புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒரு சேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் நடாஷா என்னும் பெண்ணுடன் சேர்ந்து மருத்துவரின் அறையில் அரட்டையடிக்கிறார்கள். இந்தியர்கள் ஆங்கிலத்தைப்
பயன்படுத்துவதில் வரும் பிழைகளை சரியென நம்பி தவறான பிரயோகங்களைத் தொடர்ந்து பயன்படுத்தும் Indianism பற்றி பேச்சு திரும்புகிறது. அவர்கள் பல இந்திய ஆங்கிலத் தவறுகளைப் பற்றி விவாதிக்கிறார்கள். அப்போது To have something / somebody on one's mind என்பதற்கும் to have something / somebody in one's mind என்பதற்கும் இடையிலான வித்தியாசத்தை சேஷாச்சலம் நடாஷாவுக்கு விளக்குகிறார்.
சேஷாச்சலம்: இன்றைக்கு நான் செய்து முடிக்கிறதுக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. இவற்றில் நல்ல விசயங்களை in my mind என சொல்ல வேண்டும். I have many interesting things to do என்பதை I have many interesting things in my mind என சொல்லலாம். அதே போல நான் என் மகனைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன். அவன் என்னிடம் அன்பாக சற்று முன்பு பேசியிருப்பான். எனக்காக அக்கறையுடன் நடந்து கொண்டிருப்பான். தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருப்பான். ஒரு போட்டியில் பரிசு வென்றிருப்பான். அப்போது நான் அவனைப் பற்றி பெருமிதமாக நினைத்துக் கொண்டிருப்பேன். So I have my son in my mind. ஆனால் என் மகன் நிறைய தப்புகள் பண்ணுகிறான். பொறுப்பில்லாமல் பணத்தைச் செலவழிக்கிறான். ஹெல்மட் அணியாமல் பைக் ஓட்டுகிறான். நான் அவனைப் பற்றியே சதா கவலைப்படுகிறேன். இப்போது I have my son on my mind என சொல்கிறேன். அதாவது நெகட்டிவ்வான விசயத்துக்கு ர்ய் என மாற்றி விட்டேன். கவனித்தாயா?
நடாஷா: ஆமாம் டாக்டர்
புரொபஸர்: Beautifuly explained சேஷூ.
சேஷாச்சலம்: நன்றி. I am glad. (நடாஷாவிடம்) சரி சொல்லு do you have anything on your mind?
நடாஷா: நிறைய விசயங்கள் டாக்டர். என் எடை. எவ்வளவு முயன்றும் குறைக்க முடியவில்லை.
சேஷாச்சலம்: What is your weight?
நடாஷா: 62
சேஷாச்சலம்: உன் உயரத்துக்கு சரியான எடை தானே?
நடாஷா: இல்லை டாக்டர் I am 2 kilos overweight.
கணேஷ்: ஒவ்வொருத்தனும் 30-40 கிலோ ஓவர்வெயிட்டா இருக்காங்க. நீ வேறே...
நடாஷா: You shut up.
சேஷாச்சலம்: எனக்குப் புரியுது நடாஷா. ஆனா நீ உன்னைப் பற்றி கவலைபடுறதே நல்ல அறிகுறின்னு சொல்வேன். அதுக்காக dont fuss over your weight. You will be fine.
புரொபஸர்: சேஷூ fuss over என்கிறது அங்கு சரியான பிரயோகம் இல்லடா.
சேஷாச்சலம்: ஆமா கரெக்ட். நான் obsess over என சொல்லி இருக்கணும்.
கார்த்திக்: என்ன சார் ரெண்டுக்கும் வித்தியாசம்?
புரொபஸர்: in my mind, on my mind மாதிரி தான். ஒரு விசயம் அல்லது ஓர் ஆள் நம்முடைய ஆர்வத்தையும் பரபரப்பையும் தூண்டும் போது நாம அதிக துடிப்போட அக்கறையோட அதைப் பற்றி மட்டுமே யோசிச்சுக்கிட்டு அதையொட்டி எதையாவது செஞ்சுட்டு இருப்போம். உதாரணமா குழந்தைகள். குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்புற சில தாய்மார் சின்ன சின்ன விசயங்களில் கூட கவனம் எடுத்து ரொம்ப அதிகமா பண்ணுவாங்க. ரெட்டைப் பின்னால் சரியாக வரலேன்னா அதுக்காக ரொம்ப கவலைப்படுவாங்க. அழகுபடுத்திட்டு திருஷ்டிக்கு ஒரு பொட்டு வைக்கிறதுக்கு பத்து நிமிடம் எடுத்துப்பாங்க. அடுத்து திருஷ்டிப் பொட்டு ரொம்ப அழகாப் போயிடுச்சோன்னு கவலைப்பட்டு இன்னும் பத்து நிமிடம் லேட் பண்ணுவாங்க. இது fussing over somebody. நாம எல்லாரும் பண்ணுற இன்னொரு காரியம் புது ஆடை வாங்கின பிறகு அதைச் சரியா அணியுறோமா அது நமக்கு பொருந்துதா அதில ஏதாவது கறை பட்டுருமோன்னு யோசிச்சு பரபரப்பா இருக்கிறது. புது கார் வாங்கினவங்க அதுல யாராவது உரசிருவாங்களோன்னு பயந்து சாலையில் யோசிச்சு யோசிச்சு உருட்டிக்கிட்டு போறது கூட இது தான். You are fussing over your new apparel / dress and then someone is fussing over their newly bought car. ஆனால் ஒரு நெகட்டிவ்வான விசயம் பற்றி நிஜமாகவே கவலைப்படுறது - உதாரணமா இவளோட உடல் எடை - அது சரியாக இருந்தாலும் அது அதிகமா இருக்கிறதா தப்பா நினைச்சு புலம்புறது, இதெல்லாம் obsessing over her body weight.
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சோஃபி டிவைன் அசத்தல்: நியூஸிலாந்து வெற்றி

பல்லடம் பகுதியில் எரிவாயு உருளைகளை பதுக்கி விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஸ்வியாடெக்கின் தொடா் வெற்றிகளுக்கு லினெட் முற்றுப்புள்ளி
ஒடிஸா எஃப்சி-க்கு முதல் வெற்றி
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

