். நடாஷா எனும் பெண்ணும் அங்கு காத்திருக்கிறாள். அவர்கள் இடையிலான உரையாடலில் recommerce என்ற சொல் வருகிறது. அதென்ன recommerce?
ஜூலி: நான் சொல்றேன். உங்கிட்ட ஒரு பழைய புளூ டூத் ஹெட்போன் இருக்குது. அதோட நிஜ விலை ரூ.5000. இப்போது அதை நீங்க விற்க விரும்புறே. அதை பாதி விலைக்கு வாங்க ஒரு நபர் / வியாபாரி தயாராக இருக்கிறார். அப்போது நீ விற்கிறாய் என்றால் நீ பண்ணுவது recommerce. பழைய ஹெட்போனை கொடுத்து ஒரு புது ஹெட்போனுக்கு நீ 50% கழிவு பெறுகிறாய் என்றாலும் recommerce தான்.
நடாஷா: என்னுடைய முந்தைய கம்பெனியில் நான் ஓர் அனலிடிக்ஸ் எக்ஸிக்யூட்டிவாக இருந்தேன். அப்போது...
கணேஷ்: சாரி ஃபார் குறுக்கீடு... அதென்ன அனாலிடிக்ஸ்?
நடாஷா: அனலிடிகிஸ் பணி என்பது ஒரு நிறுவனத்தின் வியாபார பரிமாற்றங்கள், சாத்தியக் கூறுகள் பற்றின தகவல்களை, புள்ளி விவரங்களைத் தொகுத்து அளிப்பது. அவ்விவரங்களை அளிக்கும் நிறுவனங்களிடமிருந்து எங்களுக்கு சிலநேரம் தகவல்கள் வரும்; நாங்கள் அவற்றை முறைப்படுத்தி வணிக உத்திகளை வகுக்க உதவுவோம். எங்கள் டீமில் 12 பேர் இருந்தார்கள். நான் தான் கடைக்குட்டி, ஜூனியர். சரி இனி சொல்லவா?
கணேஷ்: ஆமா... நீங்க சொல்லுங்க.
நடாஷா: அப்போது எங்க பாஸ் மிஸ்டர். ஷா மீட்டிங்கில் அடிக்கடி சொல்லுவார்: It is not about how you take a product to market, but about when. It is crucial how you beat the rival to the market.
கணேஷ்: ஓ...
நடாஷா: என்ன ஓ?...
கணேஷ்: ஒரு பண்டத்தை போட்டியாளரை விட எப்படி நல்லா லாபகரமா விக்கிறதுங்கறது தானே?
நடாஷா: இல்ல. அப்படி மங்குணி மாதிரி யோசிக்கக் கூடாதுன்னு தான் எங்க பாஸ் சொல்வார்.
கணேஷ்: ஓ...
ஜூலி: உன்னை மங்குணின்னு சொல்றா. ஓன்னு தலையாட்டுறே?
கணேஷ்: அப்படியா சொன்னா? எனக்கு சரியா காதுல விழலியே?
ஜூலி: பொண்ணு வாயையே பார்த்திட்டு ஆன்னு கேட்டா எப்படி காதில விழும்?
கணேஷ்: ஓ...
ஜூலி: ம்ஹும்!
நடாஷா: Take a thing to marketன்னா ஒரு பொருளை சந்தையில் கொண்டு போய் விக்கிறது. அதாவது ஒரு ஸ்மார்ட் போனை ஆன்லைனில் கிடைக்கும் படியா செஞ்சு விக்கும் போது you are taking it to market. 
கணேஷ்: ஆன்லைன் மட்டும் தானா?
நடாஷா: ஆமா. இது ஒரு இணைய வணிகத்துக்கு பயன்படும் பிரயோகம். Brick and mortar கடையை உத்தேசிக்கல இங்க. 
கணேஷ்: அதென்ன Brick and mortar?
நடாஷா: அதுவா? ஒரு பெüதீகமான கடையில் ஒரு பொருளை விற்றால் அது trade in a brick and mortar shop. ஆனால் அதையே இணையத்தில் விற்றால் e-commerce trade. சரி, நான் பேசலாமா?
கணேஷ்: ஆங்... சொல்லுங்க.
நடாஷா: ஒரு விசயத்தை முழுசா சொல்ல விடுறியா? சந்தேக சாம்பிராணி.
கணேஷ்: ஆமாங்க.
நடாஷா: ஒரு பொருளை நமது போட்டியாளர்கள் இணைய சந்தையில் அறிமுகப்படுத்தும் முன்பு நாம செஞ்சால் அது beating the rivals to the market. இப்படி பண்டத்தை சந்தைக்குக் கொண்டு சேர்க்கும் காலத்தை time to market என்பார்கள்.
கணேஷ்: வாவ், உங்களுக்கு எப்படி இவ்வளவு சொற்கள், பிரயோகங்கள் தெரியுது?
நடாஷா: நான் அந்த இண்டஸ்டிரியில் இருந்ததால. நான் ஒண்ணு சொல்லவா?
கணேஷ்: ஓ... கண்டிப்பா
நடாஷா: பொண்ணுங்களுக்கு ஓவரா புகழ்ந்தா பிடிக்காது.
கணேஷ்: சரிங்க, மனசில வச்சிக்கிறேன்.
நடாஷா: வச்சிக்கிட்டா நல்லது. சரி ஜூலி நீ ஆன்லைன்ல ஷாப்பிங் பண்ணுவியா? அலெக்ஸா பயன்படுத்தி ஒரு கிளி அமேசான்ல ஷாப்பிங் பண்ற வீடியோ பார்த்தியா?
ஜூலி: ஆமாமா பார்த்தேன். ஆனால் நான் இணையத்தை நம்புறதுல்ல. பண்ட பரிமாற்றம் தான் என் பாணி. அதாவது barter system. என் நண்பன் நேத்து அவனோட முதலாளி தட்டில இருந்து நைஸா ஒரு பிளம் கேக்கை திருடி கொண்டு வந்திருந்தான். அவனுக்கு கெட்டுப் போன பால் பாக்கெட்டை கொடுத்து அந்த கேக்கை நான் வாங்கிட்டேன். சிம்பிள்.
(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.