வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 208
புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள்.


புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் நடாஷா என்னும் பெண்ணுடன் மருத்துவரின் அறையில் அரட்டையடிக்கிறார்கள். அப்போது அவர்கள் put in papers Utßm put down papers ஆகிய வேலைதுறப்பு எனும் பொருள் கொண்ட சொற்றொடர்களின் நுணுக்கமான வித்தியாசம் என்ன எனும் கேள்வியை எதிர்கொள்கிறார்கள். சரி இந்த இரண்டுக்கும் தான் வித்தியாசம்? பார்க்கலாமே!
புரொபஸர்: இந்த இரண்டு சொற்றொடர்களுக்கும் என்ன வித்தியாசம்னு நினைக்கிறீங்க?
நடாஷா: ஐ திங்க் ... when you say I put in my papers formal ஆக வேலையில் இருந்து விலகுகிறேன். ஆனால் when it is I put down my papers அதன் பொருள் வேலையில் இருந்து ஜஸ்ட் லைக் தேட் விலகுவது. சரியா?
புரொபஸர்: இல்லை தப்பு.
நடாஷா: பிறகு?
புரொபஸர்: இரண்டு சொற்றொடர்களுமே இந்திய ஆங்கிலத்தில் நாமாகக் கண்டுபிடித்த பிரயோகங்கள். Native speakers அதாவது ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இப்படிச் சொல்வதில்லை. ஆனால் இதற்கு சற்றே நெருக்கமாக வரும் சரியான பிரயோகம் to hand in one’s notice. Or to give in one’s notice. அல்லாவிடில் வெறுமனே to give notice.
நடாஷா: ஆனால் என்னோட colleagues யாரும் இப்படிச் சொல்வதில்லையே?
புரொபஸர்: அதனால் தான் இந்த சொற்றொடரை ஒரு Indianism என்றேன்.
கணேஷ்: அதென்ன இந்தியனிசம்?
புரொபஸர்: இந்தியர்கள் தப்பும் தவறுமாகப் பயன்படுத்தி பயன்படுத்தி இப்போது சரி என நாம் நம்பத் தொடங்கி விட்ட அபத்தங்கள். உதாரணமாக, what is your good name?
கணேஷ்: கணேஷ்
புரொபஸர்: அப்படியென்றால் உன்னிடம் உள்ள பிற விசயங்கள் எல்லாம் கெட்டதா? பெயரில் என்ன நல்ல பெயர், கெட்ட பெயர்?
கணேஷ்: Polite ஆக சொல்வது.
புரொபஸர்: ஆமாம். ஆனால் பெயரைக் கேட்பதில் எதற்கு தயக்கம், கூச்சம் கொள்ள வேண்டும்? அதற்கு ஏன் பணிவு? அப்படி வேண்டுமெனில் could you please tell your name என சொல்லலாம். May I know your name please எனலாம். இதெல்லாம் polite தான்.
ஜூலி: I passed out of Madras Christian College last year.
சேஷாச்சலம்: ஆமாம் அதுவும் ஒரு இந்தியனிசம் இல்லையா?
புரொபஸர்: யெஸ். Pass out என்றால் மயக்கம் போட்டு விழுவது. After drinking the booze for the first time he felt nauseous and almost passed out. முதல் முதலாக மது அருந்திய போது அவருக்கு வாந்தி வருவது போல, கிட்டதட்ட மயக்கம் வருவது போல தோன்றியது. ஆனால் ஒரு கல்வி நிலையத்தில் இருந்து பட்டம் பெறுவதை graduate என சொல்ல வேண்டும். He graduated from Madras Christian College last year என்பது தான் சரி. வேறெதாவது இந்தியனிசம் நினைவுக்கு வருகிறதா யாருக்காவது?
சேஷாச்சலம்: Kindly revert back immediately after reading this...
புரொபஸர்: கரெக்ட். அது இன்னொரு இந்திய ஆங்கில பிரயோகம். Revert என்றால் முந்தின நிலைக்கு மீள்வது. To return, retrogress, regress. நான் இங்கு சொல்ல உத்தேசிப்பது Kindly respond immediately after reading this என்பதைத் தான்.
நடாஷா: நான் சமீபத்தில் ஏ.ஆர். ரஹ்மானைப் பற்றி படிக்கையில் அவர் ஒரு revert என ஒரு சொல்லைப் படித்தேன். இன்னும் நினைவில் இருந்து அகலவில்லை.
புரொபஸர்: அது ஒரு சரியான பதம் தான். Revert எனும் பெயர்ச்சொல்லுக்கு இஸ்லாத்துக்கு மதம் மாறியவர் என பொருள் வரும். அதனால் Rahman is a revert என்பது சரியே.
கணேஷ்: ஆமாம்... many years back his name was Dileep.
புரொபஸர்: அதென்ன back? Back என்றால் ஒன்று நம் முதுகு. இன்னொன்று திரும்ப செல்வது. He went back என்று சொல்லலாம். ஆனால் ஹ்ங்ஹழ்ள் க்ஷஹஸ்ரீந் என சொல்லக் கூடாது.
கணேஷ்: வேறெப்படிச் சொல்லலாம்?
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...