மெட்டை இசைத்தால்... பாடலைக் கண்டுபிடிக்கலாம்!
மனதில் ஒலிக்கும் பாடலின் மெட்டை வைத்து அந்த பாடலின் வரியைக் கண்டுபிடிக்க முடியாமல் பலர் சிரமப்பட்டிருப்பார்கள்.


மனதில் ஒலிக்கும் பாடலின் மெட்டை வைத்து அந்த பாடலின் வரியைக் கண்டுபிடிக்க முடியாமல் பலர் சிரமப்பட்டிருப்பார்கள்.
பாடலின் வரியைத் தேடினால்தான் அதை வைத்து பாடலைக் கண்டுபிடித்துக் கேட்க முடியும் என்பதால் பாடல் பிரியர்களுக்கு இது ஒரு பெரும் சவாலாகவே இருந்தது.
பெரும்பாலும் அறிதிறன்பேசிகளை பாடல்களைக் கேட்கத்தான் பலர் பயன்படுத்துகின்றனர்.
அதிலும் பல விதமான பாடல்களைச் சேமித்து வைத்து நேரத்துக்கு ஏற்ப பொழுதைக் கழித்து மனதை அமைதிப்படுத்தவும் செய்கின்றனர். அதிலும், உள்மனதில் ஒலிக்கும் சில பாடல்களை இணையதளத்தில் தேடுவதற்கு பாடல் வரியைத் தேடி குழம்பிக் கொண்டிருப்பார்கள். இப்படி குழம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு கூகுள் நிறுவனம் புதிய சேவையைத் தொடக்கி உள்ளது.
கட்டளையிட்டால் தேடலைத் தொடங்கும் "கூகுள் வாய்ஸ் சர்ச்'சைப் போன்று பாட்டின் மெட்டை வாயால் இசைத்தோ, விசில் அடித்தோ 10 முதல் 15 வினாடிகளுக்குப் பாடினால் போதும், கூகுள் அந்தப் பாட்டைத் தேடிக் கண்டுபிடித்து உங்கள் அறிதிறன்பேசியில் கொண்டு வந்து நிறுத்திவிடும்.
இந்தச் சேவையைப் பெற முதலில் உங்கள் அறிதிறன்பேசியில் உள்ள கூகுளை "லேடஸ்ட் வெர்ஷ'னுக்கு அப்டேட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் கூகுள் தேடலில் உள்ள "மைக்ரோபோன்'-ஐ தட்டி நீங்கள் தேட விரும்பும் பாடலின் மெட்டை இசைக்க வேண்டும்.
"கூகுள் அஸிஸ்டன்' செயலியைப் பயன்படுத்துவராக இருந்தால் "ஹே கூகுள் வாட்ஸ்திஸ் சாங்க்' என்று கூறிவிட்டு பாட்டின் மெட்டை இசைத்தால் அந்த மெட்டுக்கு உள்ள பாட்டுகளைக் கூகுள் காண்பிக்கும். அதில் இருந்து உங்களின் மனதில் ஒலித்த பாட்டைத் தேர்ந்தெடுத்துவிடலாம்.
இந்தச் சேவை கூகுளின் பிரத்யேக அறிதிறன்பேசியான பிக்ஸலில் ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.
எனினும், தற்போது உலகம் முழுவதும் பயன்படுத்தும் கூகுள் தேடலில் இந்தச் சேவையை கூகுள் அளித்துள்ளது.
முதலில் 20 மொழிகளில் இந்தச் சேவையைத் தொடங்கியுள்ள கூகுள் விரைவில் பல மொழிகளை இணைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...