
வேர்ல்டு கோல்டு கவுன்சிலுடன் (WCC) இணைந்து ஐஐஎம் - அகமதாபாத்தில் உள்ள ஆராய்ச்சி மையமான இன்டியா கோல்ட் பாலிஸி சென்டர் (IGPC) தங்கம் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறது.
பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்ட வேர்ல்டு கோல்டு கவுன்சில், உலகத் தங்கச் சந்தையை ஆராய்ந்து, உலக அளவில் தங்கத்தின் தேவையைக் கண்டறிந்து, அந்தத் தேவைக்கேற்ற அளவில் உற்பத்தி செய்யத் தேவையான தகவல்களை அளிக்கிறது. அது தனது ஆராய்ச்சிக்கான களமாக இந்தியா, சீனா, சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்டிருக்கிறது.
இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - அகமதாபாத்தில் இயங்கி வரும் இண்டியா கோல்ட் பாலிசி சென்டர் அதோடு இணைந்து உயரிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வோராண்டும் இந்தியாவுக்கான கோல்ட் பாலிசி ரிபோர்ட்டை அளிக்கிறது.
இந்தியப் பொருளாதாரம், ஜெம் மற்றும் ஜுவல்லரி தொழில் கட்டமைப்பில் தங்கம் வகிக்கும் பாத்திரத்தை அது ஆராய்கிறது. அதேபோன்று சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும் தங்கம் வகிக்கும் பாத்திரத்தை ஆய்வு செய்கிறது.
வேர்ல்டு கோல்டு கவுன்சிலின் ஆராய்ச்சி எல்லைக்குட்பட்ட பல நாடுகளில், ஒவ்வொரு பகுதியிலும் தங்கத்தைப் பயன்படுத்தும் மக்களின் மனோபாவங்களும், பயன்படுத்தும் முறைகளும் மாறுபடுகின்றன. அவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்வதோடு மட்டுமல்லாமல், தங்கத்தின் உற்பத்தி, விநியோகம் சார்ந்த வேலை வாய்ப்புகளைப் பற்றியும் ஆராய்கிறது. குறிப்பாக இந்திய தங்கத் தொழில்துறையின் உள்கட்டமைப்பைப் பற்றி ஆராய்ச்சி செய்து, அதைப் பலப்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்குகிறது.
இதுபோன்று, இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - அகமதாபாத்தில் "சென்டர் ஃபார் மேனேஜ்மென்ட் ஹெல்த் சர்வீஸஸ் (CMHS)' என்பது ஜூன் 2004 -ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது 2004 - இல் உருவாக்கப்பட்டாலும், 1975- இல் இருந்தே மருத்துவ சேவை தொடர்பான ஆராய்ச்சிகளை குறிப்பாக, ஆரம்ப சுகாதாரநிலையங்கள் தொடர்பாகவும், குடும்பக் கட்டுப்பாடு திட்டம் தொடர்பாகவும் ஐஐஎம் - அகமதாபாத் செய்து வருகிறது.
சென்டர் ஃபார் மேனேஜ்மென்ட் ஹெல்த் சர்வீஸஸ் இந்தியாவில் எவ்வாறு மருத்துவ சேவைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கான முக்கியமான திட்டமிடுதலைச் செய்கிறது. அதற்கு எவ்வாறு பாலிசிகளை வரையறுப்பது, மக்களிடையே ஹெல்த் சர்வீஸசைக் கொண்டு செல்வது எப்படி என்பதற்கு இக்கல்வி நிறுவனம் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக நேஷனல் புரோகிராம் ஆன் கேன்சர், நேஷனல் புரோகிராம் ஆன் ஹெச்ஐவி- எய்ட்ஸ் போன்றவற்றை இந்தியா முழுவதும் பரவலாக எடுத்துச் சென்றது, பப்ளிக் ஹெல்த் சிஸ்டம் எவ்வாறு இருக்க வேண்டும், ஹெல்த் செக்டாரில் செய்யக் கூடிய ரிஃபார்ம்ஸ் எவ்வாறு அமைய வேண்டும், தகவல் தொழில்நுட் ப வளர்ச்சிகளை ஹெல்த் செக்டாரில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டது இதன் சாதனைகளாகும்.
உதாரணமாக காச நோய் சார்ந்த தகவல்களை இந்தியா முழுவதும் திரட்டி , அவற்றை ஒருங்கிணைத்து, ஆராய்ந்து அதை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். இந்தியாவில் காசநோய் எந்தெந்த இடங்களில் அதிகமாக வருகிறது? எவ்வாறு வருகிறது என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள். இதனால் எந்தவகையான காசநோய், எந்தெந்தப் பகுதிகளில் ஏற்படுகிறது, அதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிந்து, காசநோய் மேலும் பரவாமலிருக்கத் திட்டமிட்டுச் செயலாற்ற முடிந்தது. அதற்கு இவர்களின் ஆராய்ச்சியும், ஆவணப்படுத்துதலும் மிகவும் உதவியாக இருந்தன.
