47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நீர் மேலாண்மைக்கு ஒரு வலைதளம்!

நீர்மேலாண்மை நாட்டின் பொருளாதார வளச்சிக்கும், வறுமை ஒழிப்புக்கும் அவசியமானதாகும்.  

News image
Updated On :8 செப்டம்பர் 2020, 12:30 am

எஸ்.​ பால​சுந்​த​ர​ராஜ்

நீர்மேலாண்மை நாட்டின் பொருளாதார வளச்சிக்கும், வறுமை ஒழிப்புக்கும் அவசியமானதாகும். இதற்கு தீர்வு காண்பதே நீர் மேலாண்மையாகும்.
குளம், குட்டை, கண்மாய். ஊருணி உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரி, ஆழப்படுத்துவது, கிராமங்களில் புதிய ஏரியை அமைப்பது, நீர்பாசன வாய்க்கால்களைச் செப்பனிடுதல், மேலும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளை உருவாக்குவது நீர்மேலாண்மை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும்.
கிராமங்கள் தோறும் விவசாயிகளை இணைத்து ஆலோசனை மையம் உருவாக்குவது, நீர் சேமிப்பு பயிற்சி, நீரை சரியாக உபயோகப்படுத்துவது, நீர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி அளிப்பது ஆகியவையும் நீர்மேலாண்மையாகும்.
இந்த நீர் மேலாண்மைக்கு , புதிய வலைதளம் ஒன்றை உருவாக்கி, இந்திய அளவில் முதல் பரிசு பெற்றுள்ளனர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி மெப்கோ சிலங் பொறியியல் கல்லூரி மாணவர்கள். இக்கல்லூரியைத் சேர்ந்த ஏழு மாணவர்கள் சேர்ந்து "ஹைட்ரோ ஹாக்ஸ்' என்ற பெயரில் வழிகாட்டியாக இரு பேராசிரியர்களைக் கொண்டு குழு அமைத்து நீர்மேலாண்மைக்குப் புதிய வலைதளத்தை
உருவாக்கி, இந்திய அளவிலான போட்டியில் முதலிடம் பெற்று ஒரு லட்சம் ரூபாய் பரிசு பெற்றுள்ளனர். இது குறித்து அக்கல்லூரி முதல்வர்எஸ்.அறிவழகன் நம்மிடம் பகிர்ந்துகொண்டதாவது:

""நீர்மேலாண்மைத்துறையை மேம்படுத்தும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டி 2017-ஆம் ஆண்டு முதல் கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. 2019-2020-ஆம் ஆண்டிற்கான போட்டி ஆகஸ்ட் முதல் தேதி முதல் மூன்றாம் தேதிவரை இணையவழியில் நடைபெற்றது. இதில் இந்தியாவில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில், பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்மற்றும் ஐ4சி ஆகியவற்றின் சார்பில் ஏற்பாடு செய்யப்படுகிறது.

புதிய மென்பொருள் உருவாக்குதல் போட்டியில் எங்கள் கல்லூரி மாணவர்கள் வி.விஷ்ணு பிரியா, எம்.சூரியபுஷ்பா, ஜி.சூரிய மூர்த்தி, எஸ்.எல். நாராயணன், எஸ்.சிவசஞ்சீவி, எஸ்.லாவண்யா ஆகிய 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு போட்டியில் கலந்து கொண்டது. இவர்களுக்கு வழிகாட்டியாக பேராசிரியர்கள் ஜி.பிரியங்கா, என்.உமாகாந்த்ஆகியோர் செயல்பட்டனர்.

இக்குழுவினர் மத்திய அரசின் நீர்வளத்துறையின் கீழ் இயங்கும், நீர்பாசன ஆணையம் அளித்த நேரடி தகவல் சேகரிப்பு வாயிலாக "நீர்மேலாண்மை மேற்கொள்ளுதல்' என்ற தலைப்பை எடுத்துக்கொண்டு நீர் கணக்கீடு முறை என்ற படைப்பை காட்சிப்படுத்தி அதற்கு இந்திய அளவில் முதல் பரிசாக ரூ. 1 லட்சம் கிடைத்துள்ளது.
நீர்மேலாண்மை என்பது விவசாயத்திற்கு இன்றியமையாததாகும்.
விவசாயிகள் எவ்வளவு நீர் கொண்டு சாகுபடி செய்கிறார்கள் என்பதை அறிந்தால்தான் ஓர் ஊரின் நீர் தேவையை அறிவது எளிதாகும். இதனை மையமாக வைத்து எளிமையாக விவசாயிகளும், நீர் மேலாண்மை வாரிய அதிகாரிகளும் உபயோகப்படுத்துவதற்கு வசதியாக ஒரு வலைதளத்தை மாணவர்கள் உருவாக்கினார்கள்.
இந்த வலைதளம் அமைக்கப்படும் போது மழைப்பொழிவு, மண்வகை, நீர் தேக்கங்களில் உள்ள நீர் இருப்பு, அந்தப் பகுதியில் பயிரிடப்படும் பயிரின் தன்மை போன்ற பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டது.
இந்த வலைதளத்தில் கடந்த நூறு ஆண்டுகளில் பெய்துள்ள மழைப் பொழிவு, இந்தியாவில் உள்ள மாவட்ட வாரியாக பயிரிடப்படும் பயிர்வகைகள், அவற்றின் அறுவடைக் காலம், நீர் தேவை குறித்த விவரங்கள் தாலுகா வாரியாக உள்ள அனைத்து நீர்நிலைகளின் நீர் இருப்பு விவரங்கள் உள்ளன. வரைபடங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த விவரங்களை விவசாயிகள் இணையதளம் அல்லது கைபேசி குறுஞ்செய்திகள் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நீர் வாரிய அதிகாரிகளுக்கும் தேவையான தகவல்கள் இதில் உள்ளன. இதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு அவர்கள் பரிந்துரைகளை வழங்க இயலும். இந்த வலைதளத்தை அனைவருக்கும் பயன்படும் வகையில் மாணவர்கள் உருவாக்கியுள்ளார்கள். இந்த வலைதளத்தைப் பயன்டுத்தி இந்தியாவில் விவசாயத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லலாம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.