தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புதிய வடிவில் ஃபார்ம் வில்லி!

இன்றைய நவீன உலகில் எல்லாருக்கும் உழுது பயிரிட்டு அறுவடை செய்ய ஆசைதான்.

News image
Updated On :6 அக்டோபர் 2020, 12:30 am

அ. சர்ஃப்ராஸ்

இன்றைய நவீன உலகில் எல்லாருக்கும் உழுது பயிரிட்டு அறுவடை செய்ய ஆசைதான். ஆனால் அனைவராலும் அதற்கு தேவையான இடத்தையோ, கடின உழைப்பையோ, பொருள் செலவையோ செய்ய முடிவதில்லை. அதனால் அந்த ஆசை கிடப்பில் போடப்படுகிறது. இப்படிப்பட்ட ஆசையை கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஃபேஸ்புக்கில் தொடங்கப்பட்ட "ஃபார்ம் வில்லி" விளையாட்டு பூர்த்தி செய்து வந்தது.

2009-இல் ஆண்டில் இருந்தே இந்த விளையாட்டு உலகம் முழுவதும் பிரபலமானது. உங்களுக்கான நிலத்தை உழுது, பிடித்த பயிர்களை பயிரிட்டு அந்தப் பயிர்களுக்கு தண்ணீர், உரங்களிட்டு அறுவடை நேரத்துக்காகக் காத்திருக்க வேண்டும். அதேபோல், உங்கள் நிலத்தில் மரங்களை வளர்த்தும், கோழி, கால்நடைப் பண்ணைகள் வைத்தும் அதிலிருந்து கிடைக்கும் பணத்தை வைத்து மேலும் பயிரிட இடத்தை வாங்கி, விவசாயப் பண்ணையைப் பெருக்கி செல்வதுதான் இந்த விளையாட்டின் சிறப்பாகும்.

தற்போது பிரபலமாக இருக்கும் வீடியோ கேம்களில் உள்ளதைப்போல் எந்தவித வன்முறையோ, கொடூர தாக்குதல்களோ இந்த "ஃபார்ம் வில்லி" விளையாட்டில் இல்லை. விளைச்சலால் விவசாயிகள் பெறும் இன்பத்தை கணினியின் மூலம் இந்த விளையாட்டு அளித்து வந்தது.

"ஃபார்ம் வில்லி" தொடங்கப்பட்டபோதே 8 கோடிக்கும் மேற்பட்டோர் இந்த விளையாட்டில் அங்கம் வகித்தார்கள். அப்போது இண்டர்நெட் விளையாட்டில் அதிக அளவு விளையாட்டாளர்களைக் கொண்டிருந்த ஒரே விளையாட்டு என்ற பெறுமையும் இதற்கு உண்டு.

இந்த விளையாட்டை இணையதளத்தில் விளையாட "பிளாஷ் பிளேயர்" தொழில்நுட்ப உதவியை நிறுத்துவதாக அடோப் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆகையால்,  "ஃபார்ம் வில்லி" இணையதள விளையாட்டு வரும் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்த விளையாட்டில் விலங்குகள், பொருள்கள் வாங்குவது நவம்பர் 17-ஆம் தேதியுடன் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல கூகுள் குரோம், மைக்ரோசாப்ட் எட்ஜ், மொசில்லா பயர்பாக்ஸ், ஆப்பிள் சஃபாரி ஆகிய இணையதள புரெüசர்கள், பிளாஷ் தொழில்நுட்ப உதவியை டிசம்பர் மாதம் முதல் நிறுத்த உள்ளனர். இதனால் "ஃபார்ம் வில்லி" போன்ற ஏராளமான இணையதள விளையாட்டுகள் 2020, டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகின்றன.

எனினும், "ஃபார்ம் வில்லி' விளையாட்டுப் பிரியர்களுக்கு நற்செய்தியாக இந்த விளையாட்டு ஸ்மார்ட் போன் ஆப் வடிவில் விரைவில் வெளியிடப்படும் என இந்த விளையாட்டை அறிமுகம் செய்த ஜிங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.