வேலையில்லை என்று சொல்லாதீர்கள்!
பட்டப்படிப்பு முடித்ததும் பெரும்பாலானோர் வேலைக்குச் செல்ல வேண்டும் என முயற்சி மேற்கொள்வது வழக்கம். தமிழகத்தில் மட்டும் அரசுப் பணிக்காக வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை 80 லட்சத்தை


பட்டப்படிப்பு முடித்ததும் பெரும்பாலானோர் வேலைக்குச் செல்ல வேண்டும் என முயற்சி மேற்கொள்வது வழக்கம். தமிழகத்தில் மட்டும் அரசுப் பணிக்காக வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை 80 லட்சத்தை தாண்டிவிட்டது.
அதே நேரத்தில், தனியார் தொழில் நிறுவனங்களும் ஏராளமானவை புதிதாக தொடங்கப்பட்டு, வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றன. தாராளமய பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பு ஒரு தொழில் நிறுவனத்தில் பணிபுரிவோர் நிரந்தரமாக ஓய்வு பெறும் வரை வேலை செய்து வந்தனர். ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் தொழிற்சாலைகளை நடத்தி வரும் நிலையில் தற்போது ஒப்பந்தத் தொழிலாளர் முறை அதிகம் பின்பற்றப்படுகிறது.
இதனால் தற்போது திடீர் திடீரென தொழிலாளர்கள் வேலை இழப்பது, ஆலைகள் கதவடைப்பு போன்றவை நேரிடுகின்றன. வேலை இழப்பால் நேரிடும் விளைவுகள் கடுமையாக ஒருவரை பாதிக்கும். இதனால் பாதிக்கப்பட்டோர் தளர்ந்து விடாமல் இருப்பதும், மனத்துணிவுடன் அதை எதிர்கொள்வதும் அவசியமாகும். வேலை இல்லாத நாள்களை மனச்சோர்வுடன் கழிக்காமல், எவ்வாறு அவற்றை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நாம் அறிய வேண்டும். சுய விவர படிவத்தை (பயோடேட்டா) மெருகேற்றுதல், புதிய பணிகளுக்கான வாய்ப்புகளைத் தேடுதல் அவற்றில் சில.
வேலை இல்லாதவர்கள் கீழ்கண்டவற்றைப் பின்பற்றலாம்:
தற்காலிகமான பணிகளைச் செய்தல்: முழுநேர பணி கிடைக்கும் வரை ஒருவர் ஃபிரீலான்ஸôக கிடைக்கும் பணியை மேற்கொள்ளலாம். வேலை தேடும் இளைஞர்களுக்கு இவை வருவாய் ஈட்டித் தருவதோடு, அனுபவத்தையும் பெற்றுத் தரும்.
தன்னார்வலராக பணிபுரிதல்: பல்வேறு இடங்களில் தன்னார்வலராகச் சென்று பணிபுரிதல் என்பது ஒருவருக்கு போதிய வருவாயைத் ஈட்டித் தராவிட்டாலும், சிறந்த அனுபவத்தை பெற்றுத் தரும். குறிப்பிட்ட துறை மட்டுமின்றி தொடர்பில்லா துறைகளிலும் சென்று தன்னார்வத்துடன் பணிபுரிந்தால் புதிய தொடர்புகள் உண்டாகும். வேலை வாய்ப்பைப் பெறவும் உதவும். .
திறன்மேம்பாட்டுப் பயிற்சி: நவீன தொழில்நுட்பங்கள் நாள்தோறும் பெருகி வரும் நிலையில் புதிய திறன்களை அறிதல் தற்போதைய தேவையாக உள்ளது. எதிர்கால பணிவாய்ப்புக்கு தேவையான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளைப் பெறுவது அவசியமாகும். அப்பயிற்சி வகுப்பின் மூலம் சிறந்த நண்பர்கள், தொடர்புகளைப் பெறலாம். இவை ஒருவரது சுயவிவரக் குறிப்பில் கூடுதல் தகுதியைக் குறிப்பிட உதவியாக இருக்கும்.
தற்கால தொழில் நிகழ்வுகளை அறிதல்: நேர்காணலுக்குச் செல்லும் ஒருவருக்கு கிடைக்கும் முக்கியமான அனுபவம், தற்கால தொழில் நிகழ்வுகள் குறித்த கேள்விகள் எழுவதாகும். எனவே தொழில்துறையின் நிகழ்காலத் தன்மை, சிறந்த தொழிலதிபர்கள், பொருளாதார நிலைமை, புதிய முதலீடுகள் குறித்து அறிந்திருப்பது பேருதவியாக இருக்கும். குறிப்பாக நாம் இதில் தயார் நிலையில் உள்ளதையும், மேலும் கற்க ஆர்வமாக உள்ளதையும், பிறர் அறிந்து கொள்வர்.
சமூகவலைதளங்களில் ஆர்வம்: ஒவ்வொருவருக்கும் பல்வேறு துறைகள் தொடர்பாக ஆர்வம், விருப்பம் இருக்கும். வேலை தேடும் நபர்கள் சமூக வலைதளங்களையும் தங்களுக்கு ஏதுவாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருவரது தொழில்நுட்ப பணி அனுபவம் குறித்த விவரங்களை உருவாக்கி பதிவேற்றலாம். டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டகிராம், கூகுள் பிளஸ் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஒருவரது திறன்கள், தகுதிகள் குறித்து இடம் பெறச் செய்யலாம். இதன் மூலம் ஆன்லைனில் வேலைதேடுவோருக்கு உதவியாக இருக்கும்.
தனி இணையதளம்: வேலைவாய்ப்புக்கான நேர்காணலின் போது ஒருவர் தன்னைப் பற்றிய சான்றிதழ்களை உடன் எடுத்துச் செல்வது வழக்கமாகும். எனினும் தற்போது இணையதள காலமாதலால், பல ஆயிரம் கி.மீ தூரத்துக்கு அப்பால் உள்ள தொழில் நிறுவனத்தினர் ஆன்லைன் மூலம் நேர்காணல் நடத்த முடியும். இதற்காக ஒருவர் தனது சாதனைகளை எடுத்துக்கூற தனியாக இணையதளத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.
ஒருவருக்கு இதில் போதிய தொழில்நுணுக்கம் இல்லையென்றாலும், குறைந்த கட்டணத்தில் தனியாக இணையதளங்களை உருவாக்கித் தரும் நிறுவனங்கள் பல உள்ளன. மேலும் தனியாக பிளாக் எனப்படும் பக்கத்தில் நாள்தோறும் அல்லது வாரந்தோறும் தொழில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.
வேலையில்லாத ஒருவர் வலைப்பின்னல் மூலம் செம்மையான பணிகளை மேற்கொள்ளலாம். வேலைதேடுவதற்கு இது சிறந்த முறையில் உதவும். நாம் ஒரு நிகழ்ச்சிக்கு திட்டமிட்டு உறுதியுடன் சென்றால் புதிய தொடர்புகள் கிடைத்து பணிவாய்ப்பும் பெறலாம்.
ஒருவர் வேலையில்லாத காலகட்டத்தில் வேலை தேடுவதே முழு நேர பணியாகி விடும். எனவே இதில் கூறப்பட்டுள்ள அம்சங்களை பின்பற்றி, விரைவாக வேலைவாய்ப்பைப் பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...