அமெரிக்காவின் அப்பல்லோ 11 விண்கலம்தான் மனிதர்களை முதலில் நிலவுக்குக் கொண்டு சென்றது. 1969-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி அந்த விண்கலம் மூலம் சென்று நீல் ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்டிரினும் நிலவில் தரையிறங்கினர். அப்பல்லோ 11 விண்கலம் நிலவில் தரையிறங்கிய இடத்துக்கு "அமைதித் தளம் என அமெரிக்கா பெயரிட்டுள்ளது. எதிர்காலத்தில் நிலவுப் பயணத்தின்போது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதித் தளம் என்ற அந்த இடத்தில் அத்துமீறல் கூடாது, அந்த இடத்தில் எந்தவிதமான பொருள்களையும் விட்டுச் செல்லக் கூடாது. ஏற்கெனவே பிற நாடுகளால் அனுப்பப்பட்டு ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள ரோவர்களுக்கு இடையூறு செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்களைக் கொண்ட உடன்படிக்கையை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.
2024-இல் ஆர்டிமிஸ் விண்கலம் மூலம் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை நாசா மேற்கொண்டுள்ளது. அதையொட்டி, 1967-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வெளிப் பகுதி உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்டு இப்போது வெளியிடப்பட்டுள்ள உடன்படிக்கைக்கு ஆர்டிமிஸ் உடன்படிக்கை எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இத்தாலி, ஜப்பான், லக்ஸம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன் ஆகிய 8 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
இதில் மேலும் பல நாடுகள் கையெழுத்திடும் என எதிர்பார்ப்பதாக நாசா நிர்வாகி ஜிம் பிரைடன்ஸ்டைன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வரலாற்றில் மனித விண்வெளிப் பயணத் திட்டத்துக்கான மிகப்பெரிய கூட்டணியாக இது இருக்கும். எதிர்காலத்தில் மனிதர்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் திட்டத்துக்கும் வழிவகுக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
""நிலவுக்கு விண்வெளி வீரர்களுடன் செல்வது முக்கியமல்ல, அங்கு சில பண்புகளுடன் நாம் நடந்துகொள்வது அவசியம்'' எனக் குறிப்பிட்டுள்ளார் நாசாவின் சர்வதேச உறவுக்கான செயல் தலைவர் மைக் கோல்டு. விதிமுறைகள் என்னென்ன?
1) அனைவரும் நிம்மதியாக வரவேண்டும்.
2) ரகசியம் தடை செய்யப்பட்டுள்ளது. நிலவுக்கு அனுப்பப்படும் விண்கலத்தில் உள்ள அனைத்துப் பொருள்களும் அடையாளம் கண்டு பதிவு செய்யப்பட
வேண்டும்.
3) விண்வெளி வீரர்களுக்கு ஆபத்து ஏற்படும் நேரத்தில் அனைத்து உறுப்பு நாடுகளும் பங்களிக்க வேண்டும்.
4) விண்வெளி அமைப்புகள் உலகளாவியதாக இருக்க வேண்டும். ஆதலால் அனைத்துத் தகவல்களும் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும்.
5) நிலவில் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டுள்ள வரலாற்றுத் தளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கு இடையூறான எந்தப் பொருளும் முறையாக அகற்றப்பட வேண்டும்.
6) ரோவர்கள் மற்றும் பிற விண்கலங்கள் நெருக்கமாக வருவதன் காரணமாக அவற்றின் பணிகள் பாதிக்கப்படக் கூடாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


