இணைய வெளியினிலே...
காய் விடுவதையும் பழம் விடுவதையும் விரல்களிலேயே வைத்திருக்கிறார்கள் குழந்தைகள்...நாம்தான் மனங்களில் வைத்திருக்கிறோம்.


முக நூலிலிருந்து....
காய் விடுவதையும் பழம் விடுவதையும் விரல்களிலேயே வைத்திருக்கிறார்கள் குழந்தைகள்...
நாம்தான் மனங்களில் வைத்திருக்கிறோம்.
சத்தியம்
வார்த்தைகளால் சொல்லும் பதில்களை விட,
வாழ்க்கையால் சொல்லும் பதில்களே... வலிமை வாய்ந்தவை.
மகேஸ்வரி சிவா
மழை ஓய்ந்ததும் இலைநுனியில் மெல்லக் கசிகிறது ஓர் உயிர்த்துளி!
வதிலை பிரபா
எந்தத் தோல்வியும் கேலிக்கு உரியதல்ல...
திருத்தமான அடுத்த முயற்சிக்கு வித்து.
ராஜபார்வை
நேற்றிரவு நரகம்... இன்று இரவு சொர்க்கம்...
நாளை நல்லபடியோ, கெட்டபடியோ,
வருநாளெல்லாம் திருநாளென்ற கனவில்,
ஒரு நாளுக்காக ஒவ்வொரு உயிரும்,
வெறும் நாள்களை வாங்கி வைத்தபடி.
-விக்ரமாதித்யன்
இந்நதிக்குத்தான் எத்துணை ஞானம்...
தன் தன்மை இழக்காதிருக்க
எவ்விடரிலும் தேங்கிடாமல்
கடலிலக்கை நோக்கிச்
சென்று கொண்டிருப்பதொன்றே
வழியென்பதை
அறிந்திருக்கிறது.
கிருதி
எத்தனையோ மூடநம்பிக்கைகள்;
அத்தனையிலும் கொடியது...
"நான் நேசிக்கப்படுகிறேன்' என்பது.
மிருகம்
சில அரிதாரங்களைப்
பூசி மகிழ்வதும்...
சில அரிதாரங்களைப்
பூச மறுப்பதுமே...
வாழ்க்கை.
சின்னகொம்பன்
அன்பை உணர வைப்பதற்குத் தான்
நீண்ட நாட்கள் தேவைப்படுகின்றன.
வெறுப்பை சில நொடிகளிலே உணர்த்திவிடுகிறோம்!
பூந்தோட்டம்
ஆழ்ந்த உறக்கத்தில் மட்டுமல்ல, நாம் விழித்திருக்கும் போதும் நமக்குள் எழும் எண்ணங்களை அப்படியே உண்மை என நம்பும் ஆழ்மனம், அதற்கான விளைவுகளை நம் உடலில் ஏற்படுத்துகிறது. எப்படி ஒரு கனவை நாம் விழிப்போடு வெறும் கனவு தான் அது என உணரும் போது நம் உடலும் மனமும் நிதானத்திற்கு வருகின்றனவோ, அது போல் நமது மனத்தில் எழும் வேண்டாத எதிர்மறை எண்ணங்களையும் நாம் விழிப்புடன் கையாண்டால், அதிலிருந்து மீண்டு மனம் அமைதிப்படும். எதிர்மறை எண்ணங்களுக்குள்ளேயே மூழ்கினால் மனம் மகிழ்ச்சியற்றுத் தவிக்கிறது.
வாழ்க்கையின் எந்த நடப்பும் நமது நம்பிக்கையைச் சார்ந்தே உள்ளது. ஆழ்மனத்திற்குள் முடிந்தவரை நல்ல சிந்தனைகளைப் புகுத்தினால், நம்மைச் சுற்றிலும் நல்ல சூழலை அமைத்துக் கொண்டால், எதிர்மறையான விஷயங்களை முடிந்தவரை தவிர்த்தால் நல்லது. இன்றைய பரபரப்பான சூழலில் இது முற்றிலும் சாத்தியமில்லை என்றாலும் இவை நம் ஆழ்மனத்தைப் பாதிக்க விடாமல் தற்காத்துக் கொள்வது நம் கைகளில் தான் இருக்கிறது.
எந்த ஓர் எதிர்மறை நிகழ்வையும் கடக்கும்போது அதை பயமாக, ஓர் உணர்வுப்பூர்வமான பிரச்னையாக மட்டும் கொள்ளாமல், அதன் தர்க்கபூர்வமான அடிப்படைகளைப் பார்த்து, பிரச்னைக்கான தீர்வையும் சேர்த்து யோசிப்போம்.
எந்தப் பிரச்னையிலும் தீர்வுகளை அலசாமல், "எனக்கு எதுவும் சரியாக நடப்பது இல்லை'என்று நாம் சொன்னால், "சரியாக இல்லை' என்று நாம் கூறும் விஷயங்களையே மனம் தேடிப் பிடிக்கிறது. உண்மையில் நம் எண்ணங்களே நம்மை உருவாக்குகின்றன.
http://www.poornachandran.com/
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...