தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஜாவா

கணிப்பொறி அமைப்பில் பயன்படுத்தப்படும் மின்சுற்றுக்கள் வாயில்கள் (கேட்ஸ்)  என்றே அழைக்கப்படுகின்றன.  இவற்றை வாயில்கள் என்று அழைப்பதேன்?  

News image
Updated On :3 நவம்பர் 2020, 12:30 am

DIN


கணிப்பொறி அமைப்பில் பயன்படுத்தப்படும் மின்சுற்றுக்கள் வாயில்கள் (கேட்ஸ்)  என்றே அழைக்கப்படுகின்றன.  இவற்றை வாயில்கள் என்று அழைப்பதேன்?   இவை தேவையானபோது திறந்தும், மூடியும் சமிக்ஞைகளின் பாதைக்கு வழிவிடும் திறன் கொண்டிருப்பதாலேயே வாயில்கள் என்று பெயர் பெறுகின்றன.   வாயில் மின்சுற்றுகளில் பல்வேறு வகைகளில் குறிப்பிடத்தக்கவை - உம் (அண்ட்) மின்சுற்றுக்கள், அல்லது (ஆர்) மின்சுற்றுக்கள், உம்மில்லை (என்அண்ட்) மின்சுற்றுக்கள், இதுவுமில்லை (என்ஓஆர்) மின்சுற்றுகள் என்பது பிறிதொரு கணிப்பொறியாளர் மொழி நடை. (இராம்குமார், கணிப்பொறி ஓர் அறிமுகம்)


மாணவர்களுக்குரிய கணினிமொழிப் பயன்பாட்டு நடைக்கு  ஓர் எடுத்துக்காட்டு: ஜாவா.  ஜாவா என்பது  இன்டர்நெட்டின் ஆர்டிபிஎம்எஸ்-க்கு அடிப்படையாகும்.  நாம் டிபேஸிலோ, பாக்ஸ்புரோவிலோ, நாம் செயல்படுத்தும் டேட்டாவிற்கு வேண்டிய  ரோ, காலம், ஃபீல்ட்,  ரிக்கார்ட் என செயலாக்குவதுபோல இன்டர்நெட்டிலும் ஜாவா புரோக்கிராமிங் மூலமாக  டேட்டா பேஸ் செய்து கொள்ளலாம். 

ஜாவா புரோக்கிராமிங் அனிமேஷன் வேண்டுமானால் ஜாவா ஆப்லெட்டையும், டைப்பிங் தவறுகளைக் குறிப்பிட ஜாவா ஸ்கிரிப்டையும் இச்சாஃப்ட்வேருக்குள் நாம் பொருத்திக் கொள்ளலாம்.  சி++, விசுவல்,  பாக்ஸ்புரோ போல எண்ணற்ற டேட்டாபேஸ் சாஃப்ட்வேருக்குள் நாம் இன்டர்நெட் மூலமாக டைப் செய்யும் டேட்டாக்களை நேரிடையாகப் பொருத்திக் கொள்ளலாம். (இணையக் கல்வி - "கணிப்பொறித்துறையில் இன்டர்நெட் குறித்த படிப்புகள்',  கம்ப்யூட்டர் உலகம், ஜனவரி-99)
நெல்லை சு.முத்து எழுதிய "மெய்ப்பொருள் காண்பது அறிவியல்'  என்ற நூலிலிருந்து...
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.