நாடு முழுதும் விவசாயம் புத்துயிர் பெற்று வருகிறது எனக் கூறலாம். விவசாயம்தான் இந்தியாவின் பொருளாதாரத்தின் ஆணிவேர் என பலரும் உணரத்தொடங்கிவிட்டனர். பொதுவாக அனைத்து தொழில்களுக்கும் வேலை தெரிந்த ஆள்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. இந்நிலையில் விவசாய வேலைகளுக்கும் ஆள்கள் கிடைப்பது பெரிதும் சிரமாக உள்ளது. எனவே விவசாயத்திலும் பல வேலைகளுக்கு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அவை சாதாரண விவசாயிகள் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூரைச் சேர்ந்த மூன்று பொறியியல் பட்டதாரிகள் கைகளைக் கொண்டு இயக்கி நேர்த்தியாக விதைகளை விதைக்கும் கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ஜெயகுரு, லோகுபிரசாத், ஜான்ஜார்ஜ் ஆகியோரே அந்த கண்டுபிடிப்பாளர்கள். இது குறித்து ஜெயகுரு நம்மிடம் பகிந்து கொண்டதாவது, ""நான் ஊட்டியைச் சேர்ந்தவன். அங்கு எனது தந்தை ஜெயபாலனுக்கு விவசாயநிலம் உள்ளது. சிறுவயதில் எனது தந்தையின் விவசாய வேலைகளுக்கு உதவி செய்து வந்துள்ளேன். அப்போது விவசாயிகள் என்னென்ன பிரச்னைகளை எதிர் கொள்கிறார்கள் என்பது எனக்குத் தெரிய வந்தது. பின்னர் நான் கோயம்புத்தூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்தேன். அப்போது, லோகுபிரசாத், ஜான் ஜார்ஜ் ஆகியோர் அறிமுகமானார்கள். நான்காம் ஆண்டு நாங்கள் மூன்று பேரும் இணைந்து விவசாயத்திற்குப் பயன்படும் விதைக்கும் கருவியை எனது புராஜெக்டாக எடுத்துக் கொண்டோம். அந்த புராஜெக்ட் சிறந்த புராஜெக்டாக தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து "நிதி பிரயாஸ்' என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் எங்கள் புராஜெக்ட்டிற்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி கிடைத்தது.
பின்னர் நாங்கள் மூன்று பேரும் வெவ்வேறு நிறுவனங்களில் வேலைக்குச் சென்றுவிட்டோம். எனினும் தொடர்பில் இருந்தோம். வேலைக்குச் சேர்ந்து சுமார்ஒன்றரை ஆண்டு காலம் கழித்து மூவரும் சந்தித்தோம். அப்போது நாம் மூவரும் இணைந்து ஏன் சுய தொழில் தொடங்கக் கூடாது என பேசினோம். நாங்கள் கல்லூரியில் புராஜெக்டாக எடுத்துக் கொண்ட விதைக்கும் கருவியை ஏன் தயாரித்து சந்தைப்படுத்தக்கூடாது என எண்ணிணோம். இதையடுத்து மூவரும் இணைந்து ரோவர் பிராண்டு என்ற பெயரில் கோயம்புத்தூரில், நவீன விதைக்கும் கருவியைத் தயார் செய்து சந்தைப்படுத்த தொடங்கினோம்.
இந்தியாவில் துல்லியமாக விதைப்புக்காக தயாரிக்கப்பட்ட முதல் கருவி எங்களது தயாரிப்பாகும். ஒரு கிலோ காரட் விதை ரூ. 40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை உள்ளது. இதனை வேலையாள்களை கொண்டு விதைத்தால் ஒரு ஏக்கருக்கு 14 ஆள்கள் தேவைப்படும். ஒருவர் நிலத்தில் கோடு போட வேண்டும். ஒருவர் அதில் விதையைப் போட வேண்டும். ஒருவர் அதை மூட வேண்டும் என மூன்று பேர் வேலை செய்ய வேண்டும். மேலும் ஓர் ஏக்கர் நிலத்தில் விதைக்க இரு நாள்கள் ஆகும். எங்கள் கருவி மூலம் விதைத்தால் ஒரே நாளில் விதைத்து விடலாம். விதைகள் சேதாரம் இன்றி, முறையாக பயளனிக்கும் விதமாக விதைக்கலாம். எங்கள் கருவிக்கு எரிபெருள் தேவையில்லாதால் சூற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது. இந்தக் கருவியை ஒருவர் தள்ளிக் கொண்டு செல்ல வேண்டும். ஒருவர் இழுத்துக்கொண்டே செல்ல வேண்டும். இதன் மூலம் நேர்த்தியாக விதைக்கலாம். மலைப்பகுதி மற்றும் சமவெளி என எங்கே வேண்டுமானாலும் இதனைப் பயன்படுத்தலாம்.
கேரட், முள்ளங்கி, பீட்ரூட், உளுந்து, மிளகாய் என எந்த விதைகளையும் விதைக்கலாம். இதன் எடை சுமார் 20 கிலோவாகும். எனவே இலகுவாக எங்கும் கொண்டு செல்ல முடியும். தற்போது இந்தக் கருவி குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்து வருகிறோம்.
எங்கள் கருவி மூலம் விதைக்க விவசாயிகள், அறுவடை செய்யும் போது காரட் உள்ளிட்டவை விளைச்சல் ஒரே மாதிரியான அளவு அதாவது ஒரே சைஸில் உள்ளது என கூறியுள்ளார்கள். விலை குறைவாக உள்ளதால் சிறிய விவாசாயிகளும் இதனைப் பயன்படுத்தலாம். இளைஞர்கள் இதனை வாங்கி கிராமங்களில் வாடகைக்கு என வைத்துக் கொண்டு விதைக்கலாம் . இதன் மூலம் விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைப்பதில்லை என்ற நிலை மாறிவிடுவதோடு, விளைச்சலும் நன்றாக இருக்கும் . இதையடுத்து தற்போது நாங்கள் மூவரும் , இலகுவாக நவீன முறையில் அறுவடை கருவிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்'' என்றார் ஜெயகுரு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிக்க வசதியாக... 4 இடங்களில் இருந்து 11,323 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

கர்ப்பிணி பெண்களுக்கு Paracetamol மாத்திரை ஆபத்தா? | அறிவியல் ஆயிரம் | Health Care

சிறப்பான ஃபார்மில் இருக்கும் அபிஷேக் சர்மா..! டாப் 4 இடத்தைப் பிடிக்கப்போவது யார்?

பிரதமர் மோடி தீவிரவாதியா? கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும்!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