இவை தவிர, இந்த சென்டர் ஃபார் மேனேஜ்மென்ட் ஹெல்த் சர்வீஸஸ், மாநிலம் மற்றும் மாவட்ட சுகாதார அதிகாரிகள், தன்னார்வக் குழுக்களுடன் எவ்வாறு இணைந்து நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான மையம் ஒன்றை உருவாக்கி செயல்பட வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளையும் திட்டமிடல்களையும் முன் வைத்துள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களைப் பாதிக்கும் நோய்களின் அறிகுறிகளைக் கண்டறிந்து நோய் வராமல் தடுப்பது மற்றும் நோயிலிருந்து மீள்வதற்கான செயல்முறைகளைப் பற்றிய தகவல்களை மக்களுக்குத் தெரிவிப்பது, இந்தத் தகவல்களை உலகில் உள்ள பிற ஆராய்ச்சியாளர்களுக்கும் தெரியப்படுத்துவது என இந்த மையம் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இவை தவிர, ஐஐஎம் - அகமதாபாத்தில் விவசாயம், சோசியல் பாலிஸி, இன்ஃப்ராஸ்டரக்சர், கவர்னென்ஸ் அண்ட் ரெகுலேஷன், எனர்ஜி என்விரான்மென்ட் போன்ற 5 துறைகளில் ஆராய்ச்சியும், உயர் கல்வியும் அளிக்கப்படுகிறது. இதன் மாணவர்கள் எண்ணற்ற பிசினஸ் கேஸ் ஸ்டடிகளைச் செய்திருக்கிறார்கள். குறிப்பாக வங்கிகள் நஷ்டமடைவது பற்றி, கல்விக்கடன் பற்றி, பல தொழில், வணிக நடைமுறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.
இங்கு இரண்டாண்டுகள் Post Graduate Programme in Management, Post Graduate Programme in Food and Agri-Business Management, One-Year Full Time Post Graduate Programme in Management, Two-Year Post Graduate Programme in Food and Agri-Business Management (MBA-FABM), One-Year Full Time Post Graduate Programme in Management for Executives (MBA-PGPX), Faculty Development Programme, ePost Graduate Programme, Ph.D. Programme in Management, Executive Education Programmes (EEP) ஆகிய உயர்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்தப் படிப்புகளில் சேர்வதற்கு இளநிலைப் பட்டப்படிப்பிலும் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். காமன் அட்மிஷன் டெஸ்ட் (CAT) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் திறன் தேர்வு, குரூப் டிஸ்கஷன், தனிப்பட்ட நேர்காணல் ஆகியவற்றின்மூலம் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.
இங்கு கேட் 2019 மூன்று பிரிவுகளில் - வெர்பல் அண்ட் ரீடிங் காம்ப்பிரிகென்சன், டேடா இண்டர்பிரட்டேஷன் அண்ட் லாஜிக்கல் ரீசனிங், குவாண்டிடேட்டிவ் எபிலிட்டி என்ற மூன்று பிரிவுகளில் - மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களில் 0.1 சதவீதம் பேர் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 10 -ஆம் வகுப்பில் , 12- ஆம் வகுப்பில், இளங்கலைப் பட்டப்படிப்பில் எடுத்த மதிப்பெண்கள், பணி அனுபவம் ஆகியவையும் இந்த உயர்படிப்பில் சேர்வதற்கான தகுதிகளாக உள்ளன.
இந்தத் தேர்வு முடிந்து செலக்ட் செய்யப்பட்ட மாணவர்கள், இங்கு பயின்று பட்டம் பெற்ற பிறகு, உலகின் தலைசிறந்த எண்ணற்ற கம்பெனிகளில் மிக அதிக சம்பளத்தில் உயர் மேலாண்மைப் பணிகளில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். இதுவரை 10,320 மாணவர்கள் அவ்வாறு பணியாற்றி வருகிறார்கள்.
ரிசர்வ் பேங்க் கவர்னராக பணியாற்றிய ரகுராம் ராஜன் 1978 -ஆம் ஆண்டு இங்கு பயின்றவர். யுனிவர்சிட்டி ஆஃப் மிக்சிகனில் பேராசிரியராகப் பணியாற்றிய சி.கே.பிரஹலாத் 1966- இல் இங்கு பயின்றார். விண்வெளி ஆராய்ச்சி நிபுணர் விக்ரம் சாராபாயின் மகளான மல்லிகா சாராபாய் பிரபல நடனக் கலைஞர். இவர் 1974 -ஆம் ஆண்டு இங்கு பயின்றார்.
ஜி.சுப்பிரமணியம் நியூயார்க்கில் உள்ள ஸ்டெர்ன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். அவர் இங்கு பயின்றார். இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியம், நிறைய குறிப்பிடத்தக்க புத்தகங்களை எழுதிய சேத்தன் பகத், கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஹர்ஷா போக்லே ஆகியோர் இந்தக் கல்வி நிறுவனத்தில் பயின்றவர்கள்.
ஒருவர் அதிகச் சம்பளம் வாங்கும் ஒரு வேலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விரும்பினால், அவர் ஐஐஎம் - அகமதாபாத்தைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில் இங்கு சராசரி குறைந்தபட்ச சம்பளமே ரூ.30 லட்சம் ஆகும். இங்கு உயர்ந்த சம்பளம் வாங்குபவர்கள் அதைப் பற்றி வெளியே கூறுவதில்லை. 441 பேர் வேலை செய்கின்றனர்.
இங்கு சேர்ந்து பயில்வதற்கான கட்டணம் மிக அதிகமாக உள்ளது. ஓராண்டு முழுநேரப் பட்டப்படிப்பான Post Graduate Programme in Management for Executives (MBA-PGPX) படிப்பிற்கு கட்டணம் ரூ.25 லட்சம். திறமை மிக்க மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. அது குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் ஆகும்.
இங்கு பயிலும் மாணவர்களில் 150 பேர் ஒவ்வோராண்டும் வெளிநாடுகளில் உள்ள உயர்ந்த கல்விநிறுவனங்களில் பயில்வதற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அதேபோன்று, 90 வெளிநாட்டு மாணவர்கள் ஐஐஎம்- அகமதாபாத்தில் பயில அனுமதிக்கப்படுவார்கள்.
(தொடரும்)
கட்டுரையாசிரியர்: சமூக கல்வி ஆர்வலர் www.indiacollegefinder.org
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





