தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வாட்ஸ்ஆப்... புதுசு புதுசாய்!

தகவல்களை உடனடியாகப் பல்வேறு வகையில் பரிமாற்றம் செய்ய வாட்ஸ் ஆப் உதவுகிறது.

News image
Updated On :3 நவம்பர் 2020, 12:30 am

DIN

தகவல்களை உடனடியாகப் பல்வேறு வகையில் பரிமாற்றம் செய்ய வாட்ஸ் ஆப் உதவுகிறது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இணைய வழி உதவியுடன் வாட்ஸ்ஆப் தகவல்கள் சட்டெனச் சென்றடைகின்றன. இதில் கால மாற்றத்துக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களை வாட்ஸ்ஆப் செய்து வருகிறது.  தற்போது வாட்ஸ்ஆப் சாட்களில் வரும் தகவல்களை எச்சரிக்கை செய்யும் ஒலியை எப்போதும் நிறுத்தி வைக்கும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.

வழக்கமாக, வாட்ஸ்ஆப் சாட்டின் எச்சரிக்கை ஒலியை 8 மணி நேரம் அல்லது 1 வாரம் அல்லது 1 ஆண்டுக்கு நிறுத்தி வைக்க முடியும். இந்தக் காலக்கெடு முடிந்தவுடன் எச்சரிக்கை ஒலி தானாக ஒலிக்க ஆரம்பித்துவிடும்.

இதனால் ஒருவரின் வாட்ஸ்ஆப்பில் உள்ள ஏராளமான குழுக்களில் புதிய தகவல் வந்தால் அறிதிறன்பேசியில் எச்சரிக்கை ஒலி,  ஒலித்துக் கொண்டே இருக்கும். இதைத் தடுக்க சிலர் தங்களது அறிதிறன்பேசியின் ஒலியையே நிறுத்தி வைப்பதும் உண்டு. தற்போது வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்துள்ள "மியூட் ஆல்வேஸ்' என்ற சேவை,  ஏராளமான குழுக்களை வைத்திருப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். இந்த சேவையை "வாட்ஸ்ஆப் வெப்'பிலும் பெறலாம் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேபோல், "வியூ ஓன்ஸ்' என்ற புதிய சேவையின் மூலம், புகைப்படங்களை ஒரே முறை காணும் வசதியையும் வாட்ஸ் ஆப் விரைவில் தொடங்க உள்ளது. "வியூ ஓன்ஸ்' என்பதை தேர்வு செய்து அனுப்பப்படும் புகைப்படங்களை சம்பந்தப்பட்டவர் தனது சாட்டில் பார்த்துவிட்டு வெளியே வந்துவிட்டால் தானாக அழிந்துவிடும். 

மேலும், ஒவ்வொரு சாட்டுக்கும் தனித்தனியாக பின்னூட்ட புகைப்படங்கள் (வால்பேப்பர்கள்) வைக்கும் புதிய சேவையை வாட்ஸ் ஆப் தொடங்க  உள்ளது.

அதேபோல், ஒரே வாட்ஸ்ஆப் கணக்கை அறிதிறன்பேசி, டேப் உள்ளிட்ட   நான்கு கருவிகளில் பயன்படுத்தும் சேவையும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மேலும், வாட்ஸ்ஆப்பிலேயே பொருள்களை வாங்கும் புதிய சேவையையும் தொடங்கும் முயற்சியில் அந்த நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பொதுவாக இணையம் வழியாக ஒரு பொருளை வாங்க வேண்டுமென்றால் வாட்ஸ்ஆப்பில் வரும் இணைதளத்தின் லிங்க்கை வைத்து பணத்தைச் செலுத்திப் பெற வேண்டும். ஆனால், இந்த புதிய சேவையின்படி பொருள்களுக்கான கட்டணத்தை "ஃபேஸ் புக் பே' யில் செலுத்தும் புதிய சேவையையும் தொடங்கி, வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வாட்ஸ் ஆப் முயற்சி எடுத்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.