நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 184

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள்.

News image
Updated On :26 மார்ச் 2019, 7:33 am

ஆர்.அபி​லாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள்.

அங்கே அவர்களும் நடாஷா எனும் பெண்ணும் மருத்துவரின் அறையில் அரட்டையடிக்கிறார்கள். அப்போது service எனும் சொல் பற்றிய உரையாடல் service apartments என்றால் என்ன எனும் கேள்விக்கு இட்டு செல்கிறது. அதைப் பற்றி இப்போது மேலும் அறிவோம்.

சேஷாச்சலம்: சர்வீஸ் அபார்ட்மெண்டுகளை நகரங்களில் இப்போதெல்லாம் அதிகமாய் பார்க்க முடிகிறது. இவை ஓட்டல்களுக்கும் வாடகை வீடுகளுக்கும் இடைப்பட்டவை. ஒருவிதமான உயர்தர மேன்ஷன்கள் என சர்வீஸ் அபார்ட்மெண்டுகளைச் சொல்லலாம்.

கணேஷ்: சர்வீஸ் என்றால் ஓட்டல்களில் கிடைக்கிற சர்வீûஸப் போன்றா?

சேஷாச்சலம்: ஆமாம். Service apartment is a fully furnished apartment, available for short or long-term stay. It provides hotel-like amenities like room service, housekeeping, laundry service and so on.

நடாஷா: அடிப்படையில் ஒரு ஹாஸ்டல்.

சேஷாச்சலம்: ஆமாம், உயர்தர விடுதிக்கான ஒரு fancy name தான்service apartment. 

நடாஷா: My friends stay in condos mostly. They prefer condos to women’s hostels. 

கணேஷ்: சார் இந்த சொல்லை நான் சமீபத்தில் ஒரு படத்தில் ஒரு வசனத்தில் கேட்டேன். ஆமாம் ஞாபகம் வந்திருச்சு Fight Club. அந்த படத்தில் நாயகனோட condoவை யாரோ குண்டு வச்சு தகர்த்திடுவாங்க. கடைசியில அவனே தான் அதை செஞ்சதுன்னு தெரிய வரும்.

நடாஷா: அவனே ஏன் தன் வீட்டுக்கு குண்டு வைக்கணும்?

கணேஷ்: அவனோட வாழ்க்கையில் அர்த்தமே பொருட்களை வாங்கி குவிக்கிறது தான். He is beholden to consumerism. அது அவனுக்கு ஒரு போதை ஆகிடுது. அவனோட வீடு முழுக்க விலைமதிக்க முடியாத ஏகப்பட்ட பொருட்களை வாங்கிக் குவிக்கிறான்  நாற்காலிகள், சமையலறை உபகரணங்கள், சுவர் அலங்காரங்கள் என்று. ஆனால் எவ்வளவு வாங்கினாலும் அவனுக்கு திருப்தி இராது. இந்த போதையில் இருந்து விடுபட ஒரே வழி எல்லாவற்றையும் ஒரேயடியா இழக்கிறது தான்னு அவனுக்குத் தோணுது. அப்போ அவன் அந்நியன் அம்பி போல ரெண்டு ஆட்களாக உடைபடுகிறான். தூங்கும் போது அவன் டைலர் டெர்டன் எனும் ஆபத்தான சுதந்திரமான ஆசாமி ஆகிறான். டெர்டனின் அடையாளத்தின் கீழ் அவன் மனிதர்கள் சண்டையிட்டு பொழுதுபோக்கும் ஓர் அமைப்பை உருவாக்குகிறான். இதுவே fight club. டெர்டனாக இருக்கும் போது அவன் செய்கிற முதல் காரியமே தன் வீட்டுக்கு குண்டு வைப்பது தான்.  

நடாஷா: ஆமா they are his dissociated personalities. அவனுக்கு உள்ள மனவியாதியின் பேர் Dissociative Identity Disorder. 

கணேஷ்: இல்லையே. இது பேரு multiple personality disorder இல்லையா?

சேஷாச்சலம்: ஆமா. ஆனா multiple personality disorder என்பது Dissociative Identity Disorder என்பதோட பழைய பெயர்.

நடாஷா: சரி கணேஷ், அதென்ன beholden to?

கணேஷ்: நான் நேத்து தான் இந்த வார்த்தையை கத்துக்கிட்டேன். அதான் இப்போ உபயோகப்படுத்தலாமுன்னு நினைச்சேன். அப்போ தான் மனனம் ஆகுமுன்னு...

நடாஷா: Not a bad idea. But what does it mean actually?

கணேஷ்: beholden என்றால் ஒரு விசயத்துக்கு அல்லது ஒருவருக்கு பாத்தியதைப் பட்டிருப்பது. Bound to or indebted to something or somebody. Since he received loans for studies from his uncle, he felt obliged / beholden to him. சரியா சார்?

புரொபஸர்: ஆமா. கரெக்ட். இது ரொம்ப பழைய வார்த்தை. இப்போ இதை பயன்படுத்தும் போது இதுக்கு ஓர் அழகான இலக்கிய தொனி வந்திடுது.
சரிடா சேஷு, எனக்கு ஒரு டவுட். நீ இந்த அபார்ட்மெண்ட் பற்றி சொன்னியே அதுவும் condoவும் ஒண்ணு தானா? ஒரு விசயத்துக்கான ரெண்டு பெயர்களா அல்ல ரெண்டும் வேறு வேறு விசயங்களா?

சேஷாச்சலம்: ஆக்சுவலி, ரொம்ப பேரு ரெண்டையும் ஒண்ணு தான்னு நினைக்கிறாங்க. ஆனால் ரெண்டும் வேறு வேறு. விளக்கமாச் சொல்றேன்.

(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.