தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பல சேவைகள்...  ஒரே செயலி!

மத்திய அரசின் பல்வேறு அரசு துறைகளின் சேவைகள் "உமாங்' என்ற ஒரே செயலியின் மூலம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :27 அக்டோபர் 2020, 6:00 am IST

மத்திய அரசின் பல்வேறு அரசு துறைகளின் சேவைகள் "உமாங்' என்ற ஒரே செயலியின் மூலம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
மத்திய, மாநில அரசுகளின் 158 துறைகள், 1987 எண்ணிக்கை சேவைகள் "உமாங்'  (யுனிஃபைட் மொபைல் அப்ளிகேஷன் ஃபார் நியூ - ஏஜ் கவர்னன்ஸ்)   செயலியின் மூலம் பெறலாம்.  மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் 
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி அமைச்சகத்தின் நேஷனல் இ-கவர்னன்ஸ் பிரிவால் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.  அனைத்து இந்திய குடிமக்களும் இந்த ஒரே செயலி மூலம் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு சேவைகளை செல்லிடப் பேசி மூலம் பெறலாம்.   
வீட்டில் அமர்ந்த இடத்திலிருந்தே கையில் உள்ள செல்லிடப்பேசி மூலம் அரசு சேவைகளைப் பெற இந்த செயலி உதவுகிறது.  தகவல் தொழில்நுட்ப வளர்சிக்கு ஏற்ப அரசின் பல்வேறு திட்டங்கள், சேவைகளைப் பற்றி செல்லிடப்பேசி மூலம் தெரிந்து கொள்ளவும், அதன் மூலம் பயன் பெறவும் இச்செயலி உதவியாக உள்ளது.
இந்தச் செயலி குறித்த மேலும் 
விவரங்களுக்கு: https://web.umang.gov.in/landing/ என்ற லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.